விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் செழியன் தன்னுடைய ப்ராஜெக்ட் கிளைன்ட் கூட பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த பெண் செழியினை பார்த்து நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார் பிறகு ஒரு காலகட்டத்தில் ப்ராஜெக்டை பார்க்கலாமா என கேட்டுவிட்டு ப்ராஜெக்ட் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஜெனி வயிறு வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் செழியனுக்கு எத்தனை டைம் போன் செய்தும் போனை எடுக்கவில்லை. உடனே மாடியில் இருந்து இறங்கி வந்த ராதிகாவிடம் யாருமே போன் எடுக்கவில்லை செழியன் போனை எடுக்க வில்லை, தாத்தாவும் போன எடுக்கல ஆன்ட்டிக்கு போனே போகல என ராதிகாவிடம் ஜெனி புலம்பி கொண்டிருக்கிறார். உடனே நீ பயப்படாத எனக் கூற அதற்கு ஜெனி பாப்பாவுக்கு ஏதாவது ஆயிருக்குமோனு பயமா இருக்கு என புலம்புகிறார். ராதிகா தன்னுடைய அண்ணனிடம் காரை எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறார் பிறகு இருவரும் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள்.
ஹாஸ்பிடலுக்கு வந்த ஜெனி, ராதிகா பிறகு ராதிகா சென்று டாக்டரிடம் நடந்ததை கூறுகிறார். உடனே டாக்டர் ஜெனியை செக்கப் பண்ண உள்ளே கூட்டி செல்கிறார்கள். அந்த்த சமயத்தில் ராதிகா பாக்கியாவிற்கு கால் செய்கிறார்நடந்த அனைத்தையும் பாக்கியவிடம் ராதிகா கூற பாக்யா அதிர்ச்சடைகிறார் உடனே ஹாஸ்பிடல் அட்ரஸ் அனுப்புங்கள் நான் உடனே வருகிறேன் என கூறிவிட்டு போனை வைக்கிறார்.
அடுத்த காட்சியில் ராதிகா டாக்டர் இடம் சென்று ஜெனிக்கு என்ன ஆச்சு ஒன்னும் பயப்படற மாதிரி இல்ல என கேட்கிறார். அதற்கு டாக்டர் எந்த பிரச்சனையும் கிடையாது குழந்தையும் அம்மாவும் நல்லா இருக்காங்க என கூறி விடுகிறார் உடனே ராதிகா ஜெனியை பார்க்க செல்கிறார் ஜெனியை எழுப்பி ராதிகா ஒரு பிரச்சனையும் இல்லை என கூறு கொண்டிருக்கிறார் அப்பொழுது ஜெனி ராதிகா கையை பிடித்து ரொம்ப நன்றி எனக் கூறுகிறார்.
அடுத்த காட்சியில் பாக்கியா மற்றும் செழியன் இருவரும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள் ராதிகாவிடம் எங்கு இருக்க ஜெனி என கேட்க உள்ளே சென்று ஜெனியை பார்த்து எந்த பிரச்சினையும் இல்லை என கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு டாக்டர் வந்து ஒரு பிரச்சனை இல்ல ரெண்டு பேரும் நல்லா தான் இருக்காங்க நீங்க இனிமேல் டிசார்ஜ் ஆகிடலாம் என பாக்யா மற்றும் செழியன் இடம் டாக்டர் கூறிக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் வீட்டில் ஈஸ்வரி தாத்தா மற்றும் அமிர்தா அனைவரும் பதற்றத்துடன் இருக்கிறார்கள் என்ன ஆயிற்று என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் செழியன், பாக்கியா, ஜெனி மூன்று பேரும் வீட்டிற்கு வருகிறார்கள் அப்பொழுது ஜனனியை பார்த்து ஒரு பிரச்சினையும் இல்லல்ல என கேட்க அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை பாட்டி நான் தான் பயந்துட்டேன் என ஜெனி கூறுகிறார்.
உடனே ஜெனி ரெஸ்ட் எடுப்பதற்காக மாடிக்கு சென்று விடுகிறார் அந்த சமயத்தில் ராதிகா வந்து அந்த பொண்ணு ஜெனிக்கு ஒன்னும் ஆகல வந்துட்டாளா என கேட்க அதற்கு அமிர்தா வந்துட்டா மாடிக்கு போயிருக்காங்க எனக் கூற உடனே ராதிகா நான் தான் ஜெனி விழுந்த உடனே உங்களுக்கெல்லாம் போன் பண்ணாம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டேன் நீங்க எல்லாம் பயப்படுவீங்க என கூறிக் கொண்டிருக்க உடனே ஈஸ்வரி நீ மட்டும் தான் ஜெனி விழுந்தப்போ பார்த்தியா அப்போ நீதான் அவல தள்ளி விட்டாயா என ஈஸ்வரி ராதிகா மீது பழி சுமத்துகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.