Baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்யா இனியாவின் ரிசல்ட் என்பதால் சமையலில் கவனம் செலுத்துவதை விட்டு விடுகிறார் அதனால் பாயாசம் தீஞ்சி போகிறது இந்த நிலையில் நிச்சயதார்த்தம் நிற்கும் நிலையில் வந்து விடுவதால் பெண் வீட்டில் உள்ளவர்கள் பாக்கியாவை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் எனவும் மிரட்டுகிறார்கள்.
மாப்பிள்ளை வீட்டிற்கும் பொண்ணு வீட்டிற்கும் மிகவும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த சமயத்தில் இனியா முதல் மார்க் எடுத்து உள்ளதால் பள்ளியிலிருந்து அழைக்கிறார்கள் இதனால் பள்ளிக்கு செல்கிறார் இனியா அவருடன் ஏழில் ராமமூர்த்தி என அனைவரும் செல்கிறார்கள் இந்த சமயத்தில் கோபியும் பள்ளிக்கு செல்கிறார் இனியா பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளதால் அவருக்கு பாராட்டு விழா வைக்கிறார்கள்.
இதற்கு இனியாவின் அப்பா அம்மாவை பள்ளி நிர்வாகம் கூப்பிட அந்த நேரத்தில் கோபி அந்த இடியட் இப்ப கிடையாது அதனால என் குழந்தையோட ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ணலாம் எனக் கூறிவிட்டு மேடைக்கு அழைக்கும் பொழுது இரண்டு பேரும் ஜோடியாக போன தான் நல்லா இருக்கும் என ராதிகாவையும் அழைத்து செல்கிறார் இதை பார்த்த இனியா அதிர்ச்சி அடைகிறார்.
அது மட்டும் இல்லாமல் ராமமூர்த்தி எழில் என அனைவரும் கடுப்பாகிறார்கள். இனியா வீட்டிற்கு வந்ததும் பழனிச்சாமியும் வருகிறார் அப்பொழுது அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாக்யா எங்கே என கேட்க இவ்வளவு நேரம் வராமல் இருக்கவே மாட்டங்க ஆனால் ஏன் இவ்வளவு நேரம் வரவில்லை என்பது போல் அனைவருக்கும் சந்தேகம் வருகிறது உடனே பாக்யாவை மீட்க ராமமூர்த்தி பழனிச்சாமியை அழைத்துக் கொண்டு செல்கிறார் .
அதேபோல் கல்யாண வீட்டில் அடைத்து வைத்திருக்கும் பாக்கியாவை பழனிசாமி பாக்யாவை காப்பாற்றி அழைத்துக் கொண்டு வருவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.