செழியனை மடக்கி ஜெனிக்கு சக்காளத்தியாக வரப்பார்க்கும் மாலினி.! ஒரே விஷயத்தில் ஒன்று சேர்ந்த கோபி பாக்கியா – பாக்கியலட்சுமி

baakiyalakshmi today episode october 10
baakiyalakshmi today episode october 10

baakiyalakshmi today episode : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் மாலினி செழியனை நச்சரித்து வருவதால் கொஞ்சம் உஷாராக முடிவு செய்கிறார் அதனால் எப்படியாவது மாலினியை கட் பண்ணி விட வேண்டும் என முடிவு செய்கிறார். ஆனால் மாலினி ஜெனிக்கு குழந்தை பிறந்தப்ப கூட விடாமல் ஃபோன் செய்து செழியனை தொந்தரவு செய்கிறார்.

இதனால் பொறுமையை இழந்த செழியன் நேரில் கூப்பிட்டு பேச முடிவு செய்து அவரிடம் பேசுகிறார் இது ரெண்டு பேருக்குமே சரி வராது எனக்கு குழந்தை வேற பிறந்திருச்சு இனிமே ஒரு போதும் ஜெனியையும் குழந்தையையும் விட்டு பிரிந்திருக்க முடியாது எனக் கூறுகிறார். ஆனால் மாலினி நாம கல்யாணம் செய்து கொள்ளலாம் எனக் கூற உடனே அதிர்ச்சடைகிறார் செழியன்.

உன்ன பாக்காம இருக்க முடியல.. நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் செழியனுக்கு ஷாக் கொடுத்த மாலினி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசொட்

உன் விஷயத்தில் நான் அப்படி யோசித்து பார்த்ததே கிடையாது உன்னை எனக்கு அவாய்ட் பண்ண தெரியல நான் இதுவரைக்கும் உன்கிட்ட எதையும் மறைக்கல என பற்றி எல்லாமே தெரியும் எனக்குன்னு ஒரு குழந்தை இருக்கு அதை பெத்துக்க ஜெனி எவ்ளோ கஷ்டப்பட்டான்னு எனக்கு தான் தெரியும் இனிமே அவளை விட்டு பிரிய முடியாது இனிமே நம்ம எப்பொழுதும் வேலை விஷயமாக கூட மீட் பண்ண வேண்டாம் என கூறிவிட்டு செல்கிறார்.

ஆனால் மாலினி உன்னை என்னையும் பற்றி ஆயிரம் கனவு கண்டேன் என கூற உடனே செழியன் இனிமே நம்ம மீட் பண்ண வேண்டாம் குட் பாய் என கூறிவிட்டு செல்கிறார் மற்றொரு பக்கம் பாக்கியாவிடம் கேண்டினில் வேலை செய்தவர்கள் பணத்தைக் கேட்டு வீட்டிற்கு வந்து விடுகிறார்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா அந்த கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்க என கேட்கிறார்கள் இன்னும் இரண்டு நாட்களில் கொடுத்து விடுகிறேன் கொஞ்சம் டைம் கொடுங்க என கூறுகிறார் பாக்யா.

அதே போல் மற்றொரு பக்கம் கிரெடிட் கார்டு நபர்கள் கோபியை தேடி பணம் கேட்க வருகிறார்கள் அப்பொழுது ராதிகாவுக்கு தெரியாமல் எப்படியோ சமாளிச்சு அவர்களை அனுப்பி வைக்கிறார் இப்படி கோபிக்கும் பாக்யாவுக்கும் பண பிரச்சனை வந்துள்ளது இந்த ஒரு விஷயத்தில் இருவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என நேட்டிசன்கள் கருத்து தெரிவித்தார்கள்.

அமிர்தாவை நேருக்கு நேராக பார்த்து கணேசன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் அப்பா, அம்மா.. பாக்கியலட்சுமி பரபரப்பான ப்ரோமோ

மற்றொரு பக்கம் கணேசன் அமிர்தாவை தேடி ரோடு ரோடாக அலைகிறார் அதுமட்டுமில்லாமல் ஈஸ்வரி கேட்டரிங் பாக்கியா என இரண்டு பெயரை வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆளிடமும் விசாரித்துக் கொண்டே வருகிறார் ஒரு வழியாக பாக்யா வீட்டின் முன்பு வந்து விடுகிறார் அப்பொழுது நிலா பாப்பாவுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த அமிர்தா உள்ளே சென்று விடுகிறார் அந்த சமயத்தில் ஏழில் அமிர்தா ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் கணேஷ் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.