நிறைவேறாமல் போன பாக்யாவின் ஆசை..! பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட்

baakiyalakshmi july 28
baakiyalakshmi july 28

Baakiyalakshmi : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி தொடர். இது தொடர்ந்து டி ஆர் யில் நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவை காலேஜ் சேர்ப்பதற்காக வந்திருக்கிறார் அங்கு ஒரு வகுப்பறைக்குள் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு போர்டில் பாக்கியலட்சுமி என தன் பெயரை எழுதி அழகு பார்க்கிறார்.

அப்புறம் பாக்கியா இனியா கிட்ட வந்து எவ்வளவு பெரிய காலேஜ் சூப்பரா இருக்கு எல்லா இடத்தையும் சுத்தி பார்த்தேன். நான் காலேஜ் போகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா அது நடக்கல உன்னால இப்ப நான் காலேஜ பார்க்கிறேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்படின்னு பேசிட்டு கிளம்பிடுறாங்க. அப்புறம் பாக்கியா உடனே அவங்களோட இங்கிலீஷ் கிளாசுக்கு போறாங்க..

அங்க லோபிக்கா பழனிச்சாமி எல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்க அப்ப பாக்கியா வந்ததும் லோபிக்கா என்ன லேட்டுன்னு கேட்க இனியாவை காலேஜ் சேர்க்க போயிருந்தேன் காலேஜ் பெருசா அழகா இருந்ததுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க லோபிக்கா பாக்கியா கிட்ட ஏன் நீங்க காலேஜ் படிக்கல அப்படின்னு கேட்க நான் பிளஸ் டூல நல்ல மார்க் எடுத்த அப்ப எங்க அப்பா இறந்துட்டாரு..

அதனால என்னால காலேஜ் படிக்க முடியலன்னு சொல்றாங்க பழனிச்சாமி உடனே என் கதையும் அப்படித்தான் நானும் பிளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம் எங்க அப்பா தவறிட்டாரு உடனே நான் தொழில் கத்துக்க ஆரம்பிச்சுட்டேனு சொல்றாரு. இந்த இங்கிலீஷ் கிளாஸ் முடிஞ்சதும் அடுத்து பாக்கியா கேன்டீனுக்கு போறாங்க. அங்கு செல்வி கிட்டயும் இனியாவ காலேஜ் சேர்க்க போயிருந்தேன்.

காலேஜ் அவ்வளவு அழகா இருந்ததுன்னு சொல்றாங்க.. செல்வி ஏங்க அக்கா நீ படிக்க போறியா அப்படின்னு கேக்குறதுக்கு என்ன என்னால படிக்க முடியாதுன்னு நினைக்கிறியான்னு சொல்ல உன்னால முடியும் ஆனா உனக்கு அதுக்கான நேரம் இல்ல அக்கா அப்படின்னு சொல்றது பாக்கியா ஆமா காலைல எழுந்து வீட்ல சமைச்சுட்டு இங்கிலீஷ் கிளாஸ் போயிட்டு கேன்டீன பாத்துட்டு டெலிவரி கொடுத்துட்டு சமையல ஆர்டர் வந்தா பார்க்கணும் இதுக்கே நேரம் சரியா போயிடும்..

எங்க காலேஜ் போய் படிக்கிறது அப்படின்னு சொல்றாங்க. நைட்டு செழியன் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுராரு ஜெனி என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க எப்பவும் நான் தூங்கினதுக்கு அப்புறம் தான் வருவீங்க வர வர ரொம்ப மாறிட்ட வீட்டுக்கு மொத்த பணத்தையும் தரேன்னு சொல்ற அப்புறம் ஐந்து லட்சம் எடுத்து கொடுத்த, இப்ப இனியா காலேஜ் பீஸ் நான் கட்டடுமான்னு கேக்குற இப்பதான்..

எனக்கு புடிச்ச மாதிரி நீ இருக்க செழியா அப்படின்னு சொல்றாங்க இப்படி பேசிக்கிட்டு இருக்கும் போது ஜெனி வளைகாப்பு முடிஞ்சது ரெண்டு மாசம் அம்மா வீட்டுக்கு போயிடுவேன்னு சொல்றாங்க அதுக்கு செழியன் நீ அம்மா வீட்டுக்கு எல்லாம் போவேனா இங்கேயே இரு ஜெனின்னு செழியன் சொல்றாரு ஜெனியும் கடைசியா சரி இங்கயே இருக்க அப்படின்னு சொல்றாங்க இதோட இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது