பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பழனிச்சாமி, பாக்கியா, செல்வி எனும் மூவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது செல்வி நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிள்ளைங்க நல்லா இருக்கணும் என கூறிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பழனிச்சாமி அவனுக்கு கண்டிப்பா நல்லா இருப்பாங்க என ஆறுதலாக பேசுகிறார் அந்த சமயத்தில் சுதாகர் மகள் புதிதாக ஒரு இனிப்பை சேர்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு செல்கிறார் இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.
ஆனால் பழனிச்சாமி அதெல்லாம் செஞ்சிடலாம் நான் ஹெல்ப் பண்றேன் ஒரு அஞ்சு நிமிஷம் டைம் கொடுங்க என வெளியே சென்று யூடியூப் பார்த்துவிட்டு வந்து சொல்லுகிறார் ஆனால் பாக்கியா யூடியூப் பார்த்துதான் பழனிச்சாமி சொல்லுகிறார் என கூறிவிட்டு கொடுங்கள் நானே பார்த்துக்கொள்கிறேன் என போனை வாங்கி பார்த்து அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்.
பிறகு பழனிச்சாமியும் சுதாகரனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் பாக்கியா அந்த புதிய ஸ்வீட்டை செய்து முடித்துவிட்டு அதனை செல்வி மற்றும் சக தோழிகளுக்கு கொடுத்து எப்படி இருக்கிறது என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும் சூப்பராக இருப்பதாக கூறியதால் பழனிச்சாமிக்கு எடுத்துச் செல்கிறார் பாக்யா அந்த சமயத்தில் கோபியும் வந்து கொண்டிருக்கிறார் பழனிச்சாமியிடம் கொடுத்து எப்படி இருக்கிறது என பார்த்தியா கேட்க அருமையாக இருக்கிறது என கூறுகிறார் பழனிசாமி அதனை கோபி பார்த்து விடுகிறார்.
உடனே கோபி பழனிச்சாமி இடம் சண்டை போடலாம் என வருகிறார் அப்பொழுது ராதிகா போன் செய்கிறார் உடனே இங்கு வாங்க எனக்கு போர் அடிக்கிறது எனக் கூற கோபி ராதிகாவிடம் செல்கிறார் அங்கு ராதிகாவிடம் எரிந்து எறிந்து விழுகிறார். இதனால் ராதிகா டென்ஷன் ஆகிறார் அடுத்த காட்சியில் பழனிச்சாமியும் சுதாகரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கோபி வந்து பழனிச்சாமிடம் சண்டை போடுகிறார் பாக்யா எங்கு போனாலும் நீயும் வந்து விடுவியா என சண்டை போடுகிறார்.
இது கல்யாண வீடு தேவை இல்லாம எதுவும் பேசாதீங்க என கோபியை மிரட்டுவது போல் பழனிச்சாமி பேசுகிறார் அந்த சமயத்தில் கோபி பழனிச்சாமி இடம் சண்டை பிடிப்பதை செல்வி பார்த்து விடுகிறார். செல்வி இடம் சுதாகர் அவர் யார் எதுக்கு பழனிச்சாமிடம் காரசாரமாக பேசுகிறார் என கேட்க செல்வி அவர்தான் பாக்யாவின் கணவர் என கூறுகிறார். பிறகு கோபி சென்று விடுகிறார். செல்வி பாக்கியா விடம் சென்று நடந்த அனைத்தையும் கூறுகிறார் பழனிச்சாமி இடம் கோபி சண்டை போட்டதையும் கூறுகிறார்.
இனியாவிடம் பேசிக் கொண்டிருந்த பாக்கியா போனை செல்வியிடம் கொடுத்துவிட்டு அந்த ஆல ஒரு கை பார்க்கலாம் என பாக்கியா கிளம்பி போகிறார் ஆனால் சுதாகர் பழனிச்சாமியும் சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது என் நண்பன் சுதாகர் அருமையாக பாடுவார் என பாக்கியவை அழைத்துச் சென்று உட்கார வைத்து பாட்டு பாட சொல்கிறார் சுதாகரை பழனிச்சாமி சுதாகரும் பாட்டு பாடுகிறார் பிறகு பாக்யா கிளம்புகிறார்.
அப்பொழுது செல்வி வந்து அந்த ஆள பாத்தியா அக்கா என கேட்க அவர் மட்டும் என் கைல கிடைச்சா அவ்வளவுதான் எனக் கூறுகிறார் அந்த சமயத்தில் கோபி அங்கிருந்து வருகிறார் பாக்கியலட்சுமி என கூப்பிட ஏய் என கையை நீட்டி கோபியை பார்த்து கூறுகிறார் இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் எபிசொட் முடிகிறது.