Baakiyalakshmi : விஜய் டிவியில் பல எபிசோடுகளை கடந்து டிஆர்பி லிஸ்ட்டில் டாப்பில் இருக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இது ஒவ்வொரு நாளும் பல புதிய புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்கியா இங்கிலீஷ் கிளாஸ்க்கு செல்கிறார்.
அங்கு பழனிச்சாமி லோபிகா உடன் பேசிக் கொண்டிருக்கும்போது நேற்று லோன் விஷயமா பேங்க் போயிருந்தேன் ஆனால் அங்கு எனக்கு லோன் தரவில்லை. அந்த லோன் டிகிரி முடித்திருந்தால் மட்டும் தான் கிடைக்குமாம். நான்தான் காலேஜ் போகலையே எனக்கு அந்த லோன் கிடைக்கல அமிர்தா இல்ல ஜெனி இவங்க பேர்ல தான் லோன் எடுக்கணும் அப்படின்னு வருத்தமா சொல்றாங்க..
அதற்கு பழனிச்சாமி பேசாம நீங்களே காலேஜ் போய் படிச்சு உங்க பேர்ல லோன் வாங்கிடுங்க ஏன் மத்தவங்கள நம்பி நீங்க இருக்கணும் அப்படின்னு சொல்றாரு பாக்கியாவும் பழனிச்சாமி சார் சொன்னத கேட்டு யோசிக்கிறாங்க.. அப்புறம் பாக்கியாவும் எழிலும் இனியாவோட காலேஜுக்கு போறாங்க..
அங்க பாக்கியா எழில் கிட்ட நானும் காலேஜ் போனா எப்படி இருக்கும் எனக்கும் காலேஜ் படிக்கணும் போல ஆசையா இருக்குடா அப்படின்னு சொல்றாங்க. எழில் அம்மா உனக்கு காலேஜ் படிக்கணும்னு ஆசையா இருக்கா அப்ப பேசாம நீயும் இந்த காலேஜ்லேயே சேர்ந்திடுன்னு சொல்றாரு. வீட்ல எல்லாம் என்ன சொல்லுவாங்கன்னு தெரியல.
அப்படின்னு கேக்குறதுக்கு அதெல்லாம் நம்ம வீட்டு ஆளுங்க தான சொன்னா புரிஞ்சிப்பாங்கன்னு சொல்லிட்டு எழில் பாக்யாவோட ஸ்கூல் சர்டிபிகேட் எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு அட்மிஷன் பார்ம் வாங்கிட்டு வந்து ஃபில் பண்ணி பாக்கியா கிட்ட சைன் கேக்குறாரு பாக்யாவும் ஆசையா சைன் போட்டு தராங்க எழில் காலேஜ்ல போய் குடுத்துட்டாரு..
வீட்டுக்கு வந்த பாக்கியா காலேஜ் சேர்ந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தெரியாம 40 வயசுல ஒருத்தவங்க அவங்க பையன் படிக்க காலேஜ்லயே சேர்ந்து படிச்சிட்டு இருக்காங்க அப்படின்னு ஒரு கதை சொல்றாங்க.. இதைக் கேட்டு ஜெனியும் அமிர்தாவும் முழிக்கிறாங்க அப்புறம் எழில் ஏம்மா சுத்தி வளைக்கிற நேரா விஷயத்தை சொல்லுமான்னு கேட்கிறார்.
பாக்கியா இனியா படிக்கிற காலேஜ்ல நானும் சேர்ந்து இருக்கேன்னு சொல்றாங்க. இதை கேட்டு எல்லாம் முதல்ல ஷாக் ஆகுறாங்க அப்புறம் பாக்யாவோட மாமனார் ராமமூர்த்தி உனக்கு இருக்கிற வேலைக்கு உன்னால காலேஜ் போக முடியுமான்னு கேக்குறாரு..
அதெல்லாம் நான் போவேன் மாமான்னு சொல்றதும் உன்னால முடியும்னா நீ ஆசைப்பட்டதை பண்ணுமான்னு சம்மதம் சொல்றாரு வீட்ல உள்ள எல்லாருக்குமே பாக்கியா காலேஜ் போறதுக்கு சம்மதம் சொல்லிட்டாங்க ஆனா இனியா மட்டும் இதை கேட்டு ரொம்ப வருத்தப்படறாங்க இதோட இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது நாளைய எபிசோடில் இனியா என்ன சொல்ல போகிறார் என்பதை பார்ப்போம்..