விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ராதிகா கோபியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் என்னையும் மயூவையும் பத்தி கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டேங்கிறீங்க உங்களுக்கு முழுக்க முழுக்க இனியா மட்டும் தான். எனக் கூற உடனே கோபி தயவு செஞ்சு மயூ மேலயும் உன் மேலையும் எனக்கு பாசம் இருக்கு தயவு செஞ்சு அதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ என கோபி கூட.
அதற்கு ராதிகா இனியா மேல இருக்கிற பாசம் மயூ மேல இருக்கா என கேட்க உடனே கோபி நான் என் பொண்ணு மேல அன்பு காட்டினால் பாசம் காட்டினா உனக்கு என் கோவம் வருது அவ என் பொண்ணு ராதிகா, உலகத்துல எல்லா அப்பாவுக்கும் தான் பொண்ணுன்னா அன்பா தான் இருப்பாங்க என்னோட பொண்ணோட ஒவ்வொரு நல்லதுக்கும் நான் போய் நிற்பேன் தான் அதெல்லாம் உன் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு இருக்க முடியாது.
அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ அவளுக்கு ஒரு நல்லது நடக்கும் போது கண்டிப்பா நான் அங்க இருப்பேன் அதை நீ தடுக்கவும் முடியாது. என் பொண்ணு கிட்ட அன்பு காட்டினால் உனக்கு ஏன் கோவம் வருது . அப்படி சொல்லல கோபி உனக்கு இனிய ரொம்ப முக்கியம் அத சொன்னதால தான கோவிச்சுக்கிட்டு போய் வெளியில் படுத்த.
நீங்க எங்களை விட்டுட்டு இனியா உங்க அப்பா, உங்க அம்மா எல்லாம் சந்தோஷமா தானே பேசிட்டு இருக்கீங்க.. அதனால என்ன என் பொண்ணு என் அப்பா என் அம்மா நான் பேசினா உனக்கு என்ன பிரச்சனை அத பாத்து உனக்கு வெறுப்பு வருதுன்னா அது யாரோட பிரச்சனை. உன்கிட்ட பேசறவங்க யாருமே என்கிட்ட பேசலையே கோபி என ராதிகா கேட்க அதற்கு கோபி இதை மாதிரி கத்திக்கிட்டே எப்ப பாரு சண்டை போட்டுட்டு இருந்தா யாருமே பேச மாட்டாங்க. எனக் கூறுகிறார் .
உடனே கோபி உனக்கு என்ன வேணும் அதை மட்டும் சொல்லு எனக்கு கூர கேட்டதுக்கு பதில் சொல்லு கோபி என்னை இரிடேட் பண்ண தானே இனிய கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறீங்க என கேட்க நீ மயூ கிட்ட இப்படி பேசு அப்படி பேசுன்னு நான் சொல்றேன்னா அதெல்லாம் ஓகே கோபி நான் மயூவ விட்டுட்டு தானே இங்க வந்து இருக்கேன் என கேட்க, நான் உன்னை விட்டுட்டு இங்க வர சொன்னேனா இப்பவே கிளம்பி போக வேண்டியது தானே எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும் இல்ல என கோபி அதிரடியாக கூறி விடுகிறார்.
அது மட்டும் இல்லாமல் ராதிகா உடனே உங்களுக்கு என்ன பிரச்சனை நான் போனா நீ உங்க அம்மா, உங்க மகள் எல்லாம் சந்தோஷமா இருப்பீங்க என கூற உடனே கோபி காரணத்தோட சண்டை போடுறவங்க கிட்ட பேசலாம் காரணமே இல்லாமல் சண்டை போடுறவங்களிடம் எதுவும் பேச முடியாது எனக் கூறுகிறார்.
மேலும் பழனிச்சாமி பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார் அவர் தன்னுடைய அம்மாவிற்கு பிறந்தநாள் என்பதால் அதற்கு அனைவரையும் இன்வைட் பண்ணுகிறார். அதுமட்டுமில்லாமல் பாக்யாவின் சமையல்தான் அங்கு ஸ்பெஷல் எனவும் கூறுகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபி உள்ளே வருகிறார் அங்கு யாரோ வந்திருப்பதாக பழனிச்சாமி கூற அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்.
கோபி உள்ளே நுழையும் பொழுது கோபியை பார்த்து சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நீங்க யாரு நீங்க பாட்டுக்கு உள்ள நுழைகிறீர்கள் ஏதாவது விற்க வந்து இருக்கீங்களா. என கோபியை கேட்டு அசிங்கப்படுத்துகிறார் பிறகு அவர் என்னுடைய மகன் குழந்தைங்களுக்கு அப்பா என கூறும் பொழுது பழனிச்சாமி சாரி செல்கிறார் அதுமட்டுமில்லாமல் மன்னிப்பும் கேட்கிறார்.
அடுத்த காட்சியில் ராதிகா தன்னுடைய அம்மாவிடம் நடந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மயூ அங்கு கூட்டிக் கொண்டு போ அப்பதான் எல்லாமே சரியா இருக்கும் எனக் கூற ராதிகா அதற்கு மறுக்கிறார். ரஞ்சித்திடம் கோபி எப்படி பாக்கியாவை திருமணம் செய்தார் என்பதை கூறிக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் பாக்யா ரொம்ப தங்கமான பொண்ணு எங்களை நல்லா பார்த்துப்பா எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் கல்யாணம் பண்ண ஆரம்பத்தில் இருந்து கோபிக்கு பாக்கியாவை பிடிக்கவில்லை என்பதையும் கூறுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.