சீரியலை தூக்கி நிறுத்தும் கோபியை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கும் ரஞ்சித்.? பாக்கியலட்சுமி நடிகர்களின் சம்பள விவரம்

baakiyalaxmi-
baakiyalaxmi-

இல்லத்தரசிகளை கவர்ந்து இழுக்க பல தொலைக்காட்சிகள் சீரியல்களை தினம்தோறும் கொடுத்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி புதுப்புது சீரியல்களை கொடுத்து வருகிறது அதில் மிகவும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை உருவாகிறது. தற்பொழுது மொத்தம் 18 லட்சம் பணததை கோபிக்கு பாக்கியா தரவேண்டிய சூழ்நிலையில்  இருக்கிறார், இதற்காக கடினமாக வேலை பார்த்து தற்போது 8 லட்சம் கைவசம் வைத்திருக்கிறார் மீதி 10 லட்சம் தேவை என புலம்பி கொண்டிருக்கிறார்.

இவருக்கு உதவ அவரது இரு மகன்களும் தங்களால்  முடிந்த உதவியை செய்ய முயற்சிக்கின்றனர். இத்துடன் இருக்கிறது அடுத்த என்ன நடக்கப்போவது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் இந்த நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி சுஜித்ரா ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு 15000 சம்பளம் வாங்குகிறார், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷுக்கு 12000, நடிகை ரேஷ்மாவிற்கு 12000 சம்பளம் தரப்படுகிறது. மேலும் ஏழில் ரோலில் நடிக்கும் விஷாலுக்கு பத்தாயிரம், ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷுக்கு 10,000, செழியனுக்கு பத்தாயிரமும்.

இனியாவுக்கு 8000-மும் ஒரு நாளைக்கு தரப்படுகிறது. இதில் என்ன ஹைலைட் என்றால்.. சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்த நடிகர் ரஞ்சித் இவர்கள் எல்லோரைவிடவும் அதிக சம்பளம். குறிப்பாக கோபியை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.