அம்மா பேச்சை கேட்டுகிட்டு முதன்முறையாக ராதிகாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோபி.! வெடித்தது புதிய பிரச்சனை பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட்.

baakiyalakshmi-today-episode-may-8
baakiyalakshmi-today-episode-may-8

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா தான் ஜெனியை தள்ளி விட்டதாக ஈஸ்வரி பேசியதால் ரொம்பவும் அப்செட் ஆக இருக்கிறார் ராதிகா. அதனால் கோபிக்கு போன் செய்து வாங்க எனக் கூற. கோபி ஆபிஸ் கிளைன்ட் மீட்டிங் வந்து இருக்கேன் அதனால் கொஞ்சம் லேட் ஆகும் என சொல்கிறார் அதெல்லாம் வேண்டாம் கேன்சல் பண்ணிட்டு உடனே வாங்க என கூறுகிறார்  ராதிகா.

ஆனால் கோபி ஏதோ நம்ம தல தான் உருள போகுது போகலாமா வேண்டாமா என யோசித்து வேற வழியே இல்ல பொய் தான் ஆகணும் எனக்கு கிளம்புகிறார். பாக்யா மற்றும் தாத்தா இருவரும் காப்பாத்துனது அவதான் அவ மேல ஏன் இப்படி வீண் பழி போடுற எனக் கூற எல்லாரும் அவளுக்கே சப்போர்ட் பண்ணுங்க எப்படியாவது எக்கடவுது போங்க என ஈஸ்வரி கூறிவிட்டு செல்கிறார்.

கோபி வீட்டிற்கு வந்ததும் அனைவரையும் பார்க்கிறார் மாடிக்கு மேல் செல்வதற்கு முன்பு ஏன் எல்லாம் டென்ஷனா இருக்கீங்க என்ன ஆச்சு என கேட்க உடனே ஈஸ்வரி உன்னால தான் எல்லா பிரச்சனையும் நீ கூட்டிட்டு வந்து வச்சிருக்கியா அவ்வள ஒழுங்கா இருக்க சொல்லு என கூற உடனே கோபி ஏம்மா ஏதாவது சண்டை போட்டீங்களா அவளிடம் என கேட்க என்னைய பார்த்தா சண்டை போடுற மாதிரி தெரியுதா என ஈஸ்வரி கூறுகிறார்.

ராதிகா தான் ஜெனியை தள்ளி விட்டதாக கோபியிடம் ஈஸ்வரி கூற கோபி அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் என்ன ஆச்சு ஹாஸ்பிடல் போனீங்களா எப்படி இருக்கு என கேட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் செழியன் அந்த நேரத்தில் வர செழியனிடம் ஜெனிக்கு என்ன ஆச்சு நல்லா இருக்காளா என கேட்டுக் கொண்டிருக்கிறார் அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல நல்லா இருக்க என கூறிக் கொண்டிருக்கிறார்.

கோபி ராதிகாவிடம் செல்கிறார் அந்த நேரத்தில் தாத்தா எதுக்கு அவ மேல வீண் பழி போடுற எனக் கூற என்ன ஆச்சு எனக்கு தெரியும். . ராதிகாவிடம் கோபி போய் என்ன ஆச்சு என கேட்க அதற்கு ராதிகாவை பேசவிடாமல் அவளுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா ஏன் ஜெனியை தள்ளிவிட்ட என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படி கேட்ட உடனே ராதிகா அதிர்ச்சி அடைகிறார் கோபியின் சட்டையை பிடித்து உலுக்கு உலுக்குன்னு உலுக்குகிறார் என்ன போய் என்ன நினைச்சுட்டீங்க இரண்டு பேரும் புரிந்துகொண்டு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என் காச போட்டு நான் ஹோஸ்பிட்டல் எல்லாத்தையும் பாத்துட்டு பாக்கியாவும் செழியனும் வந்த பிறகு தான் நான் கிளம்புன அவங்க ரெண்டு பேருக்கும் எல்லாமே தெரியும். அவங்களும் உங்க அம்மாகிட்ட எடுத்து சொன்னாங்க ஆனா உங்க அம்மா வீண்பழி என் மேல போடுறாங்க ஏன் இப்படி பேசுறாங்க என கோபியிடம் அடித்து கதறி கொண்டு அழுது கொண்டு கேட்கிறார்.

தன்னுடைய அம்மாவிடம் ராதிகா சென்று நடந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.