விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி எபிசோடில் போலீஸ் வந்து போன பிறகு ஈஸ்வரி கோபியிடம் கண்ணீரில் கதறுகிறார். அதனால் கோபமாக கோபி ராதிகாவுடன் சென்று என் அம்மாவை வெளியே போக சொல்ற அளவுக்கு என்ன நடந்துச்சு என கேட்க உடனே ராதிகா காபி குடிக்க போனா காபியை தட்டி விடுறாங்க என்ன ஒரு தேவையில்லாத பொருளை தூக்கி போடுற மாதிரி நீங்க தூக்கி போடுவிங்களா இப்படி எல்லாம் பேசுறாங்க என ராதிகா கூறுகிறார்.
அது மட்டும் இல்லாமல் எனக்கு யார் இருக்கா என ராதிகா அழுகிறார் உடனே கோபி ஏன் ராதிகா நான் இருக்கேன் என்கிட்ட சொல்ல வேண்டியது தானே நான் கேட்டிருப்பேன்ல எனக் கூற உடனே ராதிகா கிழிப்பீங்க என கோபியை பார்த்து கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் என்ன கேவலமானவன்னு சொல்றாங்க, பிரிக்க வந்தவன்னு சொல்றாங்க இன்னும் பாக்யாவை மருமகன்னு சொல்றாங்க ஏதாவது ஒரு வார்த்தையாவது நீங்க கேட்டு இருப்பீங்களா என கோபியை பார்த்து திட்டுகிறார்.
இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன் கல்யாணம் பண்ணிக்க வேண்டான்னு கேட்டீங்களா கோபி ஏதோ சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க இப்படி மரியாதை இல்லாம இப்ப நான் நிக்கிறேன் இதுக்கு தான் என்ன கல்யாணம் பண்ணிட்டீங்களா கோபி என ராதிகா கண்ணீருடன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் உங்க அம்மா மறுபடியும் பாக்கியா கூட சேர்த்து வைப்பேன்னு சொல்றாங்க அப்போ உங்களுக்கு அந்த எண்ணம் இருக்கா கோபி சொல்லுங்க கோபி என்ன சட்டையை பிடித்து கதறுகிறார். உடனே கோபி அந்த இடியட் கூட என்னால வாழ முடியாது என கூற அதற்கு ராதிகா பாக்கியா இடியட் கிடையாது கோபி நான் தான் பெரிய இடியட் என கூறுகிறார்.
அடுத்த காட்சியில் பாக்யா, ஈஸ்வரி, ராமமூர்த்தி, எழில், அமிர்தா, செழியன் ஜெனி என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது பாக்கியா வீட்டை விட்டு நான் போகிறது தான் சரி என்பது போல் பேசுகிறார் ஆனால் ஈஸ்வரி அவங்க பேசியதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத நாங்க இருக்கோம் என்பது போல் பேசுகிறார்கள் ஆனாலும் பாக்கியா நான் என் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பது போல் தெரிகிறது எனக் கூறுகிறார்.
ஆனால் ஈஸ்வரி மறுபடியும் பாக்யாவிடம் சத்தியம் வாங்கி இங்கிருந்து போகக்கூடாது என்பது போல் கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் ராதிகா தன்னுடைய மகள் மையுவை கூட்டிக்கொண்டு வருகிறார். அப்பொழுது மயூ வீட்டிற்குள் வருவதற்கு தயங்குகிறார். ஆனால் ராதிகா இங்கு யாரும் உன்னை எதுவும் சொல்ல முடியாது என அழைத்துக் கொண்டு போகிறார் கிச்சனில் சென்றவுடன் நீ ஏன் பயப்படுற இங்க யாரோ இருக்கும் பொழுது நீ ப்ரீயா இரு என பாக்யாவை குத்தி காட்டுவது போல் பேசுகிறார்.
அதேபோல் ஈஸ்வரி நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் போலீஸ்க்கும் பயப்பட மாட்டேன் எனக் கூற யாரு பயந்தால் எனக்கு என்ன பயப்படாம இருந்தா எனக்கு என்ன இனிமே யாரும் எதுவும் பேச முடியாது என்பது போல் கூறி விடுகிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகள் மயூவை அழைத்துக் கொண்டு ராதிகா மொட்டை மாடிக்கு செல்கிறார். ஆனால் ஈஸ்வரி இந்த மாதிரி ஆள நான் வாழ்க்கையில பார்த்ததே கிடையாது நம்ம வீட்ல நம்மளால நிம்மதியா இருக்க முடியலையே என்பது போல் பீல் பண்ணுகிறார். அதற்கு பாக்கியா நமக்கான நேரம் வரும் அத்தை கொஞ்சம் அமைதியா இருங்க சண்டை வேணாம் என கூறி விடுகிறாற்.
மேலும் கிச்சனில் அனைவரும் கலந்து கொண்டிருக்கும் பொழுது ஜெனி இந்த வீட்டை விட்டு கிளம்பி விடலாமா வேறு எங்கேயாவது போய்விடலாம் என கூற அதற்கு பாக்கியா அத்தை மாமா இந்த வீட்டிலேயே வாழ்ந்துட்டாங்க அவங்களால வேற ஒரு இடத்திற்கு போய் நிம்மதியா இருக்க முடியாது கஷ்டப்படுவாங்க அதனால அவங்களுக்காக நாம் இங்கே இருந்து தான் ஆக வேண்டும் என்பது போல் பாக்கியா கூறுகிறார். இன்னும் 18 லட்சம் கொடுத்தா அவங்களே இங்கிருந்து துரத்தி விடலாம் இதுதான் அதுக்கான வழி என்பது போல் ஏழில் கூற பாக்யாவும் ஆமாம் எனக் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.