முழு நேர வில்லியாக மாறிய ராதிகா.! பாக்யாவையே லெப்ட் ரைட் வாங்கிட்டாரே வைரலாகும் புரோமோ வீடியோ.!

radhika
radhika

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அது மட்டுமில்லாமல் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதற்கு காரணம் கோபி ராதிகா பாக்கியா ஆகியவர்கள் தான் இவர்கள் நடிக்கும் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் விதிரும்பி பார்க்க வைக்கிறது.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஆகிய இரண்டு சீரியல்களும் ஒன்றாக இணைந்து மகா சங்கமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் இந்த வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபியை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கோபி ராதிகாவை கூட்டிகிட்டு ஹனிமூனுக்காக கொடைக்கானலுக்கு வந்துள்ளார். இந்த வயதில் ஹனிமூனா என பலரும் கேள்வி எழுப்பி கோபியை திட்டி தீர்க்கிறார்கள். இந்த நிலையில் பாக்யாவின் குடும்பம் மற்றும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் என இரு குடும்பமும் கொடைக்கானல் வந்துள்ளது இதைப் பார்த்த கோபி மற்றும் ராதிகா ஷாக் ஆகிறார்கள் இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கோபி அறைக்குள் புகுந்து இது எங்களுடைய ரூம் என கூறி ரகளை செய்து வருகிறார்கள்.

அவர்களை வெளியே துரத்துவதற்குள் ராதிகா டென்ஷனாகிறாள்  அதன் பிறகு எல்லோரும் நெருப்பு முன்பு அமர்ந்து ஆடிப்பாடி என்ஜாய் செய்து கொண்டிருக்கும் பொழுது ராதிகா கோபியை கூட்டிக்கொண்டு வந்து அங்கே அமர்கிறார் அப்பொழுது பாக்யா பாட்டு பாடுகிறார் அதை பார்த்த கோபி மெய் மறந்து கைதட்டுகிறார் அதனால் ராதிகா கோபப்படுகிறார் . இந்த எபிசோடு முடித்தவுடன் அடுத்த வார ப்ரோமோ வீடியோ வெளியாகிறது.

அதில் பாக்யாவை ராதிகா பார்க்கில் சந்திக்கிறார் உடனே வில்லி அவதாரம் எடுக்கிறார் ராதிகா பாக்யாவை பார்த்து எங்க நிம்மதியை ஏன் கெடுக்குறீங்க இதுக்கு நீங்க விவாகரத்து கொடுக்காமலேயே இருந்திருக்கலாம் என சண்டை போடுகிறார் இனி வரும் எபிசோடுகளில் ராதிகா முழு வில்லியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

radhika
radhika