Baakiyalakshmi Today Episode October 26 : இன்றைய எபிசோடில் செழியனை பார்க்க பாக்கியா வீட்டிற்கு வந்த மாலினி ஜெனி குழந்தையை மறைத்து வைத்துவிட்டு குழந்தை என்கிட்ட இல்லை என்று எல்லோரையும் பதற வைத்துள்ளார். உடனே எல்லோரும் ஷாக்காகி குழந்தையை தேடிக் கொண்டிருக்கும் போது மாலினி மட்டும் கூலாக நிற்கிறார்.
பிறகு மாடிக்கு போய் குழந்தையை தூக்கிட்டு வந்து விளையாட்டுக்கு பண்ணுனேன் என்று சொல்கிறார் இதை கேட்டு ஆத்திரமடைந்த பாக்கியா ஈஸ்வரி எல்லோரும் மாலினியை திட்டுகின்றனர் பிறகு பாக்கியா மாலினியை பார்த்து நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் நீ பண்றது ஒண்ணுமே சரி இல்லை இனிமே நீ இந்த வீட்டுக்கு வரக்கூடாது.
உன் பேக் எடுத்துட்டு கிளம்பு என்று கோபமாக சொல்ல மாலினியும் வீட்டை விட்டு போய்விட்டார். இது தெரிந்த கோபி பாக்யாவிடம் என்னதான் இருந்தாலும் அந்தப் பொண்ண இப்படி கோபமா பேசி அனுப்பி இருக்க கூடாது அதனால செழியன் வேலைக்கு தானே பிரச்சனை வரும் பொறுமையா பேசி இருக்கலாமே என்று சொல்கிறார்..
அடுத்து பழனிச்சாமி ஒரு கோவிலுக்கு வருகிறார் அந்த கோவில் முக்கியஸ்தர்கள் பழனிச்சாமி இடம் வர வெள்ளிக்கிழமை கோவிலில் அன்னதானம் வச்சிருக்கோம் என்று சொல்ல பழனிச்சாமி அன்னதானத்துக்கு யார் சமைக்கிறார்கள் என கேட்பதற்கு அவர்கள் இனிமே தான் ஆள் பாக்கணும் என்று சொல்ல..
எனக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க இருக்காங்க ஈஸ்வரி கேட்டரிங் சர்வீஸ் வச்சிருக்காங்க அவங்க கிட்ட கேளுங்க நல்லா சமைப்பாங்க நான் சொன்னதா சொல்ல வேணாம் நீங்களே போய் பாருங்கள் என்று சொல்வதும் அவர்கள் சரி நாங்க பார்க்கிறோம் என்று சொல்கின்றனர். அடுத்து செழியன் மாலினி வீட்டிற்கு போகிறார்..
அங்கு மாலினி செழியனிடம் நான் என்ன பெருசா தப்பு பண்ணேன் ஏன் எல்லோரும் என்னை திட்டுறாங்க என்று கேட்க நீ என் வீட்டுக்கு வந்து என்னை டார்ச்சர் பண்ணுன இருந்தாலும் இன்னைக்கு நீ பண்ணது ரொம்ப ஓவரு எனக்கு என்னோட ஜெனி, குழந்தை, அம்மா, குடும்பம் தான் ரொம்ப முக்கியம்..
அவங்க முன்னாடி நீ எல்லாம் ஒண்ணுமே இல்லை என்று மாலினியை பார்த்து சொல்ல உடனே மாலினி நீ என்கிட்ட பழையபடி வீட்டுக்கு வந்து பேசணும் இல்லனா நம்ம நெருக்கமாய் இருக்கிற போட்டோவை உங்க குடும்பத்துல காண்பிப்பேன் என அந்த புகைப்படத்தை செழியனிடம் காண்பிப்பதும் செழியன் பதறிப் போகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.