குடும்பத்துடன் கொஞ்சி விளையாடும் கோபி.! ராதிகாவுக்கு சப்போர்ட் செய்து ஈஸ்வரியிடம் வாங்கிகட்டிகொண்ட பாக்கியா.! இன்றைய முழு எபிசொட்

baakiyalakshmi-today-episode-may-9
baakiyalakshmi-today-episode-may-9

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா அங்கு நடந்ததை தன்னுடைய அம்மாவிடம் கூறி புலம்பி கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையா எனக் கூற உடனே ராதிகா அம்மா மறுபடியும் வாழ்க்கையை இழந்துடாத நீ அங்க தான் இருக்கணும் என கூறி விடுகிறார். அதுமட்டுமில்லாமல் கோபி உனக்கு சப்போர்ட்டா இருக்கிற வரைக்கும் உனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது நீ அங்க தான் இருக்கணும் எனக் கூறிவிடுகிறார்.

மேலும் ஈஸ்வரி இன்னைக்கு உன்னை திட்றாங்க ஆனா நாளைக்கு நீ தான் என் மருமகன் என கூறும் நிலைமை மாறும் அதுவரை நீ பொறுமையா தான் இருக்கணும் அங்க தான் இருக்கணும் என அட்வைஸ் செய்து விடுகிறார். அடுத்த காட்சியில் இனியா, செழியன், ஜெனி, அமிர்தா, எழில் என அனைவரும் உட்கார்ந்து நிலா பாப்பா அவரிடம் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கோபி வந்து நானும் இங்கு உட்கார்ந்து கொள்ளலாம என கேட்க இனிய உடனே வாங்கப்பா என உட்கார வைக்கிறார் பின்பு அவரும் நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ராதிகா வருகிறார் கோபியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

அதுமட்டுமில்லாமல் ராதிகா ரூமுக்கு மேலே செல்கிறார் பிறகு கோபி வருகிறார். உடனே ராதிகா நீங்க உங்க பேமிலியோட ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா நான் வந்ததை கூட கவனிக்கல என கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் எல்லாத்தையும் விட்டுட்டு உங்களுக்காக தான் வந்தேன். நான் ஏன் உங்களை திருமணம் செய்தேன்  என யோசிக்க வச்சிட்டீங்க. எனக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது அதனை பாக்கியா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக ராதிகா தயவு செஞ்சு என்கிட்ட பேசாதீங்க கோபி எனக் கூறி விடுகிறார் அடுத்த காட்சியில் ராதிகா பால் சுட வைப்பதற்காக கீழே வருகிறார். அப்பொழுது பாக்கியா ராதிகாவிடம் சென்று பேசுகிறார். அப்பொழுது ராதிகாவிடம் பாக்கியா ஜெனிக்கு செய்த உதவி மிகப்பெரிய உதவி யாரும் செய்ய மாட்டாங்க என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் நன்றியும் கூறுகிறார், முன்பெல்லாம் நீங்க ஆபீஸ் போயிட்டு வீட்டையும் பார்த்து கிட்டு எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்க அசால்ட்டா எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணுவீங்க ராதிகா ஆனா இப்ப எல்லாத்தையும் இழுந்து நிற்கிற மாதிரி தெரியுது ராதிகா என பாக்கியா கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் ராதிகா டீ போட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு சர்க்கரையும் எடுத்துக் கொடுக்கிறார் பாக்யா. அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் ஈஸ்வரி வருகிறார். கால நேரத்திலேயே சண்டை பிடிக்க வந்துட்டியா என ராதிகாவை பார்த்து கேள்வி எழுப்புகிறார் அதனால் பாக்கியா ஏன் அத்தை இப்படி பேசுறீங்க என கூற உடனே ஈஸ்வரி பாக்கியா மீது  கோபப்பட்டு பேசுகிறார்.

அடுத்த காட்சியில் அமிர்தா சமையல்கட்டில் இருக்கும் போது எழில் வந்து ரொமான்ஸ் செய்கிறார். அது மட்டும் இல்லாமல் அமிர்தா தோசை சுட்டு தர எழில் சாப்பிடுகிறார் அமிர்தாவை சாப்பிட்டியா என ஏழில் கேட்க நான் அப்புறமா சாப்பிடுகிறேன் என கூற உடனே எழில் ஊட்டி விடுகிறார் இப்படியே ரொமான்ஸ் போய்க்கொண்டிருக்கும் பொழுது கோபி அதனை பார்த்து விடுகிறார்.

அந்த சமயத்தில் ராதிகா மேலிருந்து கீழே சாப்பிடுவதற்கு வருகிறார் உடனே கோபி தடுத்து நிறுத்தி எழிலும் அமிர்தாவும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் ஊட்டி விட்டு சாப்பிடுகிறார்கள் அதனால் இப்ப போக வேணாம் என கூறுகிறார். உடனே ராதிகா எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க ஆனா நான் தான் என் மயூவை விட்டுட்டு தனியா நீங்கதான் வேணும்னு வந்துட்டேன் என கோபியிடம் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.