பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில்ராதிகா ராதிகா பால் காய்ச்ச கீழே வந்து பாலை ஊற்றிவிட்டு பாக்யாவை பார்த்து நேற்று நடந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை என கேட்க உடனே பாக்கியலட்சுமி நக்கலாக நேத்து மார்க்கெட் போனோம் மறுபடியும் ஒரு ஆர்டர் கிடைச்சது இதெல்லாம் நாங்க எதிர்பார்க்கலை தான் என கூறிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா சமாளிக்காதீங்க நேத்து கோபி அப்படி பேசுவார் என்று நீங்கள் எதிர்பார்க்கல தானே.
இத்தனை நாள் வரை பாக்யாவை எல்லாரும் நல்லவல் நல்லவல் என்று தான் நினைச்சிட்டு இருந்தாங்க இப்பதானே கோபி கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்காரு என கேட்க உடனே பாக்கியா என்ன கேள்வி கேட்க அவர் யாரு, எப்ப நான் டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டனோம் அப்பவே என் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன். என் வாழ்க்கையில் இருந்தும் தூக்கி எறிஞ்சிட்டேன்.
ஆனா அவரு ஏன் என்ன தூக்கி எறியாமல் இன்னும் வச்சிருக்கார் நான் எங்க போறேன் யாருகிட்ட பேசுறேன்னு ஏன் வேவு பாக்குறாரு இதெல்லாம் என்னைக்காவது நீ யோசிச்சு பாத்தியா ராதிகா. உங்க மேல உள்ள தப்பை என் மேல திசை திருப்புறீங்களா உங்களுக்கு வருத்தமாக இல்லையா என்பது போல் பேசுகிறார். உடனே எழில் அம்மா எதுக்கு வருத்தப்படணும் என கேட்க அமைதியாக இரு எழில் நான் பேசிக் கொள்கிறேன் என கூற செல்வியும் நீ அமைதியா இரு தம்பி அக்கா ஏதோ பஞ்ச் பேசப்போகுது எனக்கு கூறுகிறார்.
ஒரு காலத்திலையும் நான் தப்பு செய்ய மாட்டேன் கோபி சார் தான் இந்த மாதிரி தப்பு செஞ்சிருக்காரு அதனால அவரு பார்ப்பது எல்லாமே தப்பா தான் தெரியும் அவரோட நீங்க இருக்கீங்க உங்களோட பார்வையும் தப்பா தான் இருக்கு அதனால தான் இந்த மாதிரி வந்து கேள்வி கேக்குறீங்க என பாக்கியா பஞ்சு வசனம் பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் கோபி சார் கேட்டது கொஞ்சம் வருத்தமா தான் இருந்தது ஆனா அந்த வருத்தம் அவர் கேட்டதால் இல்ல இவர் எல்லாம் என்ன கேள்வி கேட்கிறார் என்று தான், என்னை புரிஞ்சவங்க இந்த வீட்ல நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு நான் உண்மையா இருந்தா போதும் என்பது போல் ராதிகாவிடம் கூறிவிடுகிறார்.
ராதிகா கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பாக்கிய தரமான பதிலடி கொடுத்தார் அது மட்டும் இல்லாமல் கடைசியில் செல்வி ஏன் மேடம் நீங்கலே குச்சி கொடுத்து இரண்டு அடி அடிங்கன்னு சொன்ன மாதிரி இருக்கு என பஞ்ச் பேசி விட்டு ஓடி விடுகிறார். அடுத்த காட்சியில் செழியன் மற்றும் ஜெனி இருவரும் ரூமில் இருக்கிறார்கள் அப்பொழுது காலை பயங்கரமாக வலிக்கிறது எனக் கூற செழியன் காலை அமுக்கி விடுகிறான் அப்பொழுது செழியன் குழந்தைக்கு வேற பர்சேஸ் பண்ணனும் என கூறிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் செழியன் கிளைன்ட் போன் செய்து கொண்டே இருக்கிறார் செழியன் ஜெனி இடம் இவங்க தொல்லை தாங்க முடியல இவங்க போனை எடுத்தாலே ரொம்ப நேரம் பேசுறாங்க என கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த கிளையண்ட் வேண்டாம் என கூறினாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் எனக் கூறுகிறார்கள்.
அடுத்த காட்சியில் ஏழில் வாக்கிங் செல்கிறார் அப்பொழுது கோபி உங்க அம்மா செய்வது தவறு என கூற ஏழில் எங்க அம்மாவை வேவு பார்க்க நீ யாரு ஃபர்ஸ்ட் நீங்க நல்லா தான் நடந்துக்கிறீங்களா? நீங்க நடந்து கொள்வது தான் குடும்பத்துக்கு கெடுதல் இன்னைக்கு உங்க ஆசை மகன் உங்களையே அடிக்க கை ஓங்கிட்டான் அதுக்கு காரணமும் நீங்க தான் நீங்க நடந்துக்கிற விதம்தான் என கோபியை பார்த்து கூறுகிறார் உடனே உங்க ஆச மகனும் கண்டிப்பா ஒரு நாள் உங்களை வெறுத்துடுவா என இனியவை பற்றி கூறுகிறார்.
அடுத்த காட்சியில் கோபி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது ராதிகா சமைத்துக் கொண்டிருக்கிறார் கோபிக்காக ஸ்வீட் செய்து கொடுக்கிறார் அதை சாப்பிட்டு கோபி புகழ்ந்து தள்ளுகிறார் அதுமட்டுமில்லாமல் ராதிகாவிற்கு ஊட்டி விடுகிறார் அந்த சமயத்தில் செழியன் ஊட்டி விடுவதை பார்த்து விடுகிறார் இதனால் செம காண்டாக நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.