வாய் தவறி பாக்கியா பெயரை சொல்லி ராதிகாவிடம் சிக்கிகொண்ட கோபி.! கேண்டினில் வாய் கொடுத்து பாகியவிடம் வாங்கிகட்டிகொண்ட ராதிகா.! இன்றைய எபிசொட்

baakiyalakshmi-gobi
baakiyalakshmi-gobi

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் மயூ  உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ராதிகா வந்து நீ இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலையா என கேட்க மயூ எனக்கு இந்த ரெண்டு சம் மட்டும் புரியல அம்மா இன்னைக்கு வீக்லி டெஸ்ட் இருக்கு என கூறுகிறார். உடனே ராதிகா நான் சொல்லிக் கொடுக்கிறேன் என மைவுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

மயூ என்னுடைய பிரண்டுக்கு இந்த சம்மு தெரியல நான் சொல்லிக் கொடுத்துட்டு வரேன் என போகிறார். உடனே ராதிகா தன்னுடைய அம்மாவிடம் மயூ சந்தோசமாய் இருக்காளா என கேட்க அவ சந்தோஷமா இருக்கா எனக் கூறுகிறார் உடனே காபி போட்டு எடுத்துக் கொண்டு வரவா என கேட்டுவிட்டு காபி எடுத்துக் கொண்டு வருகிறார். நீ மயூ பத்தி யோசிக்கவே வேணாம் அவ இங்க சந்தோசமா தான் இருக்கா.

உடனே தன்னுடைய அம்மாவிடம் அந்த வீட்ல இருக்கிறத நினைத்தால் தான் எனக்கு கஷ்டமா இருக்கு அங்க இருக்கவே எனக்கு பிடிக்கலாமா எனக்கு கூறுகிறார். அங்க யாருமே என்னை மதிக்க மாட்டேங்கிறாங்க, என்ன ஒரு ஆளாவே மதிக்க மாட்டேங்குறாங்க திட்டிக்கிட்டே இருக்காங்க என்ன பண்ணினாலும் திட்டுறாங்க எனக் கூறுகிறார். அப்படித்தான் இருப்பாங்க போன உடனே ஆரத்தி எடுத்து வர வேற்ப்பாங்களா.

பொதுவா பொண்ணுங்களுக்கு திருமணம் ஆன உடனே புகுந்த வீடு செட் ஆகாது எல்லாரும் ஒரு மாதிரி தான் இருப்பாங்க. உன் விஷயத்துல அவருக்கு தலைக்கு உசந்த பிள்ளைங்க இருக்காங்க அவர விட்டு பிரிந்த மூத்தவளே அங்கேயே உட்கார்ந்து இருக்கும்போது அதனால ஒரு மாதிரியா தான் இருக்கும் அதுக்காக இருக்க முடியலன்னு இங்க கிளம்பி வந்துறாத அதுக்கப்புறம் உன் வாழ்க்கை அவ்வளவுதான் நான் சொல்லிட்டேன்.

இந்த ரெண்டு மாசத்துல மொத்தமா மாறிடும் அந்த வீடு உன்னோட கைக்கு வந்துரும் எனக் கூறுகிறார். அடுத்த காட்சியில் பாக்யா இருக்கும் கேண்டினில் பாக்கியா வேலையை சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது இரண்டு பெண்கள் பாக்யா வீட்டில் நடந்ததை பேசிக் கொண்டு இருக்க செல்வி அதை என்னன்னு கேட்க உடனே பாக்கியா வீட்டிற்கு மறுபடியும் கோபி வந்துட்டாரா என கேட்கிறார்கள். உடனே செல்வி அடுத்தவங்க கதையை நீங்க ஏன் பேசுறீங்க உங்க வேலைய போய் பாருங்க என விரட்டி விடுகிறார்.

