வழுக்கி விழுந்த ஜெனி.! பகையை மறந்து பாக்யாவிற்கு போன் செய்த ராதிகா.! பாக்கியலட்சுமி ப்ரமோ வீடியோ.!

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் பெரும் அளவு பார்க்கப்படும் சீரியல் பாக்கியலட்சுமி இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்டில் ராதிகா சமையல் செய்ய வேண்டியதற்கான அனைத்து பொருளையும் வாங்கிக் கொண்டு வந்து சமைக்கிறார் இதை பார்த்த ஈஸ்வரி இங்கதான் பொருள் ஒன்னும் எடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன் அப்புறம் ஏன் எடுத்த என கேட்க இதையெல்லாம் நான் வாங்கிட்டு வந்தேன் அத்தை எனக் கூறுகிறார்.

அதற்கு ஈஸ்வரி யாரு யாருக்கு அத்தை என திட்டுகிறார். அடுத்த காட்சியில் ராதிகா சப்பாத்தி எடுத்துக்கொண்டு கோபியிடம் செல்கிறார். கோபியும் சாப்பிட முடியாமல் சாப்பிட்டு விட்டு அருமையாக இருந்ததாக கூறுகிறார். பிறகு கோபி மற்றும் ராதிகா தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்  ஆனால் ராதிகா தூங்காமல் போனை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஏன் ராதிகா இன்னும் தூங்கலையா என கோபி கேட்கிறார் அதற்கு தூக்கம் வரவில்லை.

மயூ மிஸ் யூ என மெசேஜ் பண்ணி உள்ளார் எனக் கூறுகிறார். உடனே கோபி நீ வேணா அங்க போயிடு என வாய் தவறி கூறி விடுகிறார் அதனால் ராதிகா கோபியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோட் முடிவடைந்த நிலையில் இன்று புரோமோ வீடியோ ஒன்று  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு வரும் பொழுது ஜெனி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விடுகிறார்.

அப்பொழுது வயிற்றில் அடிபட்டுவிட்டது முடியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ராதிகா மேலிருந்து கீழே இறங்கி வருகிறார் ஜெனியை பார்த்து பதற்றமாக உட்கார வைத்துவிட்டு ராதிகா ஜெனி இடம் கேட்கிறார் அப்பொழுது ராதிகா உடனே ஹாஸ்பிடல் போகலாம் என கூற அதற்கு ஜெனி பாப்பாவுக்கு ஏதாவது ஆய் இருக்குமோ என பயமா இருக்கு எனக் கூறுகிறார்.

அதெல்லாம் எதுவும் ஆகாது என ஹாஸ்பிடலுக்கு ஜெனியை அழைத்துச் செல்கிறார் ராதிகா. பாக்கியா கேண்டினில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ராதிகா பாக்கி அவருக்கு போன் செய்கிறார் அப்பொழுது ஃபோனை அட்டென்ட் செய்த பாக்யாவிடம் நான் சொல்றத கேட்டு அதிர்ச்சியாக வேண்டாம் என கூறிவிட்டு ஜெனி கீழே விழுந்ததை கூறுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.