Baakiyalakshmi today episode October 12 : இன்றைய எபிசோடில் காலையில் எழுந்ததும் அமிர்தா வாசல் தெளித்துக் கோலம் போட்டுக்கிட்டு இருக்கிறார் அப்பொழுது வெளியில் இருந்து கணேஷ் பார்த்துக் கொண்டிருக்கிறார் அங்கு வந்த பாக்கியலட்சுமி கணேஷை பார்த்ததும் கணேஷ் மறைந்து கொண்டார்.. ஆனால் பாக்கியா நேத்து வந்து அதே பையன் இன்னைக்கு வந்து இருக்கானே யாரா இருப்பான் என்று யோசிக்கிறார்.
அடுத்து ஈஸ்வரி, ராமமூர்த்தி, ஜெனி, செழியன், எழில், அமிர்தா என எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது மாலினி அங்கு வருகிறார் பாக்கியலட்சுமி கதவை திறந்து யாரென்று பார்க்கும் பொழுது மாலினி ஹாய் ஆன்ட்டி செழியன் இருக்காரா என்று கேட்க உடனே செழியன் பாதி சாப்பாட்டில் பதறி அடித்து வெளியே ஓடி வருகிறார்.
பிறகு பாக்கியா நீங்க யார் என்று கேட்க நான் செழியன் கூட வேலை பாக்குற பிரென்ட் செழியனுக்கு பாப்பா பொறந்திருக்குனு சொன்னாங்க அதனால் பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று சொல்லிவிட்டு வீட்டு உள்ளே வருகிறார். உள்ளே வந்ததும் தாத்தா பாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார் அடுத்து ஜெனியை பார்த்தும் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க நான் செழியனோட பிரண்டு மாலினி என்று சொல்கிறார்.
உடனே ஜெனியும் நீங்க தான் மாலினியா சொல்லி இருக்காரு என்று சொல்ல எழில் இதுவரையும் அண்ணன் பிரண்டுன்னு யாரையுமே வீட்டுக்கு அழைச்சிட்டு வந்ததில்லை நீங்க தான் முதல் ஆளு என்று சொல்ல இப்ப கூட செழியன் என்ன கூப்பிடல நானா தான் வீட்டுக்கு வந்தேன் என மாலினி சொல்லி விட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.
அடுத்து எல்லோரும் சாப்பிட செல்வதால் மாலினி சாப்பிட்டுவிட்டு சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கு சமையல்ல ஏதாவது டவுட் இருந்தா உங்ககிட்ட கேட்கலாமா ஆன்ட்டி என பாக்கியாவின் நம்பரை வாங்கி வைத்துக் கொள்கிறார் பிறகு ஜெனி இடமும் உங்க நம்பரும் குடுங்க என அதையும் வாங்கி கொள்கிறார்.. பிறகு செல்வி மேல் இருந்து குழந்தையை தூக்கிட்டு வருவதும் குழந்தையை வாங்கி மாலினி கொஞ்சி விட்டு உனக்காக நிறைய கிப்ட் வாங்கிட்டு வந்து இருக்கேன்.
முத்துவிடம் இருந்து தப்பிக்க பிச்சைக்காரன் போல் நடித்த மனோஜ்.! சிறகடிக்க ஆசை – இன்றைய எபிசோட்
அதெல்லாம் பாத்துட்டு உங்க அப்பா கிட்ட எப்படி இருக்குன்னு சொல்லு என குழந்தையிடம் ஜாலியாக பேசிவிட்டு மாலினி கிளம்பி விட்டார்.. வெளியே வந்ததும் மாலினியிடம் செழியன் நீ ஏன் வந்த என்று கேட்க நீ என் வீட்டுக்கு வரல அதனாலதான் நான் உன் வீட்டுக்கு வந்தேன் இனிமே அடிக்கடி இது மாதிரி வருவேன் ஆனா எல்லா தடவையும் உன்ன பத்தி சொல்லாம இருப்பேன்னு நினைக்காத என்று வான் பண்ணிவிட்டு போகிறார்.