கேரளா ட்ரிப்புக்கு நாங்க மூணு பேரும் போறோம் கோபியை தீட்டி அனுப்பிய ஈஸ்வரி.. பரபரப்புக்கு பஞ்சமில்லாத பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi : இன்றைய எபிசோடில் இனியா கோபி கிட்ட போனில் அம்மா கூட தான் கேரளா ட்ரிப் போறேன் என்று சொல்வதைக் கேட்டு கோபி பாக்கியா கூட எல்லாம் போறது சேஃப் இல்ல நீ ஒரு வாரம் ட்ரிப்ப தள்ளி வைய் என்று சொல்கிறார்  கோபி. நாங்க ட்ரிப்புக்கு போகதாம் போறோம் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார்.

பிறகு கோபி நேராக வீட்டிற்கு வந்து இனியாவிடம் பாக்யாவை நம்பி எல்லாம் போகாத என்று சொல்கிறார் பிறகு பாக்யாவை பார்த்து உன்ன நம்பி என் பொன்னையும் அம்மாவையும் அனுப்பி வைக்க முடியாது என்று சொல்ல பதிலுக்கு பாக்யா அத பத்தி உங்களுக்கு என்ன கவலை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கின்றனர்.

ஈஸ்வரி உன்னால கூட்டிட்டு போக முடியல நாங்க எப்படியோ போறோம் உனக்கு என்ன அத பத்தி கவலை என்று அவரை திட்டி வெளிய அனுப்புகின்றனர். அடுத்து கோபி ராதிகா வீட்டிற்கு போனதும் ராதிகா உங்க அம்மா கிட்ட பேசினீங்களா வரேன்னு சொன்னாங்களா என்று கேட்க, கோபி அவங்கள போக வேனான்னு சொன்ன ஆனா அவங்க கேக்கல அந்த இடியட்ட நம்பி போறாங்க என்று சொல்கிறார்.

இதைக் கேட்டு ராதிகா அப்ப நீங்க மயூ ஃபங்ஷனுக்கு உங்க அப்பா அம்மாவை கூப்பிட போகலையா கேரளா ட்ரிப்புக்கு போக வேணாம்னு சொல்ல தான் போனீங்களா என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறார் இதனால் ராதிகா கோபப்பட்டு ரூமுக்குள் போகிறார் பிறகு கோபி ராதிகா கிட்ட எங்க அப்பா அம்மா எப்படி வருவாங்க என்று கேட்க நான் உங்க வீட்டு பங்க்ஷன்க்கு எல்லாம் வரேல்ல..

இந்த ஃபங்ஷனுக்கு உங்க அப்பா அம்மா கண்டிப்பா வந்தே ஆக வேண்டும் என்று ராதிகா சொல்லிவிட்டார் பிறகு கோபி திரும்ப பாக்யா வீட்டிற்கு சென்று அவங்க அப்பா அம்மாவை மயூ ஃபங்ஷனுக்கு கூப்பிடுகின்றனர் அவர்கள் நாங்கல்லாம் ராதிகா வீட்டுக்கு வர முடியாது என்று சொல்லி கோபியை அனுப்பி வைத்து விடுகின்றனர்.

பிறகு ராமமூர்த்தி அந்த பாப்பா இங்க இருந்தப்ப தாத்தா தாத்தா என்று அன்பா பேசிட்டு இருந்தது அந்தப் பாப்பாக்காக நம்ப போயிட்டு வரலாம் என்று ஈஸ்வரியிடம் கேட்கிறார் பாக்யாவும் மையூக்காக போயிட்டு வாங்க அத்தை என்று சொல்ல ஈஸ்வரி சரி போகலாம் என்று சொல்லிவிட்டார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.