விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலமடைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது டிஆர்பிஇல் நல்ல ரேட்டிங் பெற்றுள்ளது இந்த சீரியல். இந்த நிலையில் இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான எபிசோட் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அப்படி இருக்கும் வகையில் நேற்றைய எபிசோடில் வீட்டில் இருக்கும் அனைவரும் காபி குடித்துக் கொண்டிருக்கும் பொழுது கோபி வெளியில் இருந்து வருகிறார், அப்பொழுது அந்த வாசத்தை முகர்ந்து கொண்டே உள்ளே செல்கிறார், அங்கு ராதிகா பெட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது எழுப்பலாமா வேண்டாமா என கன்ஃபியூஷனில் இருக்கிறார் எழுப்பினால் பத்திரகாளி மாதிரி கடிச்சு கொதரிடுவாய் என அவருக்குள்ளே சொல்லிக் கொண்டு அமைதியாக இருந்து விடுகிறார்.
பிறகு ராதிகா எழுந்தவுடன் என்ன கோபி மணி 9:30 ஆயிடுச்சா நான் போய்ட்டு குளிச்சிட்டு வருகிறேன் என மீண்டும் பெட்டில் உட்கார்ந்து கோபியுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் எவ்வளவு பிரச்சனை நடந்தாலும் யார் எப்படி போனாலும் உங்களுக்கு வாக்கிங் தான் ரொம்ப முக்கியம் என சண்டை போடுகிறார். பிறகு கோபி காபி வேணும் என ஆர்டர் பண்ணலாமா எனக் கூறுகிறார் அதற்கு ஏன் ஆர்டர் பண்ணுறீங்க நான் போய் போட்டு கொண்டு வரேன் என கூற கோபி அதிர்ச்சி அடைகிறார்.
நீ அங்க போக வேண்டாம் ஏதாவது சண்டை வரும் எனக்கு கூறுகிறார். பரவால்ல கோபி எல்லாத்தையும் சமாளிக்கலாம் என கூறுகிறார். இந்த நிலையில் இன்று ஒரு பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் காபி போடுவதற்காக கிச்சனுக்கு வருகிறார் ராதிகா அங்கு எது எங்க இருக்கு என அலை மோதுகிறார். அப்பொழுது காபி தூளை கையில் எடுத்துக்கொண்டு போடுவதற்கு முன்பு செல்வி வெடிக்கண புடுங்கி மேலே வைத்து விடுகிறார்.
அதன் பிறகு சர்க்கரை எங்கு இருக்கு என தேடிக்கொண்டே பேசுகிறார் அப்பொழுது சர்க்கரை கடையில இருக்கு என செல்வி ராதிகாவுக்கு லந்து கொடுக்கிறார். உடனே செல்வியை ராதிகா மிரட்டுகிறார் அதை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரி யார் வீட்டு கிச்சன்ல வந்து யார அதிகாரம் பண்ணுற வெளியே போடி என ஈஸ்வரி கொந்தளிக்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.
ராதிகா தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் இனிமேதான் இருக்கு பாக்கியலட்சுமி குடும்பமே இரண்டாகுமா இல்லை சிதறி போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.