கோபியின் முகத்தில் குத்திய ராதிகா.! உச்சகட்ட மகிழ்ச்சியில் பாக்கியா.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

baakiyalakshmi may 17
baakiyalakshmi may 17

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஸ்கூலில் பெஸ்ட் ஸ்டூடண்ட் என்று ஐந்து நபர்களை செலக்ட் செய்துள்ளார்கள் அவர்களில் ஒருவர் இனியா இவர் ஸ்டேட் ரேங் வருவார் என ஸ்கூலில் அனைவரும் பெருமிதம் அடைகிறார்கள். அப்பொழுது பாக்யாவிற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இந்த மாற்றத்திற்கு காரணம் என்னுடைய அம்மா பாக்கியலட்சுமி தான் என மேடையிலேயே இனியா கூறுகிறார்.

பங்க்ஷன் முடிந்ததும் இனியாவை பலரும் பாராட்டி விட்டு செல்கிறார்கள் இந்த நேரத்தில் ராதிகா தன்னுடைய மகளை ஸ்கூலில் இறக்கி விட வந்துள்ளார் அவரை இறக்கி விட்டுவிட்டு மையூ நாளைக்காவது அப்பா வருவாரா என கேட்கிறார். கண்டிப்பாக வருவார் என ராதிகா கூறிவிட்டு செல்கிறார் அந்த சமயத்தில் கோபி தன்னுடைய மகள் பேசியதை வீடியோவாக எடுத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே வருகிறார் பங்ஷனுக்கு போறதாக கூறிவிட்டு பொய் சொன்ன கோபி ராதிகாவிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.

அடுத்த காட்சியில் பாக்யா எழில் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மாமாவை ஆட்டோவில் ஏற்றி விட்டாயா என எழிலை பார்த்து பாக்கியா கேட்க அனுப்பி விட்டேன் என எழில் கூறிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாக்யா இன்னைக்கு நான் ரொம்பவும் சந்தோஷமா இருக்கேன் ஒரு நாள் என்னை ஸ்கூலுக்கு வரக்கூடாதுன்னு சொன்ன ஏன் மகள் இனியா இன்னைக்கு எல்லாரும் முன்னாடியும் என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் அம்மா தான் என்று கூறியது எனக்கு பெருமையாக இருக்கிறது என கூறிக் கொண்டிருக்கிறார்.

உடனே எழில் நீங்க பெருமைப்படுற மாதிரி நான் எதுவுமே செய்யலையே அம்மா எனக்கு வருத்தமா இருக்கு எனக் கூற அப்படி எல்லாம் இல்ல நீ தான் படம் செஞ்சி இருக்கியேடா அது மட்டும் இல்லாம செழியனும் அவன் வேலையில் அவன் தான் ஃபர்ஸ்ட் இனியா நல்ல பெருமைப்படுற மாதிரி செஞ்சுட்டா எனக்கு பிறந்த மூணு பசங்களுமே தங்கம் தான் என பேசுகிறார்.

கோபி ராதிகாவிடம் சிக்கிக்கொண்டார் அதனால் ராதிகாவை இங்க கத்த வேண்டாம் காரில் உட்காரு என காரில் ஏற்றிவிட்டு காரில் ஏறுகிறார் அப்பொழுது ராதிகா கோபியை பார்த்து எனக்கு வர்ற கோபத்துக்கு அரையனும் தோணுது என கோபி முகத்தில் ஒரு குத்து விடுகிறார் . உங்க மக பங்க்ஷன் அதனால வந்தீங்க அதுக்காக ஏன் பொய் சொன்னீங்க அப்போ இனியாவ உங்களுக்கு கொண்டாந்து விடனும்னு கொஞ்சம் கூட அக்கறையே இல்லை தானே. என வாய்க்கு வந்தபடி ராதிகா கோபியை பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.