சந்தோஷமாக வரவேற்ற ராதிகாவுக்கு செருப்படி பதில் கொடுத்த ஈஸ்வரி.! பரபரப்பாகும் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்…

baakiya
baakiya

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்து வருகிறது இந்த நிலையில் பாக்யா ராதிகா வேலை செய்யும் ஆபீஸில் கேண்டின் ஒன்றை தொடங்குகிறார். அதற்கு சின்னதாக ஃபங்ஷன் செய்ய முடிவு செய்து அனைவரையும் இன்வைட் பண்ணுகிறார். இந்த நிலையில் ராதிகா முதலாளியையும் தனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவரையும்அழைத்துள்ளார்.

அதற்கு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல இருக்கையில் ஈஸ்வரி பாட்டி என்னால் வர முடியாது என பாக்கியாவிடம் கூறிவிடுகிறார் ஆனால் பாக்கியா ஈஸ்வரி காலில் விழுந்து கெஞ்சியும் வர முடியாது எனக் கூறி விடுகிறார். அதேபோல் அந்த பக்கம் இனியாவின் அப்பா கோபி இனியாவை நீ அந்த பங்க்ஷனுக்கு போகக்கூடாது என தடுத்து நிறுத்துகிறார்.

அதனால் இனியவை காரில் அழைத்துக் கொண்டு மாலுக்கு போகலாம் பர்ச்சேஸ் பண்ணலாம் என அழைத்துக் கொண்டு போகிறார் அப்பொழுது இனியா என்னை அம்மா ஓபன் செய்யும் கேண்டினுக்கு அழைத்துச் செல்லுங்கள் என பிடிவாதமாக இருக்கிறார் அதனால் வேறு வழி இல்லாமல் கோபி அங்கு சென்று இறக்கி விடுகிறார். அங்கு கோபியை எழில் அவமானப்படுத்துகிறார்.

இந்த நிலையில் ராதிகா திடீரென பாக்யா ஓப்பன் பண்ணும் கேண்டின் பங்க்சனுக்கு வருகிறார்  இதைப் பார்த்த கோபி அதிர்ச்சி அடைகிறார் உடனே ராதிகா இங்க என்ன பண்ணுறீங்க என கோபியை பார்த்து கேட்டு அவரை முறைக்கிறார். பின்பு இனியாவால் தான் இங்கு வந்தேன் அவரை விட்டுவிட்டு போகலாம் என நினைத்தேன். என்னை வரக்கூடாதுன்னு சொல்லிட்டு நீ எப்படி இங்க வந்த என கேட்க கோடீஸ்வரன் சார் சும்மா விடமாட்டேன் என்கிறார் வர சொல்லி டார்ச்சர் செய்கிறார் என கூறிக் கொண்டிருக்கிறார்.

ஒருவழியாக கேண்டின் திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார் ராதிகா அப்பொழுது ராதிகாவின் முதலாளி கோடீஸ்வரன் அதற்கு முன்பே வந்துவிட்டார் ராதிகா வந்தவுடன் பாக்யா அவரை டீஸ் செய்கிறார் இதனால் ராதிகா மிகவும் கடுப்பாகிறார் ஒரு காலகட்டத்தில் ராதிகா இங்கிருந்து எழுந்து போய்விடலாம் என முடிவு செய்து எழுந்து செல்கிறார் அப்பொழுது வரமாட்டேன் என கூறிய ஈஸ்வரி திடீரென வந்து நிற்கிறார்.

இதைப் பார்த்த ராதிகா வாங்க அத்தை என முகத்தில் சிரிப்புடன் வரவேற்கிறார் அதற்கு ராதிகா முகத்தில் செருப்பால் அடித்தது போல் நீ யார் என்ன வரவேற்க உனக்காக ஒன்னும் நான் இங்க வரல என் மருமக கேண்டீன் ஓபன் பண்ணுகிறார் அதை பார்க்க தான் நான் வந்தேன் இதையே சாக்கா வச்சுக்கிட்டு என்கிட்ட பேசாத உனக்கு என்ன இங்க வேலை என கிழித்து தொங்க விடுகிறார்.

இது ராதிகாவிற்கு செருப்பால் அடித்தது போல் இருக்கிறது இதை வைத்துக்கொண்டு கோபியிடம் ராதிகா பயங்கரமாக சண்டை வளர்ப்பார் என தெரிய வருகிறது. மேலும் ஈஸ்வரி குத்துவிளக்கை ஏற்றுகிறார். இப்படி கேண்டின் திறப்பு விழா மிகவும் அற்புதமாக போய்க் கொண்டிருக்கிறது.