18 லட்சத்தை வாங்கிக் கொண்டு வீட்டை விட்டுப் போக முடியாது எனக் கூறும் கோபி.! பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி எபிசோட்.

baakiyalakshmi july 11 episode
baakiyalakshmi july 11 episode

baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ராதிகா இரு வரும் ஆபிஸ் கிளம்பி செல்ல போகிறார்கள். அந்த சமயத்தில் பாக்யா சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் பொழுது இவர்கள் இருவரும் எதிரில் நிற்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சொடக்கு போட்டு சொன்னியே பணத்தை ரெடி பண்ணிட்டியா என கேவலமாக பேசுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நீ மட்டும் போறியா இல்ல உங்க பேமிலி எல்லாத்தையும் கூட்டிட்டு போறியா என ராதிகாவும் கேவலமாக பேசுகிறார்.

இந்த நிலையில் தற்போது பாக்யா ஒரு பத்து நிமிஷம் உங்களால எனக்காக இங்க இருக்க முடியுமா என கேட்க உங்க ஆபீஸ் டைம் வீணாகும் என்று தான் நான் நினைச்சேன் ஆனா நீங்க பேசின பேச்சுக்கு ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க ஒன்னும் குறைந்து போகாது என கூறிவிட்டு செழியன் எழில் இருவரையும் கூப்பிடுகிறார். அதுமட்டுமில்லாமல் இனியாயவிடம் தாத்தா பாட்டியை கூட்டிக்கொண்டு வா எனவும் கூறுகிறார்.

அனைவரும் வந்த பிறகு பாக்யா இந்த இடத்தில் வைத்து நான் சபதம் போட்டேன் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா என கேட்க சபதம் போட்டதெல்லாம் சரிதான் ஆனா உன்னால பணத்தை கொடுக்க முடியாது. அதுக்கு தானே இப்ப கெஞ்ச தானே இப்ப டைம் கேக்குற என கோபி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் இனிமேல் என்னால் உனக்கு சான்ஸ் தரவே முடியாது ராதிகாவை எவ்வளவு அசிங்கப்படுத்தின அவங்க வீட்டு ஆளுங்களை எப்படி அசிங்கப்படுத்தின அதனால உனக்கு இனிமே டைம் கிடையாது எனக் கூறுகிறார்.

ஆனால் பாக்கிய பணத்தை எடுக்க உள்ளே போகும்பொழுது வழி அந்த பக்கம் இல்லை இந்த பக்கம் நீ வெளில போ என்பது போல் கோபி கூற உடனே கொஞ்சம் இருங்க சார் ரொம்ப பேசாதீங்க என சொல்லிவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வந்து கோபியிடம் கொடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் உங்க பிசி டையத்துல இவ்வளவு பணத்தை உங்களால் எண்றது கஷ்டம் தான் ஆனாலும் எண்ணி பார்த்துக்கோங்க என பேசுகிறார்.

பணத்தை கொடுத்தவுடன் ராதிகா மற்றும் கோபிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது இது என்ன கள்ள நோட்டா 18 லட்சம் எவ்வளவு தெரியுமா என கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு ஏதேதோ பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் ராமமூர்த்தியும் ஏன் என் மருமகளால் பணம் கொடுக்க முடியாதுன்னு நினைச்சியா பணத்தை வாங்கிட்டு வீட்டை விட்டு வெளியே போடா என பேசுகிறார்.

ஆனால் கோபி பணத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போக முடியாது என்னால், அம்மா, அப்பா என் பிள்ளைகளை விட்டு விட்டு  வெளியே போக முடியாது என கூறுகிறார். அதற்கு பாக்கியா மற்றும் ராமமூர்த்தி இப்பதான் உங்களுக்கு பிள்ளைங்க இருப்பது ஞாபகம் வருகிறதா என்பது போல் திட்டுகிறார்கள் அனைவரும் மாறி மாறி கோபியை திட்டி கொண்டிருக்கிறார்கள் கோபி முழித்து கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.