கோபியால் வெடித்த பிரச்சனை.. மாமியாரை மிரட்டும் மருமகள்… வீட்டை விட்டு வெளியே செல்ல போகும் பாக்கியா.!

baakiyalakshmi-today-promo october 15
baakiyalakshmi-today-promo october 15

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடில் எழில் திருமணம் செய்து கொண்ட அமிர்தாவின் கணவர் இறந்து போனதாக கூறியவர் மீண்டும் வந்துவிட்டார்.. அதனால் பெரிய பூகம்பம் வெடித்துள்ளது இதனால் இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கணேசன் அப்பா, அம்மா பாக்யாவை அழைத்து பேசுகிறார்கள் அதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

மற்றொரு பக்கம் மாலினி செழியன் வீட்டிற்கு வந்து செழியனை தொல்லை செய்ய ஆரம்பித்து விட்டார். அப்பாவை போல் செழியன் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கணேஷ் அமிர்தாவை சந்தித்து அழைத்து செல்வாரா? அல்லது எழிலுடன் தான் வாழ்வாரா என பயங்கர எதிர்பார்ப்பில் போய்க்கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ  வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரிக்கு போன் செய்து ஹாஸ்பிடலில் இருக்கிறேன் என கூறுகிறார். இதனால் ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து என்ன ஆனது என கேட்க ஹார்ட் அட்டாக் வந்ததாக கோபி கூறுகிறார்.

பதறி அடித்து போய் கோபியை பார்க்க ஈஸ்வரி செல்கிறார் நீ இங்க இருக்கிறதால் தான் உனக்கு இவ்வளவு பிரச்சினையும் வருகிறது வா நம்ம வீட்டுக்கு போகலாம் என கோபியை பாக்கியா அழைக்கிறார். வீட்டிற்கு சென்ற ஈஸ்வரி நான் கோபியை அழைத்துக் கொண்டு இங்கே வரப் போகிறேன் என கூறுகிறார் இதனால் எழில் அதிர்ச்சி அடைந்து எக்காரணத்தைக் கொண்டும்  அவர் இங்கு வரவே கூடாது என கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் பாக்யாவும் அவர் இந்த வீட்டில் அடி வைக்க போற சமயத்தில் நான் இந்த வீட்டை விட்டு கிளம்பி விடுவேன் என ஈஸ்வரியை பாக்கியா மிரட்டுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது. ஈஸ்வரி தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக பாக்யாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பப் போகிறாரா.? அல்லது பாக்யா வீட்டிலேயே இருக்கட்டும் என கோபியை அழைக்காமல் அமைதியாக இருக்கப் போகிறாரா.? என்பதை இனி வரும் எபிசோடில் காணலாம்.