பாக்யாவை போலீஸில் சிக்க வைக்க கோபி செய்த திருட்டு வேலை.! பழனிச்சாமி இடம் சிக்கியது எப்படி.! பாக்யலட்சுமி பரபரப்பான எபிசோட்.

baakiyalakshmi today episode september 16
baakiyalakshmi today episode september 16

baakiyalakshmi today episode September 16 : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது ஆனால் கதையில் சற்று சுவாரசியம் குறைந்ததால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டியது இந்த நிலையில் சுவாரசியத்தை அதிகரிக்க புதிய கதாபாத்திரத்தை சேர்த்துள்ளார்கள் பாக்கியலட்சுமி  சீரியல் குழு.

அமிர்தாவின் கணவர் இறந்து போனதாக கூறிய வரை மீண்டும் உயிருடன் வந்துள்ளார் இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் எபிசோடில் பாக்யா கார் ஓட்டிக்கொண்டு வரும்போது வயதான ஒரு  ஒருவர் சைகளில் வந்து விழுந்து விடுகிறார் ஆனால் பாக்கியாதான் அடித்தார் என அனைவரும் கூறிவிடுகிறார்கள் அதனால் போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார்.

போலீஸ் லைசன்ஸ் இருந்தால் விட்டுவிடுவார்கள் ஆனால் லைசன்ஸ் வீட்டில் இருக்கிறது உடனே போன் செய்து தன்னுடைய மாமனார் இடம் லைசென்ஸ் போட்டோ எடுத்து அனுப்புமாறு கூறுகிறார் உடனே ராமமூர்த்தி லைசன்ஸ் போட்டோ எடுக்க அமிர்தா உடன் கிளம்பி வீட்டிற்கு செல்கிறார் இதனை காதில் வாங்கிக் கொண்டிருந்த கோபி அவர்களுக்கு முன்பே திருட்டுத்தனமாக வீட்டிற்கு சென்று பாக்யா லைசென்ஸ்சை எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பி விடுகிறார்.

அதே போல் கேண்டின்கு வந்த கோபியை தேடிக் கொண்டு ராதிகா வருகிறார் இன்னும் இங்கு வரவில்லையா என போனில் கேட்கிறார் அதற்கு கோபி எனக்கு ஆபிஸில் சின்ன வேலை இருப்பதாக கூறிவிட்டு சமாளித்துவிட்டு பாக்கியா வீட்டிற்கு செல்கிறார். ராதிகா அமிர்தா எங்கே என அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அமிர்தா மற்றும் ராமமூர்த்தி இருவரும் வீட்டிற்கு வந்து எவ்வளவு தேடியும் லைசன்ஸ் கிடைக்கவில்லை ஆனால் அதனை திருட்டுத்தனமாக கோபி எடுத்து விட்டார் என்பது யாருக்கும் தெரியவில்லை இந்த நிலையில் தன்னுடைய நண்பனை ஹோட்டலுக்கு வர சொல்லி பாக்கியா என்ன எவ்வளவு இன்சல்ட் பண்ணா, என்ன எவ்வளவு அசிங்கப்படுத்தினார் 25 வருஷமா என் காசுல தான் சாப்பிட்டுகிட்டு இருந்தா இப்ப புதுசா சம்பாதிக்கிறேன்னு ஓவரா பேசுற என சந்தோஷத்தில் பேசிக்கொண்டிருக்கிறார் கோபி.

என்ன சந்தோஷம் என அவருடைய நண்பர் கேட்க நடந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் பழனிச்சாமி பின்னாடி இருந்து நடந்து வந்து கொண்டிருக்கிறார் கோபி லைசென்ஸ் எடுத்ததை தன்னுடைய நண்பரிடம் கூறும்பொழுது பழனிச்சாமி கேட்டு லைசென்ஸ் போட்டோ எடுத்து அனுப்பப் போகிறாரா இல்லையா என்பதை திங்கட்கிழமை எபிசோடில் தெரியவரும்.