மாமியாரையே முறைத்து பேசும் பாக்கியா.! ஈஸ்வரி கொடுத்த காபியை தட்டிவிட்ட ராதிகா.! பாக்கியலக்ஷ்மி இன்றைய எபிசொட்.!

baakiyalakshmi-may-2
baakiyalakshmi-may-2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி, அமிர்தா, இனியா, பாக்கியா, செல்வி என அனைவரும் சமையல் கட்டில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள், அப்பொழுது ஈஸ்வரி எனக்கு காபி போட்டு கொடுக்கிறியா என பாக்கியாவிடம் கேட்க உடனே பாக்கியா இப்ப தான குடிச்சீங்க நீங்க திரும்ப காபி குடிக்கிற ஆளே கிடையாது என கேட்கிறார் உடனே ஈஸ்வரி எனக்கு இல்ல கோபிக்கு அவன் காபி எப்படி எடுத்தான் பார்த்தல்ல எடுத்துட்டு திரும்ப வச்சுட்டான்ல அதான் கஷ்டமா இருக்கு ஒரு காபி போட்டு கொடு என கேட்கிறார்.

காபி போட்டு மட்டும்தான் கொடுக்கணுமா இல்ல கொண்டு போய் வேற கொடுக்கணுமா என பாக்கியா கேட்க இல்ல இல்ல நான் கொடுத்துக்கிறேன், நீ காபி மட்டும் குடு எனக் கேட்க உடனே பாக்கியா அதெல்லாம் முடியாது என மூஞ்சில அடித்தது போல் கூறுகிறார். நான் இங்க இருக்கிறதே உங்களுக்கு ஏதாவது செய்யனுமா இல்ல இங்க இருக்குறவங்களுக்கு வேற ஏதாவது செய்யணுமா அத செய்றேன் தேவை இல்லாம இதை சொல்லாதீங்க எனக்கூறி விடுகிறார்.

உடனே செல்வியிடம் காபி போட்டு கொடுக்க ஈஸ்வரி கேட்க நான் வேலையை விட்டு வேணாலும் போறேன் என்னால போட முடியாது எனக் கூற ஜெனியும் நான் காபி போட்டால் யாரும் குடிக்க முடியாது எனக் கூற இனியாவிடம் பாட்டி திரும்புகிறார் இனியா எனக்கு காபி  குடிக்க தான் தெரியும் போடத் தெரியாது என கூற உடனே ஈஸ்வரி நானே காபி போட்டு கொடுத்துகுறேன் என காபி போட்டு அதனை இனியாவிடம் கொடுத்து கொண்டு போய் கொடு என கூறுகிறார்.

இனியா காபி எடுத்துக் கொண்டு போய் கதவைத் தட்டுகிறார் அப்பொழுது ராதிகா வருகிறார் காபியா கொடு என கேட்க உங்களுக்கு கிடையாது இது டாடிக்கு என கூறுகிறார், காபியை வாங்கிக் கொண்டு என்ன ஒரு வாசம் இந்த காபி குடித்து எத்தனை வருஷம் ஆகுது என கோபி கூறிக் கொண்டிருக்க அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் ராதிகா. அதுமட்டுமில்லாமல் இனியா நா ஸ்கூலில் கொண்டு விடுகிறேன் என இனிய விடம் கூற  இல்ல வேணாம் நான் அண்ணனோட போய்க்கிரன் எனக் கூறுகிறார்.

உடனே இனியா வெளியே சென்றவுடன்  ராதிகா காபி கப்பை தட்டி விட்டு உடைக்கிறார் இப்ப காபி குடிப்பிங்க அடுத்து கீழே போய் சாப்பிடுவீங்க நான் தனியா நிற்கிறதா என கோபியை கிழித்து தொங்க விடுகிறார் அது மட்டும் இல்லாமல் நான் போய் காபி போட்டு கொண்டுவர அதை நீங்க குடிச்சா போதும் என சொல்லிவிட்டு போகிறார். கீழே சென்று காபி போட போன இடத்தில் பால் பாக்கெட் நாங்க வாங்கினது எங்களுக்காக வாங்கியது எனக் கூற உடனே தண்ணியை ஊற்றி பிளாக் காபி போட்டு கொண்டு சென்று விடுகிறார் ராதிகா.

ஈஸ்வரி தன் மகனை நிம்மதியா ஒரு காபி குடிக்க கூட விடவில்லை ராதிகா என்பதை கூறி புலம்புகிறார் கோபி கொட்டிய காபியை பார்த்துக் கொண்டே உட்கார்ந்து இருக்கிறார் அப்பொழுது ராதிகா வந்து ஏன் அப்படியே பாக்குறீங்க என்ன கிளீன் பண்ணலையா என கேட்க கிளீன் வேற பண்ணனுமா என அதிர்ச்சி அடைகிறார், பிறகு பிளாக்காபியை கோபியிடம் கொடுத்துவிட்டு ராதிகா கிளீன் செய்கிறார் அப்பொழுது காப்பியை பார்த்துக் கொண்டிருந்த கோபி காபி கண்றாவியாக இருப்பதை வெளிப்படுத்துகிறார்.

காபியை குடித்து பார்த்த ராதிகா காபி கசக்கிறது என ஊற்றி விடுகிறார் ஆனால் கோபி ஆமாம் காபி கசக்குறது என்ன ஊற்ற போகும்போது உங்களுக்காக நான் அவ்ளோ திட்டு வாங்கி கஷ்டப்பட்டு காபி போட்டுட்டு வந்தா நீங்க ஊத்துவீங்களா என சண்டை போடுகிறாள் வேறு வழியே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு காபி குடித்துவிட்டு கோபி கப்பை கழுவி எடுத்துக் கொண்டு வருகிறேன் என பாத்ரூம் சென்று புலம்பி தள்ளுகிறார். வாழ்க்கை தான் கசப்பா போகுதுன்னா காபி கூட கசப்பா இருக்கு என  கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.