கேண்டினில் வைத்து ராதிகா மண்டையை உருட்டும் செல்வி.! ஃபுல் மப்பில் சுடிதாரில் பாக்கியாவை பார்த்து அதிர்ச்சியான கோபி.! இன்றைய பாக்கியலட்சுமி முழு எபிசோட்.

baakiyalakshmi-may-3
baakiyalakshmi-may-3

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கேண்டினில் செல்வி யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்க்கிறார் அப்பொழுது பாக்கியா யாரை எதிர்பார்த்துட்டு இருக்க என கேட்க இல்லக்கா வீட்ல அவ்வளவு படுத்துனோம் கண்டிப்பா இங்கே ஏதாவது வந்து குறைய கண்டுபிடிக்கும் அதனால்தான் பார்த்துகிட்டு இருக்கேன் அன்னைக்கு பேசின மாதிரியே நீ இங்கேயும் பட்டு பட்டுன்னு பேசு அக்கா என செல்வி பாக்கியாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் ராதிகா அங்கு வருகிறார் என்ன இருவரும் குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என கூறிவிட்டு செல்வி உங்களுக்கு என்ன வேணும் என கேட்கிறார். அங்கேயும் இங்கேயும் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏதாவது குறை கண்டுபிடிக்கலாமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பழம் நல்லா இருக்கா, கேக் இருக்கா, பிரிட்ஜில் கூல்டிரிங்ஸ் இருக்கா என பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது செல்வி அவருக்கு லந்து கொடுத்து கொண்டிருக்கிறார் அதெல்லாம் நல்லா தான் இருக்கு என சொல்லிக் கொண்டே இருக்கிறார். அந்த சமயத்தில் காபி குடிக்கிறீங்களா என கேட்க அதற்கு எனக்கு காபியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என கூறுகிறார் உடனே பாக்கியா எதற்காக இவ்வளவு கோபப்படுறீங்க செல்வியிடம்.

உங்க வீட்ல சரியா காபி குடித்து இருக்க மாட்டீங்க சரியான சாப்பாடு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. ஒருவேளை யாரும் காபி போடறதுக்கு விட்டு இருக்க மாட்டாங்க என இலை மறக்கையாக போட்டு தாக்குகிறார் பாக்யா. இதனால் காண்டான பாக்யா நீங்க அப்படி ஒன்னும் உணவு நல்லா செய்யல  எனக்கு நிறைய கம்ப்ளைன்ட் வருகிறது எனக் கூற உடனே பாக்கியா அதுக்கு வாய்ப்பே இல்லை என அடித்தது போல் கூறுகிறார் உடனே தான் ரிவியூக்காக வைத்துக் கொண்டிருந்த நோட்டை எடுத்துக்காட்டுகிறார் இங்க பாருங்க ஒரு பேப்பர்ல கூட எதுவுமே எழுதல நான் அப்பவே இந்த நோட்டை வச்சிட்டேன் நல்லா இல்லனா எல்லாரும் எழுதிட்டு போயிருப்பாங்க என கூறுகிறார்.

அத்துடன் ராதிகா கிளம்புகிறார். அடுத்த காட்சியில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் கிளாசுக்கு போகிறார் கிளாஸ் முடிந்ததும் கிளம்பும் நேரத்தில் பழனிச்சாமி உங்களுக்காக ஸ்வீட் வச்சிருக்கேன் சாப்பிடுங்க எனக் கூற  அதை சாப்பிட்டு பார்த்து என்ன சேர்த்து இருக்காங்கன்னு தெரியல எனக் கூற  உடனே பழனிச்சாமி என்ன என்று தெளிவாக எக்ஸ்ப்ளைன் பண்ணுகிறார் அந்த நேரத்தில் பழனிச்சாமிக்கு ஒரு போன் வருகிறது. அம்மா மாத்திரை சாப்பிடவில்லை என பழனிச்சாமி கூறுகிறார்.

உடனே பாக்கியா அம்மாவ நல்லா பாத்துக்கோங்க எனக் சொல்கிறார் அதேபோல் பாக்யா நீங்க சொன்னது போல நான் எதுக்காக பயந்து ஓடணும் என பழனிச்சாமி இடம் பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார் அடுத்த காட்சியில் கோபி மூக்கு முட்ட குடித்துவிட்டு  தன்னுடைய நண்பரிடம் நடந்து அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ராதிகா பாக்கியா வீட்டிற்கு வந்ததையும் இனியா காபி கொடுத்து விட்டு போன பிறகு அதை தட்டி விட்டதையும் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் வீட்டிற்கு வருகிறார் அங்கு ஜெனியும் எழியனும்  பேசிக் கொண்டிருக்கிறார்கள். எழியன் தான் எழுதிக் கொண்டிருக்கும் ஸ்கிரிப்ட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது கோபி பார்த்துவிட்டு மேலே போகப் போனார் ஆனால் மீண்டும் சேரில் வந்து அமர்ந்து விடுகிறார் அப்பொழுது ஜெனி இடம் நல்லா இருக்கியா என்ன விசாரித்துக் கொண்டிருக்கிறார். உடனே எழியணையும் கையைப் பிடித்து  விசாரிக்கிறார்.

குடிபோதையில் பேசுவதை ஜெனி மற்றும் எழில் கண்டுபிடித்து விடுகிறார் அந்த சமயத்தில் பாக்கியா சுடிதாரில் வருகிறார் அதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.