Baakiyalaskshmi today episode October 9 : இன்றைய எபிசோடில் ராதிகா கோபியிடம் பாக்யா வேற ஒரு கேண்டீன் காண்ட்ராக்டர் விஷயமா போய் இருந்திருக்காங்க என்று சொல்ல எனக்கும் தெரியும் பழனிச்சாமி ஓட ரெபர்ல தான் என்னோட பிரண்டு கம்பெனிக்கு போயிருந்திருக்கா..
ஆனா அங்க பாக்யாவுக்கு நான் வேலை தரக்கூடாதுன்னு சொல்லிட்டேன் என்பதும் ராதிகா பாக்யா பண சம்பாதிக்கக் கூடாது கஷ்டப்படணும்னு நான் நினைக்கல ஆனா நம்ப கண் முன்னாடி அவங்க படக்கூடாது அவங்க தூரமா எங்கயாவது போய் எத்தனை கேண்டீன் வேணும்னாலும் நடத்தடும்.
ஏன் நம்மள சுத்தி சுத்தி வராங்க, இதுக்கு முன்னாடி என் ஆபீஸ்ல வேலை செஞ்சாங்க இப்ப உங்க பிரண்டோட ஆபீஸ்ல வேலை கேட்டுப் போய் இருக்காங்க ரொம்ப பெரிய ஆளா இருப்பாங்க போல என்கிறார். அடுத்து ஜெனி ஹாஸ்பிட்டலில் இருந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரை ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர்.
பிறகு மாலினி செழியனுக்கு அடிக்கடி போன் பண்ண செழியன் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் எங்கயாவது மீட் பண்ணலாமா என்று கேட்கிறார். அதற்கு மாலினி வீட்டுக்கே வாங்க என்று கூப்பிட செழியன் வீட்டுக்கு வேணாம் வேற எங்கேயாவது மீட் பண்ணலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு வருகின்றனர்..
அங்கு மாலினி செழியன் கிட்ட உங்கள பாக்காம என்னால இருக்க முடியல வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லை என்று கேட்க.. எனக்கு குழந்தை பிறந்திருக்கு ஜெனி ஹாஸ்பிடல் இருக்கா எப்படி அவங்கள விட்டுட்டு வர முடியும் இதோட முடிச்சுக்கலாம். உன் விஷயத்துல நான் கொஞ்சம் தடுமாறிட்டேன். நீ என்கிட்ட பேசும் போது உன்னை என்னால் அவாய்ட் பண்ண முடியல..
ஆனா இந்த ரிலேஷன்ஷிப்புக்கு வாழ்க்கை இல்லை அதனால நம்ம இனிமே இதை நிறுத்திக்கலாம் என்று சொல்ல மாலினி என்னால எல்லாம் உங்க கிட்ட பேசாம இருக்க முடியாது வேணும்னா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று கேட்கிறார் இதை கேட்டு செழியன் ஷாக் ஆகிறார் இதோடு இந்த எபிசோடு முடிந்துள்ளது