பாக்கியாவிடம் காபி கேட்ட கோபி.! ராதிகாவை டிவோர்ஸ் பண்ண சொன்ன ஈஸ்வரி.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

baakiyalakshmi-today-episode--may-27
baakiyalakshmi-today-episode--may-27

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி குடித்துவிட்டு காருக்கு பக்கத்தில் கிடந்தவரை   ஈஸ்வரி மற்றும் செழியன் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் வீட்டிற்கு வந்து தூங்கிய பிறகு காலையில் எழுந்து கோபி கீழே வருகிறார். அப்பொழுது ஈஸ்வரி வா கோபி என அழைக்கிறார். கோபி குட் மார்னிங் அப்பா எனக் கூற ராமமூர்த்தி திட்டுகிறார். பிறகு ஈஸ்வரி காபி குடிக்கிறியா கோபி என கேட்க உடனே பாக்யாவை காபி போட்டு எடுத்துக் கொண்டு வா எனக் கூற இனியா அம்மா கோவிலுக்கு போயிட்டாங்க என கூறி விடுகிறார்.

பிறகு ஈஸ்வரியை காபி போட்டு கோபிக்கு கொடுக்கிறார் அந்த சமயத்தில் ஈஸ்வரி ராதிகாவை டிவோர்ஸ் பண்ணிவிடு எனக் கூறிக் கொண்டிருக்கிறார், அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ராதிகா வீட்டிற்குள்ளே வருகிறார் அதை பார்த்து ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் கோபியும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ராதிகா நேரடியாக ஈஸ்வர்யிடம் வந்து என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு பாக்கியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்களா என ஈஸ்வரியை பார்த்து ராதிகா கேட்கிறார்.

உடனே ஈஸ்வரி உன்ன டிவோர்ஸ் பண்ணிட்டா அதை பத்தி உனக்கு என்ன கவலை, உடனே கோபி உங்க அம்மா இப்படி பேசுறாங்க நீங்க அப்படியே ஜடம் மாதிரி நிக்கிறீங்களே கோபி என ராதிகா கோபியை பார்த்து கேள்வி எழுப்புகிறார். பிறகு நீ சும்மா இரு ராதிகா என ராதிகாவை அமைதியாக இருக்க வைத்து அப்படியே ரூமுக்கு கூட்டிட்டு செல்கிறார். ஆபிசுக்கு கோபி கிளம்பிக் கொண்டிருக்கிறார் நான் நைட் ஃபுல்லா வரலையே கொஞ்சமாவது தேடுனிங்களா கோபி என வாக்குவாதம் செய்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நான் போன் பண்ணுனா அதையும் கட் பண்ணுனீங்களே கோபி என கேள்வி எழுப்ப உடனே கோபி நான் நைட் எந்த நிலைமையில் இருந்தேன் என்று எனக்கே தெரியாது நான் எப்படி வீட்டுக்கு வந்தேன்னு எனக்கே தெரியாது என கூறிக் கொண்டிருக்கிறார். உடனே ராதிகாவிடம் தலையை வலிக்குது என சீன் கிரியேட் பண்ணி கீழே சென்று விடுகிறார் ராதிகா இன்னும் கோபத்துடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

அடுத்த காட்சியில் செல்வி ராதிகா வந்ததை பாக்கியாவிடம் கூறுவதற்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார் பாக்யா வந்ததும் செல்வி நடந்த அனைத்தையும் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் பாக்யா அப்செட் ஆக இருப்பதை பார்த்து  நீ கோவிலுக்கு போனது ராதிகா திரும்ப வரணும்னு வேண்டிக்க தானா என செல்வி கேள்வி எழுப்புகிறார் யாரு வந்தா என்ன யாரு போனா எனக்கு என்ன என் வேலையை பார்க்கவே எனக்கு நேரம் இல்லை என பாக்கியா வழக்கம் போல் பேசுகிறார்.

கீழே வந்த கோபி தன்னுடைய அப்பாவிடம் எது திட்டுவதாக இருந்தாலும் திட்டுங்க நான் கேட்டுக்கொள்கிறேன் ஆனா ரொம்ப தலை வலிக்குது கொஞ்ச நேரம் கழிச்சு திட்டுங்க என கூறி விடுகிறார் கோபி.   அந்த சமயத்தில் பாக்கியா தன்னுடைய மாமனருக்கு டீ வேணுமா என கேட்டுவிட்டு டீ போட்டு கொடுக்கிறார் அதனை நாய் போல் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கிறார் கோபி பிறகு ரொம்ப தலைவலி அதிகமானதால் செல்வியிடம் தைலம் கேட்கிறார்.

பாக்கியா டீ போடுவதை பார்த்த கோபி வேறு வழியில்லாமல் பாக்யா ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் ஒரு டீ போட்டு தர முடியுமா என கேட்டு விடுகிறார் இதனால் பாக்கியா திரு திருவென முழிக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.