பாக்யாவை அசிங்கப்படுத்துவதாக நினைத்து கோடீஸ்வரன் சாரிடம் அசிங்கப்பட்டு நின்ன ராதிகா.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

thamizhum-saraswathiyum-may-23
thamizhum-saraswathiyum-may-23

பாக்யலக்ஷ்மி ராதிகாவை பார்க்க வருகிறார் அப்பொழுது மேடம் நீங்க வர சொன்னிங்களாமே என கேட்க வெயிட் பண்ணுங்க நான் கூப்பிடுறேன் என சொல்லிவிட்டு செல்கிறார். பாக்கியா வந்ததை ராதிகா கண்டும் காணாமலும் ஓவர் டோஸ் விடுகிறார். இதனால் காண்டான பாக்கியா எனக்கு கேண்டினில் நிறைய வேலை இருக்கிறது என கேட்க நான் மட்டும் என்ன வெட்டியாக உட்கார்ந்து இருக்கிறானா என பதிலுக்கு கூறுகிறார்.

பெருசா ஒன்னும் கிடையாது கேன்டீன் காண்ட்ராக்ட் எடுத்து இருக்கீங்களா அத பத்தி தான் பேச எனக்கூற அதற்கு பாக்கியா இத பத்தி அப்புறம் பேசி இருக்கலாம் என கோபத்துடன் பேசுகிறார். அப்பொழுது ராதிகா இனிமேல் நாம பிரண்ட்லியா பேசலாம் என்று ராதிகா கூற அதற்கு பாக்கிய வேண்டாம் இனிமே நான் யார்கிட்டயும் பிரண்ட்லியா பழக மாட்டேன் அப்படி பழகினா நம்மளை ஏமாளி என்று நினைத்துவிடுவார்கள் என பதிலடி கொடுக்கிறார்.

இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீங்க போகலாம் என ராதிகா கூற பாக்யா செல்கிறார் அந்த சமயத்தில் கோடிஸ்வரன் சாரை  பார்க்கிறார் அவரிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார். இதனால் ராதிகாவை அந்த ஓனர் போனில் அழைக்கிறார் ராதிகாவிடம் உங்களுக்கும் பாக்யாவுக்கு என்ன பிரச்சனை என விசாரணை நடத்துகிறார். பிறகு ராதிகா சாரி கேட்க வெளியே செல்கிறார்கள் அந்த சமயத்தில் என்ன கம்ப்ளைன்ட் பண்றியா என பாக்கியவை பார்த்து ராதிகா கேட்க கம்ப்ளைன்ட் பண்ணாம என்ன செய்ய சொல்றீங்க நீங்க பண்ற டார்ச்சர் சொல்லாமல் நான் என்ன பண்றது இனிமே என்ன நடந்தாலும் சார்ட்ட சொல்லிடுவேன் என மிரட்டி விட்டு பாக்கியா செல்கிறார்.

அடுத்த காட்சியில் இங்கிலீஷ் கிளாசில் கான்வர்சேஷன் பண்ணுவதற்காக டீச்சர் கேட்க அதற்கு பழனிச்சாமி முதல் ஆளாக எழுந்து நான் பேசுகிறேன் என செல்கிறார். அவருடன் பேச யார் ரெடி என கேட்க கடைசியாக பாக்யாவை உள்ளே இழுக்கிறார்கள். பிறகு இருவரும் இங்கிலீஷ் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அடுத்த காட்சியில் வீட்டில் எழில் பாக்யா அமிர்தா தாத்தா பாட்டி அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தாத்தா எப்பொழுதும் ராத்திரி தன வருவாய் ஏன் சீக்கிரம் வந்துட்ட என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என கூறுகிறார்.

ஆனால் எழில் பாக்கியா படபடப்பாக பேசியதையும் ஏதாவது பிரச்சனையா எனவும் அனைவரின் முன்பு கேட்டு விடுகிறார். பிறகு பாக்கியா நடந்த அனைத்தையும் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் கோடீஸ்வரன் சாரிடம் கம்ப்ளைன்ட் பண்ணியதையும் கூறுகிறார். இது எல்லாத்துக்கும் காரணம் கோபி என தாத்தா கூற இன்னைக்கு இவள போடுற போடுல அவனும் சரியாயிடுவான் என ஈஸ்வரி பாட்டி கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.