Baakiyalakshmi today episode October 20 : இன்றைய எபிசோடில் கோபிக்கு சாதாரண பேனிக் அட்டாக் வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி பிறகு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்.. இந்த விஷயம் தெரிந்த ஈஸ்வரி நான் கோபியை உடனே பார்த்தே ஆக வேண்டும் என நடுராத்திரியில் இனியாவையும், செழியனையும் கூட்டிக்கிட்டு ராதிகா வீட்டிற்கு போய் கதவை தட்ட ராதிகா உடைய அம்மா பெல் அடிக்க தெரியாதா?
இப்படி கதவை தட்டி சத்தம் போடுறீங்களே என்று கேட்க இப்ப அதுதான் முக்கியமா என் பையன பாக்கணும் என ஈஸ்வரி உள்ளே வந்து கோபியிடம் எப்படிப்பா இருக்க, திடீர்னு நெஞ்சுவலின்னு சொல்லிட்ட எனக்கு பதட்டமா போயிடுச்சு என பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது கோபி பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்லமா தான் நான் வீட்டுக்கு வந்துட்டேன் இல்ல சாதாரண நெஞ்சு வலி தான் என்று சொல்கிறார்.
சாட்சி கையெழுத்து போட்டுட்டு இங்க வந்து நிக்கிற.. முத்துவின் கோபத்திற்கு ஆளாகும் மீனா
உடனே ராதிகாவுடைய அம்மா பேனிக் அட்டாக்கும் ஹார்ட் அட்டாக் வித்யாசமே தெரியல என்று நக்கல் பண்ணுகிறார்.. பிறகு ஈஸ்வரி கோபியிடம் ராதிகாவை பார்த்து இவ கூட இருந்தா ஸ்ட்ரெஸ் ஆகாம எப்படி இருக்கும்.. அந்த வீட்ல இருந்தா வரையும் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லா இருந்த பேசாம கிளம்பி என் கூட அந்த வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார்.
அதற்கு கோபி இல்ல அம்மா நான் இங்கயே இருக்கேன் எனக்கு தான் டாக்டர் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்களே என்று சொல்ல.. ஈஸ்வரி நான் காலையில வந்து உன்னை கூப்பிடுவேன் நீ அங்க வரணும் என்று சொல்லிவிட்டு பாக்கியா வீட்டிற்கு வந்து ஈஸ்வரி என் பையனை பார்த்தா எனக்கு ரத்தக்கண்ணீர் வருது அவ்வளவு கஷ்டமா இருக்கு..
முழு நேர அம்மாவாக மாறி குழந்தையை தாலாட்டும் நயன்தாரா.. வைரல் வீடியோ
அதனால அவன நான் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம் என்று இருக்கிறேன் என சொல்கிறார் இதற்கு செழியன் அவரைப் பார்த்து நம்ம வருத்தம் மட்டும் தான் படலாம் நம்ம வீட்டுக்கு எல்லாம் வருது சரி வராது பாட்டி என்கிறார்.. எழிலும் அவர் எவ்வளவு தப்பு பண்ணி இருக்காரு இந்த வீட்டுக்கு எல்லாம் அவர் வரக்கூடாது என்கிறார்.
உடனே பாக்கியா அவர் இந்த வீட்டுக்கு வந்தா நான் இந்த வீட்டை விட்டு எங்கேயாவது போயிடுவேன் என கோபமாக பேசுவதும் ஈஸ்வரி இவ்வளவு நாள் உனக்கு சப்போர்ட்டா இருந்தேன் ஆனா பெத்த புள்ள கஷ்டப்படுவதை பார்க்கும் போது என்னால சும்மா இருக்க முடியல அதனால இந்த வீட்டுக்கு நான் கூட்டிட்டு வந்தே தீருவேன் என்று இருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது