Baakiyalakshmi today episode October 25 : இன்றைய எபிசோடில் மாலினி செழியனுக்கு தொடர்ந்து போன் பண்ணி கொண்டிருக்கிறார்.. வீட்டை விட்டு வெளியே வந்து ஏன் போன் பண்ணி டார்ச்சர் பண்ற நான் போன் எடுக்கலைன்னா விட மாட்டியா என்று கேட்க ஒரு தடவை போன் பண்ணும் போதே நீ எடுத்து என்ன நான் ஏன் தொடர்ந்து போன் பண்றேன்..
நான் ஏற்கனவே சொன்னது தான் நான் பேச்சு மாறமாட்டேன். நீ என்னை பார்க்க வரலைன்னா நான் உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வருவேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார் இதை தூரத்தில் இருந்து பாக்கியா பார்த்து முறைக்கிறார் உடனே சரி என போனை கட் பண்ணுகிறார்.. அடுத்த நாள் காலையில் கோபி வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது பாக்கியாவும் அங்கு வாக்கிங் வருகிறார்.
அப்பொழுது ஒருவர் கோபியை பார்த்து என்ன உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சுன்னு சொன்னாங்க என்று கேட்க அது ஹார்ட் அட்டாக் இல்ல ஸ்ட்ரஸ் ஆள வந்த பேனிக் அட்டாக் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது பாக்கியாவும் அந்த இடத்திற்கு வர அந்த நபர் பாக்கியாவிடம் என்ன கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்துட்டுசாம் என்று கேட்க..
என்கிட்ட சொன்னீங்கன்னா நான் என்ன டாக்டரா என்று நக்கலாக பேசிவிட்டு பாக்கியா கிளம்பி விட்டார்.. பிறகு கோபி ரோட்டில் நடந்து வரும் பொழுது கிரெடிட் கம்பெனி காரர்கள் கோபியை பார்த்து எப்ப சார் பணம் கட்டுவீங்க என்று கேட்க இன்னும் ஒரு மாதத்தில் பணம் கட்டிடறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு அவர்கள் இன்னும் ஒரே வாரத்தில் நீங்க பணம் கட்டியே ஆகணும் என்று ஸ்ரிட்டாக சொல்லிவிட்டு சென்று விட்டனர்.. பிறகு ராதிகாவை பார்த்ததும் கோபி ராதிகாவிடம் போய் பேசிக் கொண்டிருக்கிறார்.. அப்பொழுது ராதிகா கோபி இடம் எப்ப நம்ம வீட்டுக்கு வருவீங்க, அங்கே இருந்திருவீங்களா என கேட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இதைப் பார்த்து ஈஸ்வரி அங்க என்ன பேச்சு வாக்கிங் போனா வீட்டிற்கு வர மாட்டியா என்று கோபமாக பேச உடனே கூபி நான் போன் பண்றேன் ராதிகா என்று சொல்லிவிட்டு பாக்கியா வீட்டிற்கு வந்து விட்டார்.. அடுத்து மாலினி செழியணை பார்க்க வீட்டிற்கு வருகிறார்.. அப்பொழுது செழியன் அங்கு இல்லை..
அதனால் மாலினி நான் போன் பண்றேன் உடனே வீடு இருக்கு வருவாரு பாருங்கள் என்று சொல்லிவிட்டு செழியனுக்கு போன் பண்ண செழியனும் கொஞ்ச நேரத்தில் வீட்டிற்கு வந்து விட்டார்.. பிறகு பாக்யா நீங்க ஹாலிலேயே உட்கார்ந்து வேலை பாருங்கள் என்று மாலினியிடம் சொல்கிறார் பிறகு மாலினி ஜெனி கிட்ட குழந்தையை குடுங்க நானே வசிக்கிறேன் என்று கேட்கிறார்.
அடுத்து செழியன் ஆபீஸிலிருந்து ஒரு போன் கால் வருவதால் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மாலினி குழந்தை இடம் நம்ம கண்ணாமூச்சி விளையாடலாமா என்று குழந்தையை தூக்கிக் கொண்டு போய் மாடியில் வைத்துவிட்டு கீழே வந்து விட்டார்..
பிறகு செழியன் மாலினி கிட்ட எங்க குழந்தை என்று கேட்க செல்வி அக்கா தான் வாங்கிட்டு போனாங்க என்று மாலினி சொல்கிறார் ஆனால் செல்வி என்கிட்ட அவங்க குழந்தை கொடுக்கவே இல்லை என்று சொல்ல எல்லோரும் குழந்தையை தேடுகின்றனர்.. மாலினி மட்டும் கூலாக நிற்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..