நீங்க ரொம்ப நல்ல ஆன்ட்டி…! உனக்குத் தெரியுது மயூ ஆனா உங்க அம்மாவுக்கு தெரியலையே.? பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் பாக்யா நீங்க பண்ற ஒரு விஷயத்தை கூட நான் மதிக்கிறது கிடையாது எனக்கு நிறைய வேலை இருக்கு என்னையே ஏதாவது சொல்லிட்டு இருக்கிறதை விட்டுட்டு  இனியாச்சும் உருப்படியா ஏதாவது பண்ணுங்க என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் பிள்ளைகளை வைத்து எதையோ இழுக்குறன்னு சொல்றீங்க இல்ல இன்னைக்கு நடந்ததை நினைச்சு பாருங்க யார் என்ன பண்றாங்கன்னு உங்களுக்கு புரியும்.

மயூ ரொம்ப நல்ல பொண்ணு அவ வாழ்க்கை வீணாக்கிடாதீங்க இந்த வயசுலயே மனசு நோகுற மாதிரி பேசிட்டு இருக்காதீங்க எனக்கூறி விட்டு செல்கிறார். அடுத்த காட்சியில் இங்கிலீஷ் கிளாஸ் போய்க்கொண்டிருக்கிறது அப்பொழுது ரொம்ப பசிக்கிறது என பழனிச்சாமி கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் தேன் குழலியை நானே செய்ததாக பொய் சொல்லி அனைவரிடமும் கூறுகிறார்கள் ஆனால் பையில் இருந்த பில் விழுந்து விடுகிறது.

அதை எடுத்த லோபிகா தேன்குழலி கடையில் வாங்கியது என தெரிகிறது உடனே பழனிச்சாமியை கிண்டல் செய்கிறார்கள் நேசமா நான் தேன்குழலி  செய்தேன் ஆனால் ஒருவர் சாப்பிட்டு பார்த்துவிட்டு சோத்து வத்தல் சூப்பர் என கூறினார். அதனால்தான் கடையில் வாங்கினேன் என கூறுகிறார். பிறகு அம்மா எப்படி இருக்காங்க என விசாரிக்கிறார்கள் பாக்கியாவும்  லோபிகாவும் அவர் நலமாக இருக்கிறார் எனக் கூறுகிறார். ஒரு நாள் கண்டிப்பாக நாங்கள் வருகிறோம் என இருவரும் கூறுகிறார்கள்.

அடுத்த காட்சியில் செழியன் ஜெனி இடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது செழியன் அந்த பிமேல் கிளைன்ட் வேலையைத் தவிர மத்ததெல்லாம் பேசுவதாக கூறுகிறார். மேனேஜரிடமும் இந்த ப்ராஜெக்ட் யாரிடமாவது கொடுத்து விடுங்கள் என கூற அதற்கு நோ நோ நீங்கதான் இதை கண்டிப்பா பண்ணனும் என மேனேஜர் கூறி விடுகிறார்.

ஜெனி நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க அதுல மட்டும் கவனம் செலுத்துங்க  எனக் கூறி விடுகிறார் அடுத்த காட்சியில் பாக்யா மற்றும் லோபிகா இருவரும் பழனிச்சாமியின் அம்மாவை பார்க்க வருகிறார்கள் ஆனால் அவர் சாப்பிட முடியாது என அடம் பிடித்து கொண்டிருக்கிறார் இதை பார்த்த பாக்கியா நான் சமைத்து தருகிறேன் என சமையல்கட்டிற்கு சென்று புது விதமான டிஷ் செய்து வருகிறார்.

பிறகு அதை சாப்பிட்டுவிட்டு சூப்பராக இருப்பதாக கூறுகிறார் பிறகு நாங்கள் கிளம்புகிறோம் எனக் கூறிவிட்டு பாக்கியா மற்றும் லோபிக்க இருவரும் கிளம்புகிறார்கள். அடுத்த காட்சியில் மயூ தண்ணீர் வாங்குவதற்காக கீழே வருகிறார் அப்பொழுது ஜெனியும் அமிர்தாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அமிர்தா தண்ணி வேணுமா என கேட்க ஆமாம் எனக்கு கூறுகிறார் உடனே ஜெனி தண்ணீர் பிடித்துக் கொடுக்கிறார் அந்த சமயத்தில் பாக்யா வீட்டிற்கு வருகிறார்.

சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது என மயூ விடம் கேட்க பிரட்டும் ஜாம் இருக்கிறது என கூறுகிறார் பிறகு அத நீ அப்புறமா சாப்பிட்டுக்கு இங்கேயே சாப்பிடு எனக் கூறிவிட்டு  சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிட்டு விட்ட மயூ நீங்க ரொம்ப நல்லா ஆன்ட்டி என கூறிவிடுகிறார் அதனால் பாக்கிய கண்கலங்குகிறது இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது..