என்ன இங்க சத்தம் ஓவரா இருக்கு மறுபடியும் போலீசை கூட்டிட்டு வரணுமா ஈஸ்வரியை மிரட்டும் ராதிகாவின் அம்மா.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

baakiyalakshmi-june-22
baakiyalakshmi-june-22

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா எக்ஸாம் எழுத போவதால் ஒரு காஸ்ட்லியான பேனாவை கிப்டாக பழனிச்சாமி இனியாவிடம் கொடுக்க இனிய மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் கோபி வர கோபியிடம் அந்த பேனாவை காட்டுகிறார்.

ஆனால் கோபி பழனிச்சாமி மீது இருக்கும் கோபத்தில் பேனாவை வாங்குவது போல் கீழே போட்டு உடைத்து விடுகிறார். இதனால் மிகுந்த வேதனை அடைகிறார் இனியா ஆனாலும் கோபி சாரி தெரியாம விழுந்துடுச்சு என சமாளித்துவிட்டு உனக்கு நான் புதிதாக பேனா வாங்கி வச்சிருக்கேன் என புதிய பேனாவை காட்ட இனியா சந்தோஷம் அடைகிறார். ஆனாலும் கோபி வேணும்னு கீழே போட்டதை அனைவரும் பார்த்து விடுகிறார்கள்.

பாக்கியா பழனிச்சாமிடம் பேனா கீழே விழுந்ததற்கு சாரி கேட்கிறார் அதேபோல் ஈஸ்வரியும் தெரியாமல் விழுந்துருச்சு எனக் கூற பேனா தானே விடுங்கள் என பழனிச்சாமி கூறிவிடுகிறார். ஆனால் வெளியே சென்ற கோபி இனியவிடம் பழனிச்சாமி எதுக் கொடுத்தாலும் வாங்க கூடாது எந்த கெஸ்ட் கொடுத்தாலும் வாங்க கூடாது அது தான் மேனர்ஸ் என கூறுகிறார். இதனால் இனியா யோசிக்கிறார் அதேபோல் அடுத்த காட்சியில் பாக்கியா மற்றும் பழனிச்சாமி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய பிரண்ட் எம்எல்ஏ வீட்டில் மிகப் பெரிய கல்யாணம் அதற்கு நீங்க தான் சமைக்க வேண்டும் அந்த ஆர்டர் உங்களுக்கு தான் என கூற பாக்யா ஆச்சரியமடைகிறார்.

மூணு நாள் கல்யாணம் நடக்கும் ஒரு நாளைக்கு 5000 பேருக்கு சமைக்க வேண்டும் என கூற பாக்கியலட்சுமி வாயை பிளக்கிறார் அது மட்டும் இல்லாமல் இவ்வளவு பெரிய ஆர்டர் இதுவரைக்கும் செய்ததே கிடையாது மூன்று நான்கு நாட்கள் தங்கி அங்கேயே சமைக்க வேண்டும் அதற்கு மற்றவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் அதனால் இந்த ஆர்டர் வேண்டாம் சாரி சார் என கூறி விடுகிறார், பரவாயில்லை நான் என் பிரண்டு கிட்ட பேசிக்கொள்கிறேன் என பழனிச்சாமியும் ஓகே சொல்கிறார்.

அடுத்த காட்சியில் ஜெனி மற்றும் ஈஸ்வரி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ராதிகாவின் அண்ணன் அண்ணி அவரின் அம்மா மூவரும் உள்ளே வருகிறார்கள். இதுதான் ராதிகாவின் வீடு சூப்பராக இருக்கிறதா என ராதிகாவின் அம்மா ராதிகாவின் அண்ணியிடம் கேட்க இது மாப்பிள்ளை பெயரில் தான் இருக்கிறது மாப்பிள்ளையின் வீடுதான் மத்தவர்கள் சும்மா இருக்கிறார்கள் என அவரின் அம்மா ஓவராக பேசுகிறார் இதனால் ஈஸ்வரி கோபமடைகிறார்.

வார்த்தைக்கு வார்த்தை இது ராதிகா வீடு தான் எப்படி இருக்கிறது என கேட்டுக் கொண்டிருக்கிறார் ராதிகாவின் அம்மா இதனால் ஈஸ்வரி கோவம் அடைகிறார் பிறகு பாக்யா ஈஸ்வரி செல்வி என அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது கோபி தண்ணீர் பிடிக்க வரும்போது நில்லுடா இது அவ வீடா சொல்லுடா என ஈஸ்வரி கோபியை பார்த்து கேட்க கோபி சாரி சாரி இப்ப போயிடு வாங்க என கூறிவிட்டு பயந்து கொண்டு மேலே போகிறார்.

அடுத்ததாக கிச்சனுக்கு வந்த ராதிகா கொஞ்சம் வெளியில இருக்க முடியுமா ஒரு ஆப் அவர் இருந்தால் போதும் நான் சமைத்துக் கொள்கிறேன் எனக் கூற  அதற்கு பாக்கியா நானும் சமச்சிகிட்டு தான் இருக்கேன் என கூறுகிறார் உடனே ஈஸ்வரி உன்னை சமையல் கட்டு பக்கமே உள்ள வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் உனக்கு வெட்கமே இல்லையா. கெஸ்ட்ன்னா கூப்பிட்டு வரணும் இப்படி திறந்த வீட்டுல உள்ள நாய் வர மாதிரி வரக்கூடாது என்பது போல் ஈஸ்வரி கூற ராதிகாவுக்கு கோவம் வருகிறது.

இன்னும் அதிகமாக இருவரும் சண்டை பிடிப்பதால் ராதிகாவின் அம்மா மேலிருந்து வந்து என்ன போலீஸ் அன்னைக்கு சொல்லிட்டு போனது மறந்துடுச்சா மறுபடியும் போலீஸ் கூப்பிடனுமா என ஈஸ்வரியை பார்த்து ராதிகாவின் அம்மா மிரட்டுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.