பாக்கியாவிடம் செல்வி நடந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கும் பொழுது உனக்கு வருத்தமா இல்லையா அக்கா என கேட்க வருத்த பட என்ன இருக்கு வா வேலைய பாக்கலாம் எனக்கு கூறுகிறார். அந்த நேரத்தில் ராதிகா வருகிறார். அப்பொழுது சொடக்கு போட்டு பாக்யாவிடம் ஒரு காபி எனக் கூறுகிறார் காபியை எடுத்து வந்த செல்விஇடம் வேலைக்காரி என கூற உடனே செல்வி நான் வேலைக்காரி பாக்யாவுக்கு மட்டும்தான் உங்களுக்கெல்லாம் கிடையாது என்ன நீ என்ன ஓனரா  என கேட்டு  விடுகிறார் ராதிகா.

அப்பொழுது ராதிகா பாக்கியாவை பார்த்து எப்ப பார்த்தாலும் சுயமரியாதை கௌரவம் என கூறிக் கொண்டிருப்ப இவ்வளவு நடந்தும்  அந்த வீட்டிலேயே இருக்கியே நானா இருந்த தூக்கி போட்டுட்டு கிளம்பிடுவேன் நான் என ராதிகா கூற. உடனே பாக்கியா ஒரு வீட்டில் மதிக்கவே மதிக்காம பிடிக்கவே பிடிக்காம நீங்க எல்லாம் அங்க வந்து இருக்கீங்களே அந்த சுயமரியாத கௌரவம் எல்லாம் இல்லையா நானா இருந்தன்னா அங்க வர்றதுக்கு யோசிச்சு கூட பார்த்திருக்க மாட்டேன். என பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

அவங்க ரெண்டு பேரும் போயிட்டாங்களா என ஈஸ்வரி கேட்க அவங்க இங்கதான் இருக்காங்க என ஜெனி கூறிக் கொண்டிருக்கிறார். காஞ்ச துணி எடுக்க நான் மொட்டை மாடி போன அங்க யார் கூடையோ பேசிகிட்டு இருந்தாங்க கண்டிப்பா அவங்க அம்மாவா தான் இருக்கும் என செல்வி கூற நம்பள பத்தி தான் போட்டுக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என செல்வி கூறுகிறார்.

அப்படியே பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பாக்யாவை சப்பாத்தி சூப்பர் என அனைவரும் புகழ்கிறார்கள் அந்த சமயத்தில் கோபி வந்து சாப்பிடுவதை பார்த்து கண் கலங்குகிறார் அவரை பாக்கியா பார்த்தவுடன் சட்டென ரூமுக்கு கிளம்பி விடுகிறார்  கோபி. மேலே சென்று ராதிகா தண்ணியை கோபியிடம் கொடுத்து இதுதான் உங்களுக்கு சாப்பாடு சமைக்க கீழே போன சமையல் கட்டுளையே யாரும் விடல என கூறி விடுகிறார்.

உடனே கோபி எதுக்கு ராதிகா பிரச்சனை நாம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கலாம் என கூறுகிற அதற்கு ராதிகா கிச்சன்ல என்னைய விடவே மாட்டாறங்க பாக்யா வேற அங்கேயே நின்னுட்டு இருக்குறா செம்ம கடுப்பாகுது என ராதிகா கோபியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். உடனே ராதிகா எனக்கு கிச்சன் அரேஞ்ச் பண்ணி தா இல்லன்னா நான் சமைக்கும்போது  அவங்க எல்லாம் வெளியில போகணும் என ராதிகா கூறுகிறார்.

உடனே கோபி நடக்கிற கதை எல்லாம் ஏதாவது பேசுறியா பாக்கியா என பாக்கியா பெயரே கூறியவுடன் ராதிகா என்ன சொன்னீங்க என கேட்டு கோபப்படுகிறார். நீ எப்ப பாத்தாலும் பாக்கியா பத்தி பேசுறதால்தான் ஒரு ப்ளோவில் பாக்கியான்னு சொல்லிட்டேன் உனக்கு பசிக்குதுன்னு நினைக்கிறேன் அதனால்தான் ஏதேதோ பேசுற இதோ அஞ்சு நிமிஷத்துல ஃபுட் ஆர்டர் பண்ணிடுரன்  என ராதிகாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி வெளியே வந்து இவ கூட இருந்த பைத்தியமே பிடிச்சுடும் என புலம்பி கொண்டிருக்கிறார் கோபி இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.