பாக்கியலட்சுமி தப்பு பண்றது மட்டும் யாருக்குமே தெரியாது..! வயித்தெரிச்சலில் புலம்பும் கோபி.! பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட்

baakiyalakshmi-today-episode-may-10
baakiyalakshmi-today-episode-may-10

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் புதுப்புது ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் இங்கிலீஷ் கிளாசில் உட்கார்ந்து பாக்யா மற்றும் அவருடைய  தோழி பாடத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது இன்றைய கிளாஸ் ஓவர் நாளைக்கு பாக்கலாம் என கிளாஸ் டீச்சர் கூறிவிட்டு சென்றுவிடுகிறார் ஆனால் பாக்கியா மற்றும் அவரது தோழி பழனிச்சாமி வரவில்லை என்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். உடனே பழனிச்சாமி சார் வரவில்லை என தோழி கூற ஆமாம் நானும் ரெண்டு மூணு நாளா பாக்குறன் வரவே இல்ல அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார் ரொம்ப முடியலையோ  என  இருவரும் பேசிக் கொண்டிருக்க நாமளே ஏன் பேசிக் கொண்டே இருக்கணும் போன் செய்து கேட்டு விடலாம் என கூறுகிறார்கள்.

உடனே பாக்யாவின் தோழி பழனிச்சாமிக்கு போன் செய்கிறார் அவர் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனக் கூற உடனே நாங்க வருகிறோம் என பாக்கியா  மற்றும் அவரின் தோழி கூறுகிறார் பழனிச்சாமி இடம் அட்ரஸ் அனுப்பக் கூறுகிறார்கள் இருவரும் பழனிச்சாமி வீட்டிற்கு செல்ல அங்கு வேலைக்கார பெண் யார் வேண்டும் என கேட்க உடனே பழனிச்சாமி சார் பார்க்கணும் என கூறுகிறார்கள்.

உள்ளே சென்று பழனிச்சாமி  சார் வந்ததும் அம்மாவை பார்க்கலாமா என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அவரின் அம்மாவை பாக்யா மற்றும் அவரின் தோழி சந்திக்கிறார்கள் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த நேரத்தில் பழனிச்சாமியின் அம்மா பழனிச்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதை நினைத்து கண்ணீருடன் கூற  பாக்யா கண்டிப்பா எல்லாமே நல்லதா நடக்கும் உங்களுக்கும் உடம்பு சரி ஆகி ஜம்முனு நடப்பீங்க எனக் கூற உன்னுடைய வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் என பழனிசாமி அம்மா கூறுகிறார்.

பாக்யா மற்றும் அவரின் தோழி இருவரையும் பழனிச்சாமி சாப்பிட கூறுகிறார் இருவரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறார்கள் அந்த சமயத்தில் பாக்யாவின் தோழி பேக்கை வைத்துவிட்டு வந்ததாக கூற அதனால் பேக்கை எடுக்க உள்ளே செல்கிறார். அப்பொழுது பழனிச்சாமி மற்றும் பாக்கியா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும் மொக்கை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது அந்த சமயத்தில் கோபி காரில் பழனிச்சாமி வீட்டை கிராஸ் பண்ண போகிறார்.

பாக்கியா மற்றும் பழனிச்சாமி பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபி அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் வீட்டை பார்த்து வாய் பிளக்கிறார்  எல்லாரும் கோபி தான் தப்பு பண்றான்னு சொல்றாங்க ஆனா இங்க பாக்கியா தப்பு பண்றது யாருக்குமே தெரியாது என வயித்தெரிச்சலில் கோபி புலம்பிக்கொண்டே இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் பழனிச்சாமியின் பெயரை பார்த்து இவர் பெயர் பழனிச்சாமியா என மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டே இருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.