baakiyalakshmi : 18 லட்சத்தை கேட்டு டார்ச்சர் செய்யும் கோபி மற்றும் ராதிகா.! பணத்தை மூஞ்சில் வீசி சவாலில் வெற்றி பெறுவாரா பாக்கியா.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

baakiyalakshmi today episode july-8
baakiyalakshmi today episode july-8

baakiyalakshmi : பாக்யலக்ஷ்மி இன்றைய எபிசோடில் பாக்யா சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது கோபி வந்து நீ பண்றது எல்லாம் உனக்கே நல்லா இருக்கா. அந்த பழனிச்சாமியுடன் உக்காந்து சிரிச்சு சிரிச்சு பேசறது மத்தவங்க தப்பா பேசுறாங்க என்கிட்ட வந்து கேக்குறாங்க அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா என கேக்குறாங்க என கூற அதற்கு பாக்கியா நீங்க என் பின்னாடியே சுத்துறதால டைவர்ஸ் பண்ணியும் பாக்கியா பின்னாடியே சுத்துறாரே கோபி கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா என கேக்குறாங்க என்கிட்டயே வந்து என பதிலுக்கு கூறுகிறார் பாக்யா.

யார் சொன்னதுன்னு சொல்லு நான் அவங்க மூஞ்சி முகரையை உடைத்து விடுகிறேன் எனக் கூற நீங்க சொன்ன ஆள காட்டுங்க நானும் உடைக்கிறேன் என கூறுகிறார். இப்படியே பேசிக் கொண்டே இருக்கும் பொழுது உன்னோட பர்சனல் என்றால் பரவா இல்லை  இந்த குடும்பம் ரொம்ப பாதிக்குது உன்னால இந்த குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொண்டு வருகிறார் என கூற அதற்கு பாக்கியா இங்கிருந்து பாண்டிச்சேரி போனது அங்கே என்ன நடந்துச்சு எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் அவங்க யாரும் என்ன இது மாதிரி தப்பா பேசல. தேவையில்லாம என் பின்னாடி சுத்துறது விட்டுட்டு ஆக வேண்டிய வேலையை பார் என்பது போல் கூறி விடுகிறார் பாக்யா.

அடுத்த காட்சியில் ராதிகா கேண்டினில் உட்கார்ந்து கொண்டு பாக்யாவிடம் காபி கேட்க காபியில் சுகர் இல்லை என காண்டாக பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் இன்னும் இரண்டு நாளில் மொத்த பணத்தையும் தரேன்னு சொடக்கு போட்டியே அதெல்லாம் உன்னால தர முடியாது இப்படி நான் குடிச்ச காபி டம்ளர் எடுத்துக்கொண்டு போய் கழுவ தான் லாக்கி என்பது போல் கூற அதற்கு பாக்கியா இன்னும் ரெண்டு நாள் இருக்கு என்ன வேணாலும் நடக்கலாம் என கூறுகிறார்.

ஆனாலும் ராதிகா பாக்யாவை கேவலப்படுத்துவது போல் கடைசில வந்து என்கிட்ட தான் நிப்ப இப்பவே சொல்லு ஜெக்கா வேண்டுமா பணமா வேணுமா நான் கொடுக்கிறேன் என கேலி செய்கிறார். அதெல்லாம் எதுவும் தேவையில்லை என்று தேங்க்ஸ் என பேசுகிறார் பாக்கியா. பிறகு அடுத்த காட்சியில் பாக்கியா கஷ்டப்பட்டு வேலை செய்த கணக்கு வழக்குகளை பார்த்து எட்டு லட்சம் இருப்பதாக ஜனியிலும் கூறிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் எழில் வருகிறார் இன்னும் 10 லட்சம் வேண்டும் என புலம்ப அதெல்லாம் ரெடி பண்ணிடலாம் அம்மா ரெண்டு நாள் இருக்கு என ஆறுதல் கூறுகிறார்.

உடனே எழில் சின்ன வேலை இருப்பதாக கூறிவிட்டு பாக்கியா இங்கிருந்து கிளம்புகிறார், தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது கோபி வந்து ரெண்டு நாள்ல கொடுக்கிறேன் சபதம் போட்டியே அதெல்லாம் உன்னால ரெடி பண்ண முடியாது என வாக்குவாதம் செய்கிறார். கோபி அந்த சமயத்தில் ராமமூர்த்தி வர அதான் இன்னும் இரண்டு நாள் இருக்குல்ல மூஞ்சில பணத்தை வீசுவா என் மருமகள் என கோபியிடம் ராமமூர்த்தி பேசுகிறார். பிறகு பாக்யாவிடம் அவன் பேசியது எதுவும் பெருசா ஏத்துக்காத அவன் எப்பவுமே இப்படித்தான் என்பது போல் கூறிவிடுகிறார் ராமமூர்த்தி.

அடுத்த காட்சியில் ஜெனி பெட்டில் அமர்ந்திருக்கும் பொழுது செழியன் வருகிறார் நாம் பங்குக்கு ஏதாவது காசு ரெடி பண்ண வேண்டும் என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.