திருமணதிற்கு டீச்சர் மற்றும் அவரின் குடும்பத்தை கூப்பிட்ட ராதிகா.! சிக்கபோகும் கோபி..!

bhakyalakshmi
bhakyalakshmi

குடும்ப இல்லத்தரசியின் கதையை மையமாக வைத்து எப்படியெல்லாம் வெகுளியான மனைவியை தந்திரமாக கணவன் ஏமாற்றுகிறான் என்பதை வெளிப்படையாக கூறும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

25 வருடமாக வாழ்ந்து வந்த தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து உள்ளான் கோபி. எப்படியாவது பாக்கியத்தை வெளியில் விடாமல் வீட்டிற்குள்ளேயே வைத்து விடவேண்டும் என்றும் பாக்கியாவும் ராதிகாவும் நண்பர்களாக இருக்க கூடாது என பல முயற்சிகளை செய்து வருகிறான்.

இன்னொரு பக்கம் பாக்கியா தனது தொழிலை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதற்காக புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் அதாவது பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஒரு மணி நேரத்தில் நூறு வகையான உணவுகளை சமைத்து அசத்தவுள்ளார்.

இவ்வாறு பாகிக்யா இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் மீண்டும் பிரம்மாண்டமாக தனது தொழிலை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உலகம் முழுவதும் பேமஸ்சாக உள்ள இவரை சந்திக்க வேண்டும் என ராதிகா விரும்புகிறார்.

அதனை கோபியிடம் கூற கோபி அதற்கு நீ ஏன் டீச்சர் மேல மட்டும் இவ்வளவு அன்பாக இருக்கிற என்று கேட்க ராதிகாவிற்கு அவங்க மிகவும் அன்பானவுங்க கோபி நான் ஆபீஸ் கூட சொல்ல முடியாததை இவர்களிடம் சொல்ல முடியும் நம் திருமணத்தைப் பற்றி சொன்னபோது கூட டீச்சர் ரொம்பவும் சந்தோஷப் பட்டாங்க நம்ம திருமணத்திற்கு டீச்சர் மற்றும் டீச்சர் குடும்பம் மட்டுமே போதும் எனக் கூற கோபி அதிர்ச்சியடைகிறான் இதுதான் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது.