பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் எழில் கோபியிடம் சண்டை போட்டார் அத்துடன் முடிந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் செழியன் ஜெனி ரூமில் தூங்கிக் கொண்டிருந்த இனியா எழுந்து சென்று தன்னுடைய அம்மாவை பார்க்கிறார். பாக்கியாவும் இடிந்து போய் உட்கார்ந்து யோசித்துக் கொண்டே தூங்காமல் இருக்கிறார்.
உடனே இனியா பாக்கியாவிடம் சென்று மடியில் படுத்து கொள்கிறார். உடனே இனியா நீ இன்னும் தூங்கலையா என கேட்க எனக்கு தூக்கம் வரல என இனியா கூறுகிறார் உடனே பாக்கியாவும் எதைப் பற்றியும் யோசிக்காத இனியா எல்லாம் சரியாகிவிடும் உன் படிப்புல மட்டும் நீ கவனத்தை செலுத்து எனக் கூறுகிறார். இனியா நீ ரொம்ப நல்லம்மா டாடி உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறாரு என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் என்னை விட்டுட்டு போயிட மாட்டல்லாம்மா இங்கே எல்லாரும் டார்ச்சர் செய்றாங்கன்னு எங்கேயும் போயிடாதம்மா என இனியா கெஞ்சுகிறார்.
அதற்கு பாக்யா உங்களை விட்டுட்டு நான் எங்க போவேன்மா அப்படியே போனாலும் உன்னை கூட்டிட்டு போயிடுறேன் என கூற வேணாம்மா நீ எங்கேயும் போகக்கூடாது இங்க தான் இருக்கணும் இல்லம்மா நீ எங்கேயும் போகக்கூடாது நாம எல்லாரும் ஒன்னா தான் இருக்கணும் வேணும்னா அவங்க எங்கேயாச்சும் போகட்டும் என கூறுகிறார். நீ எதைப் பற்றியும் கவலைப்படாம நீ உன் படிப்பு மட்டும் பாரு மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் என கூறுகிறார்.
நீ +2 வில் நல்லா படிச்சு நல்லா மார்க் எடுக்கணும் அதுதான் முக்கியம். மத்த எல்லாத்தையும் அம்மா பார்த்துக்கிறேன். இனியா தனக்குள்ளே சிரித்துக் கொண்டு சரனிடம் மெசேஜ் செய்து கொண்டிருக்கிறார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாக்யா பால் எடுத்துக் கொண்டு கொடுத்து யாரிடம் மெசேஜ் செய்து கொண்டிருக்கிறாய் என கேட்க சரணிடம் தான் பேசுகிறேன் என கூறுகிறார்.
அவன் இன்னைக்கு டியூஷன் வருவியான்னு கேட்கிறான் இங்கே வந்தது எல்லாம் அவனுக்கு சந்தோஷம் என இனிய கூற உடனே பாக்யா நீ டியூஷன் போவ தானே பாக்யா கேட்க அதற்கு இனியா எனக்கு ஒரு மாதிரியா இருக்குமா நான் இன்னைக்கு போகணுமா என்ன கூறுகிறார். உடனே எழில் அதெல்லாம் ஒரு மாதிரியா இருக்க வேண்டாம் நீ போ என கூறுகிறார். சரண் டியூஷன் வரலனாலும் பரவால்ல பக்கத்துல இருக்குற ஸ்னாக்ஸ் ஷாப் ல மீட் பண்ணலாமா என கேட்கிறார் இதை கூற உடனே பாக்கியா டென்ஷன் ஆகிறார்.
எதுக்கு இனியா ஸ்னாக்ஸ் ஷாப்ல பாக்கணும் டியூஷன் போ வரும்போது அந்த பையன் இங்க கூட்டிட்டு வந்துரு எனக் கூறுகிறார் என்னம்மா நீயும் மாத்தி பேசுற எனக் கூற பாக்கியா, இனியா பிரண்ட்ஸ்லாம் டியுஷன் பாக்குறியா பேசினியா அதோட வந்துரு டீ குடிக்கிறேன்னு எங்கேயாவது போய் பேசிட்டு இருந்தா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க நான் உன்னை நம்புறேன், அந்த பையனையும் நம்புறேன். அந்த பையன் நல்ல பிரண்டு தான் ஆனா எல்லாரும் அதே மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது இல்ல.
என்னமா அந்த வீட்டல அவங்க சொல்ற மாதிரி நீயும் சொல்ற அந்த வீட்ல தான் அவங்க இத மாதிரி டார்ச்சர் பண்ணுனாங்க என இனியா கூற அப்ப அவங்க கரெக்டா தான் சொல்லி இருக்காங்க எனக் கூறிவிட்டு காபி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு செல்கிறார் அங்கு கோபி ஜாக்கிங் போய்விட்டு வீட்டிற்கு வருகிறார் காபியை முகர்ந்து பார்த்து வாசம் பிடிக்கிறார். காபி கொடுத்த பாக்யாவை மாற்றி மாற்றி புகழ்ந்து தள்ளுகிறார்கள் அதை பார்த்த கோபி வயித்தெரிச்சல் அடைகிறார்.
அடுத்த காட்சியில் சமையல் கட்டில் அமிர்தா, ஜெனி பாக்கியா என அனைவரும் இருக்கிறார்கள் அப்பொழுது செல்வி வந்து என்ன அவங்க ரெண்டு பேரும் போயிட்டாங்களா ஒரு சத்தத்தையும் காணும் எனக்கு கேட்க அதற்கு அமிர்தா இன்னும் போகல என கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் ஆஃபீஸில் ஃபங்ஷன் ஸ்பெஷலா சமைக்கணும் அதனால நான் கிளம்புறேன் என பாக்கியா கூற உங்களுக்கு ஆபீஸ்ல இன்னும் டார்ச்சர் கொடுப்பாங்க ராதிகா என ஜெனி சொல்கிறார் அதற்கு பாக்கியா பார்த்துக் கொள்ளலாம் என சொல்லிவிடுகிறார் அங்கு வந்த ஈஸ்வரி பாக்கியாவை நல்லா தானே இருக்க என விசாரிக்கிறார் அதற்கு பாக்யா நல்லா தான் இருக்கேன் அத்தை எனக்கு கூறுகிறார்.
கேண்டில் முடிஞ்சது நேரா வீட்டுக்கு தானே வருவ பாக்கியா எங்கும் போயிடாத என கூறுகிறார். அதற்கு பாக்கியா நான் வீட்டை விட்டு போயிடுவேன்னு பார்க்கிறிங்கள அத்தை கஷ்டத்தை பார்த்து இருக்கேன் சந்தோஷத்த இன்னும் பாக்கல அத்தை சந்தோஷம் எனக்கு இங்க தானே இருக்கு அதனால எங்கேயும் போக மாட்டேன் வந்துருவேன் எனக்கு கூறுகிறார்.
பாக்யாவை பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரும் கவலைப்படுகிறார்கள். அடுத்த காட்சியில் ரூமுக்கு வந்த கோபி ராதிகாவை எழுப்பி காபி கேட்கலாமா என யோசித்து கொண்டு இருக்கிறார். வேண்டாம் வேண்டாம் அவ என்ன மூடுல இருக்காலோ தெரியல கடிச்சு கொதரிட போறா என தனக்குள்ளே பேசிக்கொண்டு எதுவும் கேட்காமல் விட்டு விடுகிறார் உடனே ராதிகா எழுந்து குட் மார்னிங் கோபி மணி 9:30 ஆயிடுச்சா என கேட்கிறார்.
ராதிகா ரெஃப்ரஸ் ஆகிவிட்டு கட்டிலில் உட்கார்ந்து கோபியிடம் வாக்குவாதம் செய்கிறார் என்ன பிரச்சனை இருந்தாலும் வாக்கிங் மட்டும் கரெக்டா போயிட்டீங்க என கேட்க அதற்கு கோபி நோ நோ என கூற அப்ப நான் முக்கியம் இல்லையா கோபி என்ன ராதிகா கேட்கிறார். கோபி காபி ஆர்டர் பண்ணலாமா என ராதிகா விடம் கேட்க எதுக்கு ஆர்டர் பண்றீங்க நானே போய் போட்டு கொண்டு வருகிறேன் என கூறுகிறார்.
அதற்கு கோபி பயந்து வேணாம் வேணாம் அங்க போன எதாவது பிரச்சனை ஆயிடும் எனக் கூற அதற்கு ராதிகா என்ன பிரச்சனை இருந்தாலும் சமாளிச்சு தான் ஆகணும் ஏன்னா நம்ம இனிமே இங்க தான் இருக்க போறோம் என கூறுகிறார் இத்துடன் என்ற எபிசோடு முடிகிறது. இனிமே சமையல் கட்டில் ரகளைதான்..