நீ என் பொண்டாட்டி டி எவனையோ கட்டி புடிச்சிட்டு போற.! எழில் இடுப்பை இறுக்கி பிடித்தபடி அமிர்தா.! புழுவாய் துடித்த கணேசன்.

baakiyalakshmi today episode october 13
baakiyalakshmi today episode october 13

Baakiyalakshmi today episode : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு பாக்கியா பழனிச்சாமி வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது அவருடைய அம்மாவிற்கு உடம்பு சரியில்லாததால் சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கிறார் இதை பார்த்த பாக்யா என்னமா உடம்பு சரியில்லையா என விசாரிக்கிறார் அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா வயசான இதெல்லாம் வரும் தானே என பேசுகிறார் பழனிச்சாமியின் அம்மா.

உடனே அடுத்த காட்சியில் பழனிச்சாமி பாக்கியா இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எப்படி மேடம் இவ்ளோ கஷ்டத்தையும் சமாளிக்கிறீங்க உங்களுக்கு ஏதாவது பணம் தேவை என்ன சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன் நண்பனுக்கு நண்பன் ஹெல்ப் பண்றதுல தப்பே கிடையாது என்பது போல் பேசுகிறார். ஆனால் பாக்கியா இது நானே ஆரம்பித்தேன் என்னாலேயே எல்லா பிரச்சனையும் வருது நானே அதை சரி பண்ணிக்கிறேன் என கூறி விடுகிறார்.

அடுத்த காட்சியில் பாக்கியா எழில், அமிர்தா, மூவரும் வெளியே நிற்கிறார்கள் அப்பொழுது நீங்கள் பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க நான் நிலா பாப்பாவை பார்த்துக் கொள்கிறேன் என எழில் மற்றும் அமிர்தாவை அனுப்பி வைக்கிறார்கள். பாக்யா உள்ளே போனவுடன் ஏழில் அமிர்தா இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள் இந்த சமயத்தில் கணேஷ் எழில் அமிர்தா இருவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தான் தாலி கட்டிய அமிர்தா எழில் இடுப்பை இறுக்கி அணைத்தபடி செல்வதை பார்த்த கணேசன் புழுவாய் துடிக்கிறார். எழில் அமிர்தா இருவரும் பைக்கில் போனதை பார்த்து ஓடி வருகிறார் கணேசன் அந்த சமயத்தில் பாக்கியா கணேசனை பார்த்து விடுகிறார் உடனே நீ யார் என கேட்கும் பொழுது கணேசன் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.

பாக்கியாவிற்கு கணேசன் மீது சந்தேகம் வந்துவிட்டது. இந்த நிலையில் அடுத்த காட்சியில் ராமமூர்த்தி நிலா பாப்பாவை பார்க்கிற்கு அழைத்து செல்கிறார் அப்பொழுது கணேசன் அங்கு வந்து நான் பாப்பா கூட கொஞ்ச நேரம் விளையாடலாமா என கேட்கிறார் உடனே ராமமூர்த்தியும் நான் இங்கதான் இருக்கேன் விளையாடுங்க ஒன்னும் பிரச்சனை கிடையாது எனக் கூறி விடுகிறார்.

நிலா பாப்பா கணேசன் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். பிறகு அடுத்த காட்சியில் பாக்யா செல்விக்கு சம்பளம் கொடுக்கிறார் அதுமட்டுமில்லாமல் இன்னும் எவ்வளவு பணம் தேவை என அமிர்தா கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார் மேலும் அமிர்தா அந்த கேண்டீன் காசு வந்து விட்டதா என கேட்க இன்னும் வரவில்லை என பாக்யா கூறுகிறார் நான் வேணால் மெயில் போட்டு செக் பண்ணட்டுமா எனக்கு பேசுகிறார் அதையும் செய் என பாக்யா கூறுகிறார்,

அடுத்த காட்சியில் கணேசன் அம்மா மற்றும் அப்பா இருவரும் சென்னைக்கு வந்துள்ளார்கள். கணேசனுக்கு கால் பண்ணி உன்னை உடனடியாக பார்க்க வேண்டும் நாங்கள் சொல்வதை கொஞ்சம் கேள் என பேசுகிறார்கள் உடனே அவர் இருக்கும் அட்ரஸை கூறுகிறார் அங்கு கணேசனின் அப்பா அம்மா இருவரும் கிளம்பி போகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.