பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடில் பாக்கியா வீட்டிற்கு பழனிச்சாமி பொண்ணு பார்க்க வந்துள்ளார் ஆனால் கோபி பாக்கியாவை தான் பொண்ணு பார்க்க வந்துள்ளார் என தவறாக புரிந்து கொண்டு அடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் என்னை மட்டும் கல்யாணம் செய்து கொண்டேன் என எல்லாரும் திட்டினாங்க ஆனால் பாக்யா செய்வது மட்டும் சரி என கூறுகிறார்கள் என புலம்பி கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அனைவரிடமும் சொல்லிப் பார்த்த கோபி ஒரு வழியாக பழனிச்சாமி வீட்டிற்கு செல்கிறார் அங்கு சென்ற கோபி பவுன்சர்களை பார்த்து நடுநடுங்குகிறார் அது மட்டும் இல்லாமல் பழனிச்சாமி இடமே இனி பாக்கிவிடம் பேசக்கூடாது பொண்ணு பார்க்க வரக்கூடாது என கூறிவிட்டு வெளியே வருகிறார் அந்த சமயத்தில் எழில் வருகிறார் இருவரும் மோதிக் கொள்கிறார்கள்.
கோபியை பார்த்து நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என கேட்க நீங்கதான் எல்லாரும் பயப்படுறீங்க அதனால நான் தைரியமா கேட்டுட்டு போறேன் பாக்கியாவோட பேசக்கூடாது பாக்கியாவை பொண்ணு பாக்க வரக்கூடாது என கூற உடனே எழில் எங்க அம்மாவை தான் டைவர்ஸ் பண்ணிட்ட இல்ல அப்புறம் எதுக்கு எங்க அம்மா பின்னாடி அலையுறீங்க என கேள்வி எழுப்புகிறார். மேலும் பழனிச்சாமி எழிலுக்கு தன்னுடைய நண்பரை அறிமுகப்படுத்தி வைக்கிறார் பட வாய்ப்புக்காக.
மேலும் வீட்டில் உள்ள அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பாக்கியாவிடம் எழில் உங்களுக்கு பழனிச்சாமி சாரை பிடித்திருந்தால் கல்யாணம் பண்ணி வச்சிடுறேன் எனக் கூற எழிலை பாக்யா ஓங்கி அறைந்து விடுகிறார் நீ எப்படிடா என்ன அப்படி நினைக்கலாம் அது மட்டும் இல்லாம எப்படி இதை மாதிரி கேட்கலாம் என கோபப்படுகிறார். பிறகு எழில் பாக்யாவிடம் சாரி என கேட்கிறார் ஆனாலும் பாக்கியா மன்னிக்க முடியாது எனக் கூற சத்தியம் செய்து சாரி கேட்கிறார். இத்துடன் கடந்த எபிசோடு முடிவடைந்த நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அந்த ப்ரோமோ வீடியோவில் கோபி பாக்கியாவிடம் சென்று எதற்கு ராதிகாவை எப்ப பார்த்தாலும் டிஸ்டர்ப் பண்ணுகிறாய் என கேட்க அதற்கு பாக்கியா இனிமே நான் அப்படி தான் பண்ணுவேன் நீங்க எதுக்கு பழனிச்சாமி சார் வீட்டிற்கு போய் பேசினீங்க நான் யாரோட பேசினா உங்களுக்கு என்ன அவங்க கிட்ட எல்லாம் போய் பேசுவீங்களா உங்களுக்கு அசிங்கமாக இல்லையா.
இன்னொரு தடவை இத மாதிரி நடந்துச்சுன்னா நான் மனுசியா இருக்க மாட்டேன் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என கோபியை பாக்கியா மிரட்டுகிறார். இங்க இருந்து போ என வேகமாக கத்துகிறார் அத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.