முதல் முயற்சியிலேயே ஜெயித்த பாக்யா இனி கோபியின் ஆட்டம் அவ்வளவுதான்..! விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்.

baakyalakshmi
baakyalakshmi

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு குடும்பத்தில் வறுமை எட்டி பார்க்கிறது அதனால் பண பிரச்சனை வருகிறது கரண்ட் பில் ஸ்கூல் பீஸ் குடும்ப செலவு என மிகப் பெரிய பட்ஜெட் தேவைப்படுகிறது வழக்கம்போல் பாக்கிய பதறுகிறார். எப்படியாவது போட்ட சபதத்தில் ஜெயிக்க வேண்டும் அனைத்து செலவையும் பார்க்க வேண்டும் என நினைக்கிறார் இதையெல்லாம் தெரிந்து கொண்ட கோபி போன் செய்து பாக்கியாவை கிண்டல் செய்கிறார்.

போட்ட சபதம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் பில்லை மொத்தமாக அனுப்பு செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என கோபி நக்கலாக கூறுகிறார். ஆனால் பாக்யாவின் தன்மானம் விட்டுக் கொடுக்கவில்லை மொத்த செலவையும் பார்க்க கோபிக்கு சரியான பதிலடி தர ஒரு வருடத்தில் போட்ட சபதத்தில்  ஜெயிக்க வேண்டும் ஏதாவது பெரிய பிசினஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார்.

அதனால் பாகியா இனி கல்யாண ஆர்டர் எடுத்து சமைக்கலாம் என முடிவு செய்கிறார் அதற்கு ஒரு இடத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது அதில் பாக்யா கலந்து கொள்கிறார் அதற்காக ஜெனியும் எழிலும் சப்போர்ட் செய்கிறார்கள். பயோடேட்டா என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் அளவிற்கு தான் பாக்கியா இருக்கிறார் ஆனால் தனது சமையல் உழைப்பை நம்பி நம்பிக்கையோடு போட்டியில் கலந்து கொள்கிறார் 15 நிமிடத்தில் சூப்பரான டிஷ் செய்து அசத்துகிறார்.

ஆனால் பாக்யா ஆர்டர் கேட்டு வந்த தொழில் அதிபர் சந்திரசேகர் தொழிற்சாலைக்கு ஏற்கனவே ஒருமுறை சமைத்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்கியுள்ளார் அதனால் பாக்யவை பார்த்ததும் சந்தோஷத்தில் சந்திரசேகர் விசாரிக்கிறார் கடைசியில் பார்த்தால் அவரின் ஐந்து திருமண மண்டபத்திற்கும் கேட்டரிங் செய்வதற்காக தான் இந்த நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது போட்டியில் பாக்கிய ஜெயித்தாலும் போதிய ஆள் வேலை செய்யவில்லை என்பதால் சந்திரசேகர் தயக்கம் காட்டுகிறார் ஆனால் பாக்கியாவிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்.

பாக்யா சந்திரசேகரிடம் அப்படி இப்படி பேசி சந்திரசேகர் மனதை மாற்றுகிறார் கடைசியாக பாக்யாவிற்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார் 200 பேர் பார்ட்டியில் கலந்து கலந்து கொள்கிறார்கள் முதலில் அவர்களுக்கு சமைத்துக் காட்ட வேண்டும். அதன் பிறகு முடிவு எடுக்கலாம் என கூறிவிடுகிறார் பாக்யாவும் மிகவும் ஹாப்பியாக இருக்கிறார் முதல் முயற்சியை பாக்கியா அவருக்கு வெற்றி கிடைத்து விட்டதால் எழிலும் சந்தோஷப்படுகிறார்.

இனி தான் கோபிக்கு பாக்கியா பதிலடி   கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.