விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி குடித்துவிட்டு நிற்கவே முடியாமல் காருக்கு பக்கத்திலேயே விழுந்து கிடக்கிறார். அது மட்டும் இல்லாமல் கோபி போன் செய்து எழில் வர சொன்னார் ஆனால் அவர் வர முடியாது எனக் கூறி விட்டு சென்று விடுகிறார். பிறகு ஈஸ்வரி உட்கார்ந்து கண்ணீரில் மிதக்கிறார். அந்த சமயத்தில் ஜெனி வந்து தண்ணீர் கொடுக்க செழியனை வர சொல்லு என ஜெனியிடம் கூறுகிறார்.
செழியன் வந்த பிறகு செழியனின் கையைப் பிடித்துக் கொண்டு அழுகிறார் ஈஸ்வரி அதுமட்டுமில்லாமல் கோபியை கூட்டிக் கொண்டு வா என கூறுகிறார் பிறகு பாக்யாவை கட்டிபிடித்து அழுகிறார் பாக்கியா கூட்டிக் கொண்டு வர சொன்னதும் சரி என் கிளம்புகிறார் செழியன் இருவரும் காரில் தேடுகிறார்கள் அப்பொழுது செழியனுக்கு கால் செய்கிறார் போனை அட்டென்ட் பண்ணிய கோபி நீ யார் என கேட்கிறார்.
எது எது பேச கூடாதொ அனைத்தையும் பேசுகிறார் பிறகு ஒரு வழியாக கோபி இருப்பதை கண்டுபிடித்து விடுகிறார்கள். காரில் அழைத்து செல்கிறார்கள் அந்த சமயத்தில் ராதிகா போன் செய்கிறார். உடனே கோபி அவதான் கால் பண்றா என் உயிரை வாங்குவதற்கு என கூறுகிறார். போனை எடுக்க மறுக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஃபோன் கட் செய்து இருக்கிறார்.
இதனால் ராதிகா டென்ஷனாகி நான் வீட்டிற்கு போய் பார்க்கிறேன் என கூறுகிறார். ஆனால் ராதிகாவின் அம்மா இப்ப போக வேண்டாம் நீ ரெஸ்ட் எடு காலையில் போய் என்னன்னு பாத்துக்கலாம் இனிமே சண்டை போடாத. இப்படியே சண்டை போட்டுக்கிட்டு இருந்தா இவ போனா போகட்டும் நிம்மதியாக இருக்கலாம் என நினைப்பு வந்துவிடும் என ராதிகாவிற்கு அறிவுரை கூறுகிறார் அவரின் அம்மா. ஆனாலும் ராதிகா செம டென்ஷனாக இருக்கிறார் நாளை காலை எப்படி இருந்தாலும் பத்திரகாளி ஆக மாறி விடுவார் என தெரிகிறது.
அடுத்த காட்சியில் கோபியை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருகிறார்கள் கோபியால் நடக்க முடியாமல் தள்ளாடுகிறார் தன்னுடைய அப்பாவையே நீ தான் இந்த வீட்டுக்கு ஓனரா என கேள்வி கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் பாக்கியாவை பார்த்து இந்த சின்ன பொண்ணு யார் எனவும் கேட்கிறார் கை கொடுக்கப் போகிறார் பிறகு ஈஸ்வரி கையை அடித்து தட்டி விட்டு எழிலும் செழியனும் கோபியை மேலே ரூமுக்கு அழைத்து செல்கிறார்கள்.
இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.