சமையலறையில் ராதிகா…! வீட்டை விட்டு வெளியே போக சொன்ன கோபி.! இன்றைய பாக்கியலட்சுமி முழு எபிசோட்.!

baakiyalakshmi-today-episode--may4
baakiyalakshmi-today-episode--may4

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி குடித்து விட்டு நாற்காலியில்   உட்கார்ந்து ஜெனிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் பாக்யா சுடிதார் உடன் வந்து நிற்கிறார். அதை பார்த்து கோபி ஜெனி இடம் யாரோ உன் பிரண்டு வந்து இருக்காங்க சுடிதார் போட்டுக்கிட்டு எனக் கூற அதற்கு ஜெனி சிரித்துக்கொண்டே போகிறார்.

பாக்யா வந்து ஜெனியிடம் சாப்டியா, ஜூஸ் குடிச்சியா என்ன விசாரித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஜெனியும் கேண்டின் வேலை முடிந்ததா என கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பாக்கியா கேண்டில் வேலை முடிஞ்சிடுச்சு வேற ஒரு வேலை இருக்கு எனக்கு கூறுகிறார்.  அந்த சமயத்தில்  கண்ணை உருட்டி உருட்டி பார்க்கும்பொழுது பாக்கியா நிற்பது தெரிகிறது உடனே கோபி பாக்கியாவா கேண்டின் வேலை என்னென்னமோ சொல்றாலே.

அவள டிவோர்ஸ் பண்ணிட்டு நான் சந்தோசமா இருக்கலான்னு பார்த்தா என்ன டிவோர்ஸ் பண்ணிட்டு அவன் நிம்மதியா இருக்காளே  கோபி. அடுத்த காட்சியில் சமையல் கட்டில் பாக்யா, செல்வி, ஜெனி ஆகியோர்கள் இருக்கிறார்கள் அப்பொழுது ஜெனி பாக்யாவிடம் ஆன்ட்டி எனக்கு புலிப்பா ஏதாவது சமைச்சு தாங்க எனக் கூற நைட்ல புளிப்பா சாப்பிட்டா நெஞ்சு கரிக்கும் என கூறுகிறார் அதற்கு பரவால்ல நான் சமைத்து தரேன் என பாக்யாவும் கூறிவிடுகிறார்.

அடுத்த காட்சியில் செல்வி என் வீட்ல சோறு சமைத்து என்னால சாப்பிடவே முடியாது அப்படி ஒரு டைம் சமைத்து வைத்து சாப்பிடலாம் நினைச்சா என் மாமியார் வந்து சாப்பிட்டு போய்ட்டா என காமெடியாக கூறிக் கொண்டிருக்கிறார் உடனே பாக்யா எல்லாத்துக்கும் ஒரு பிரச்சனை என்றால் இவளுக்கு ஒரு பிரச்சனை என கூற அந்த சமயத்தில் ராதிகா உள்ளே வருகிறார் அவள் இண்டக்சன் அடுப்பு தோசை கல் என அனைத்தையும் வைத்து ரெடிமேடாக சப்பாத்தி செய்கிறார் அப்பொழுது கத்தியை எடுக்கும் பொழுது செல்வியை பார்த்து மிரட்டுவது போல் எடுக்கிறார்.

உடனே செல்வி ஈஸ்வரியிடம் ஓடிச் சென்று இங்கு வந்து பாருங்க என்ன நடக்குது என ஈஸ்வரியை கூட்டிக் கொண்டு வருகிறார் அப்பொழுது ராதிகா சமைத்துக் கொண்டிருந்ததை பார்த்த ஈஸ்வரி உன்ன தான் எந்த பொருளையும் எடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன் அப்புறம் எடுத்த என கேட்க உடனே ராதிகா இது எல்லாம் நான் வாங்கிட்டு வந்தத அத்தை நீ எதுக்கு என்னை  அத்தை எல்லாம் சொல்லாத என ஈஸ்வரி கூற அதற்கு ராதிகா உங்க பையன கல்யாணம் பண்ணிட்டேன் நீங்க எனக்கு அத்தை தானே நான் அப்படி தான் சொல்லுவேன் லந்து கொடுக்கிறார்.

அடுத்த காட்சியில் கோபி படுத்துக் கொண்டிருக்கும் பொழுது இனிய வருகிறார் தன்னுடைய புக்கு எங்கே என கேட்டு தேடிச் சென்று எடுத்துக் கொள்கிறார். அப்பொழுது கோபி உனக்கு என்ன வேணும் புதுசா போன் வாங்குவோமா நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம் எனக் கூற அந்த சமயத்தில்  இனியா ராதிகாவை பார்த்தவுடன் நம்ம ரெண்டு பேர் மட்டும் போகலாம் என அழுத்தமாக கூறுகிறார் அதை பார்த்த ராதிகா இனியா போனவுடன் கோபியிடம் சண்டை போடுகிறார்.

சப்பாத்தி வாங்கினதா இல்ல செஞ்சதா என கேட்க நான் உங்களுக்காக செஞ்சுட்டு எடுத்துட்டு வரேன் எனக் கூறுகிறார் அப்பொழுது ரொமான்ஸ் பண்ணுவதாக சப்பாத்தி ஊட்டி விட சொல்கிறார் கோபி அதை சாப்பிடும் பொழுது வாய் எல்லாம் ஒரு சைடு ஆக போகிறது. பிறகு அடுத்த காட்சியில் கோபி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா பக்கத்தில் போனை பார்த்துக் கொண்டிருக்கிறார் உடனே கோபி என்ன ராதிகா இந்த நேரத்துல போன் பாக்குற என கேட்க மயூ என்னை மிஸ் பண்றா மிஸ் யூ மெசேஜ் பண்றா என கூறுகிறார் ராதிகா.

உடனே கோபி வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாமல்   நீ பேசாம உங்க வீட்டுக்கே போயிடு எனக்கூறி விடுகிறார் கோபி உடனே இதான் சாக்கு என ராதிகா என்னை அங்க போக சொல்லிட்டு நீ உங்க அம்மா உங்க பேமிலியோட சந்தோஷமா இருக்கலாம் பாக்கறியா. நான் அப்படி சொல்லல நாம போயிடலாம்னு சொன்ன என கோபி சமாளிக்கிறார் பிறகு சண்டை வேணாம் வா தூங்கலாம் என கூப்பிட்டு இவ்வளவு கஷ்டத்துல இருக்கேன் எப்படி தூக்கம் வரும் என அதற்கும் சண்டை போடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.