விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஏழில் மாடியில் இருந்து இறங்கி வருகிறார் அப்பொழுது பாப்பா தூங்கிவிட்டதா என கேட்க அவளுக்கு சீக்கிரம் தூக்கம் வந்திருச்சு அதனால அமிர்தா தூங்க வைத்துக் கொண்டிருக்கிறார் என கூறுகிறார். அந்த நேரத்தில் புட் டெலிவரி பாய் வந்து சார் என கூப்பிட இந்த நேரத்துல யார் ஆர்டர் பண்ணது நாமதான் எல்லாரும் சாப்பிட்டோமே என பேசிக் கொண்டிருக்க உடனே தாத்தா எழுந்து யார் ஆர்டர் பண்ணது என கேட்க கோபி சார் தான் ஆர்டர் பண்ணுனார் என கூறுகிறார் அப்படி யாரும் இங்க இல்லை என தாத்தா வந்து விடுகிறார் உடனே டெலிவரி பாய் போன் செய்கிறார் கோபிக்கு.
உடனே டெலிவரி பாய் கோபிநாத் நீங்க தானா என கேட்க ஆமா நான் தான் கோபிநாத் ஒரு பெரியவரு கோபிநாத் ஒரு ஆளு இங்க இல்லையே எனக அந்தப் பெரியவர் சொன்னார் என டெலிவரி பாய் கூறுகிறார். உடனே பார்சலை வாங்கிக் கொண்டு கோபிநாத் என்ற ஒரு ஆள் இல்லை என்று சொன்னீர்களே என தன்னுடைய அப்பாவிடம் கோபிநாத் கேட்க ஆமா அப்படி ஒரு ஆளே இல்ல என அடித்தது போல் கூறிவிட்டு பாட்டு பாடுகிறார் உடனே கோபிநாத் மேலே சென்றுவிடுகிறார்.
அடுத்த காட்சியில் செழியன் ஜெனி இருவரும் மாடியில் நின்று கொண்டு ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். லவ் பண்ணப்பதான் நீ இந்த மாதிரி பேசி இருக்க அதுக்கப்புறம் இன்னைக்கு தான் இந்த மாதிரி ரொமான்ஸா பேசுற என ஜெனி செழியனை பார்த்து கூறுகிறார். இன்னும் மூணு மாசத்துல குழந்தை பிறந்துறும் அத நான் தான் வச்சுப்பேன் உன்கிட்ட கொடுக்க மாட்டேன் என ஜெனியிடம் செழியன் கூறுகிறார்.
அந்த நேரத்தில் கோபி மேலே வருகிறார் சாரி நீங்க பேசிட்டு இருக்கிறது தெரியாது தெரியாம வந்துட்டேன் என கோபி கூர. பிறகு ஜெனி நல்லா இருக்கியா டாக்டர் ஜேக்கப் ஒழுங்கா போறியா எனக்கு கேட்டுக் கொண்டிருக்க. ஜெனி எதுவும் பேசாமல் கீழே சென்று விடுகிறார் அடுத்ததாக செழியன் இடம் கோபி பேச உங்ககிட்ட என்னத்த பேசுறது என அவரும் கிளம்பி விடுகிறார். இதனால் கோபி அப்செட் ஆகிறார்.
காலையில் பாக்கியா எழில் ஜாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார் அப்பொழுது பாக்யாவிடம் உங்களுக்கு ஒன்னும் இல்ல இல்லமா நல்லா தானே இருக்கீங்க என கேட்க நான் நல்லா தான் இருக்கேன் எனக்கு எதைப் பற்றியும் யோசிக்க நேரமே கிடையாது என் வேலையை பார்க்கவே எனக்கு நேரம் பத்தாது என கூறுகிறார். இப்படியே பேசிக் கொண்டு ஜாக்கிங் போய்க் கொண்டிருக்கும் பொழுது எதிரிள் கோபி வந்து நிற்கிறார் அவரை பார்த்தவுடன் எதுவும் பேசாமல் இருவரும் கிளம்பி விடுகிறார்கள்.
அடுத்த காட்சியில் இனியா ஜெனி இடம் எனக்கு சொல்லிக் கொடுக்கிறீர்களா அக்கா என கேட்டுக் கொண்டிருக்க அதற்கு எழில் நான் சொல்லிக்கொடுக்கிறேன் எனக் கூற கிண்டல் அடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது பாக்கியா காபி போட்டு எடுத்துக் கொண்டு அனைவரிடமும் கொடுத்து வருகிறார். அந்த நேரத்தில் செல்வி எனக்கு வச்சிருந்த காபி எங்க அக்கா என கேட்க உனக்கு போடறதுக்கு மறந்துட்டேன் இத வச்சுக்கோ என ஒரு டம்ளர் காபி எடுத்துக் கொண்டு செல்கிறார்.
அந்த சமயத்தில் ஜாக்கிங் முடித்துவிட்டு கோபி வருகிறார். காபியை பார்த்தவுடன் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு காபியை எடுத்து விடுகிறார் ஆனால் காபி பாக்கியா கையில இருந்து எடுத்ததை கவனிக்காமல் குடிக்க போற நேரத்தில் பாக்கியவை பார்த்தவுடன் காஃபியை வைத்து விடுகிறார். காபியை வைத்துவிட்டு சாரி என கேட்டுவிட்டு மேலே ஓடுகிறார் கோபி.
மேலே சென்ற கோபி ராதிகாவிடம் புலம்பி தள்ளுகிறார் அதுமட்டுமில்லாமல் இவ பெருமாள் மாதிரி ஹாய்யா தூங்கு உனக்கு என்ன நீ எழுந்திருக்காத எழுந்திருச்சா ஏதாவது பிரச்சனை தான் வரும் அப்படியே தூங்கு நான் என் இஷ்டத்துக்கு புலம்பிக்கிட்டு இருக்கேன். தூங்கும் போது கூட பாரு கொஞ்சம் கூட மேக்கப் குறையல அப்படியே தூங்குறா என குழம்பிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஒரு காபிக்காக நாக்க தொங்க போட்டுட்டு அலைஞ்சிட்டேனே என தன்னைத்தானே கோபி கேவலமாக பேசிக்கொண்டு புலம்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது..