பாக்கியா கொடுத்த காபியால் கோபிக்கு வரும் புதிய சிக்கல்.! இப்படி நக்கி குடிச்சா ராதிகா கிட்ட மாட்டி தான் ஆகணும்..!

baakiyalakshmi-july
baakiyalakshmi-july

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி பழனிச்சாமியை திட்டியதால் பாக்கியா கோபியை வெளுத்து வாங்க தேடிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கோபியை தானாக வந்து பாக்கியா என கூப்பிட உடனே ஏய் என பாக்கியா கோபியை பார்த்து மிரட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் நான் எங்க போன எப்படி போனா உனக்கு என்ன அத கேட்க நீ யார் உனக்கு எனக்கு என்ன இருக்கு இதான் லாஸ்ட்  இன்னொரு டைம் இந்த மாதிரி நடந்துக்கிட்ட அவ்வளவுதான் என்பது போல் மிரட்டி விட்டு செல்கிறார்.

பாக்கியா கோபியிடம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து விடுகிறார் ராதிகா. ராதிகா வந்து கோபியிடம் இப்ப சந்தோஷமா எப்ப பாரு பாக்கிய பின்னாடியே குட்டி போட்ட பூனை மாதிரியே சுத்துறீங்களே என ராதிகா கேட்க என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க என கேட்கிறார் உடனே அதெல்லாம் ஒன்னும் இல்ல இனியாவுக்கு எக்ஸாம் இந்த மாதிரி டயத்துல அவ கூட இல்லாமல் இப்படி சுத்துறாளே என கேட்டுக் கொண்டிருந்தேன் என கூற  அவங்க என்ன பண்ண உனக்கு என்ன நான் ஏதாவது சொல்லிட போறேன் கோபி அப்புறம் அசிங்கமாயிடும் என ராதிகா கோபியை திட்டுகிறார்.

அடுத்த காட்சியில் பாக்கியா சமைத்து அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் பழனிச்சாமி வருகிறார். என்னை அடி பிடிப்பது போல் தெரிகிறது கொஞ்சம் கிண்டி விடுங்க என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் கருவேப்பிலை கருவி விட்டது அடுத்த கருவேப்பிலை போட்டு பொரித்து எடுங்கள் எனவும் கூறுகிறார். பிறகு 20 நிமிடத்தில் அனைத்தும் ரெடியாகிவிடும் எனக் கூற பழனிச்சாமி நான் போய் பந்தியை பார்க்கிறேன் என கிளம்பி செல்கிறார்.

அடுத்த காட்சியில் ராதிகா கோபி இருவரும் வருகிறார்கள் அப்பொழுது சுதாகரிடம் சம்மந்தி  எங்க சொந்தக்காரர்களை அறிமுகப்படுத்துகிறேன் என  ராதிகாவை அறிமுகப்படுத்துகிறார்.  அப்பொழுது இவர்தான் கோபி ராதிகாவின் கணவர் என கூறியவுடன் அந்த பொண்ணு வேற மாதிரி சொல்லுச்சு இவங்க இப்படி சொல்றாங்களே என்ன குழப்பத்தில் இருக்கிறார். மேலும் ஜூஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது பாக்கியா ராதிகாவிடம் ஜூஸ் கொடுப்பதற்கு வருகிறார் அப்பொழுது வாட்டர் மிலன் ஆரஞ்சு மட்டும் தான் இருப்பதாக கூற உடனே ராதிகா ஆப்பிள் ஜூஸ் இல்லையா என வேண்டுமென்றே வம்பு வளர்க்கிறார்.

இதை பார்த்துக் கொண்டிருந்தார் பழனிச்சாமி அதுமட்டுமில்லாமல் சாரி மேடம் என்ன கூறிவிட்டு செல்லும்பொழுது சொடக்கு போட்டு கூப்பிடுகிறார் ராதிகா பிறகு ஜூசை எடுத்து வைக்கிறார் ஜூஸில் ஐஸ் கம்மியாக இருப்பதாக கூற நான் வேணும் என்றால் வேற போட்டுக் கொண்டு வருகிறேன் என கூற இல்லை வேண்டாம் எனக் கூறி விடுகிறார் ராதிகா. அதேபோல் இரவில் பிரியாணி ரெடி பண்ணி உள்ளார்கள் அதனை சாப்பிட்டு விட்டு அனைவரும் அருமையாக இருப்பதாக புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

அடுத்த நாள் காலையில் அனைவரும் காபி குடிக்கிறார்கள் அதனை குடித்து பார்த்து விட்டு காபி அருமையாக இருப்பதாக புகழ்ந்து தள்ளுகிறார்கள் அந்த சமயத்தில் கோபி மற்றும் ராதிகா வர எங்கள் உறவுக்காரர்கள் வருகிறார்கள் அவர்களிடமும் காபி கொடுங்கள் எனக் கூற உடனே காபியை எடுத்துக் கொண்டு பாக்கியா ராதிகா மற்றும் கோபியிடம் கொடுக்கிறார்.

அப்பொழுது காபியை எடுக்கும் பொழுது கோபி மூக்கு வழியாக காபியை முகர்ந்து ஒரு ரியாக்ஷன் செய்கிறார் அதனை ராதிகா பார்த்து விடுகிறார் அதுமட்டுமில்லாமல் கோபி ஆகா பேஸ்பேஸ் என புகழ்ந்து தள்ளுகிறார் அதையும் கவனிக்கிறார் ராதிகா இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது நாளை தான் கோபிக்கு மந்திரித்து விடப் போகிறார் ராதிகா.