காலேஜில் இங்கிலீஷ் பேசி அசத்திய பாக்கியா.. அசிங்கப்பட்டு நின்ற கோபி.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

baakiyalakshmi
baakiyalakshmi

Baakiyalakshmi serial : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி  தொடர்.. இன்றைய எபிசோடில் பாக்கியலட்சுமி இனியாவின் காலேஜ் அட்மிஷனுகாக சிட்டியில் உள்ள ஒரு பெரிய காலேஜ்க்கு வந்துள்ளனர். இனியாவை அங்க சேர்க்க பாக்கியா அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்குறாங்க.

இனியா குடும்மா நா பில் பண்ற அப்படின்னு கேட்க பாக்கியா நானே ஃபில் பண்றேன் எனக்கும் ஃபார்ம் ஃபில் பண்ண தெரியும் அப்படின்னு சொல்லிட்டு பாக்கியா ஃபில் பண்றாங்க. அப்புறம் இனியா கிட்ட உங்க அப்பா பேரு எழுதுவதை நினைச்சா தான் எனக்கு வெறுப்பா இருக்கு அப்படின்னு சொல்லிட்டு ஃபில் பண்ணி உள்ள போய் குடுத்துட்டு ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பீஸ்சும் கட்டுறாங்க..

இதை பார்த்து இனியா ஷாக்காகி எப்படிமா இவ்வளவு பணம் உனக்கு அப்படின்னு கேக்குறதுக்கு பாக்கியா உன் கல்யாணத்துக்காக கொஞ்சம் கொஞ்சமா சீட் போட்டு சேர்த்து வைத்திருந்தேன் அந்த பணம்தான் இது அப்படின்னு சொல்றாங்க அதுக்கு இனியா அந்த பணத்தை இப்ப காலேஜுக்கு கட்டிட கல்யாணத்துக்கு என்ன பண்ணுவ அப்படின்னு கேட்க பாக்கியா..

அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம் அப்படின்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் கோபி இனியாக்கு காலேஜ் பீஸ் கட்ட பிரண்டு கிட்ட கடன் வாங்கிட்டு காலேஜுக்கு வந்து இனியா கிட்ட வாம்மா போய் பீஸ் கட்டலாம் அப்படின்னு கேட்க ஏன் கட்டணும் அம்மா பீஸ் கட்டிட்டாங்னு இனியா கோபி கிட்ட சொல்றாங்க கோபி உடனே நான் தானே உனக்கு பீஸ் கட்றேன்னு சொன்ன அப்படின்னு கேட்பதற்கு இனியா யார் கட்டுனா என்ன விடுங்கன்னு சொல்றாங்க..

அப்புறம் பிரின்சிபல் இனியாவ கூப்பிடுறாங்க இனியா பாக்கியா எல்லாம் உள்ள போறாங்க அதுக்கு கோபி பாக்யா கிட்ட நீ எங்க போற அங்க இங்கிலீஷ்ல கேள்வி கேட்பாங்க உனக்கு பேச தெரியாது நீ இரு இனியா கூட நான் போறேன் அப்படின்னு சொல்றாரு ஆனா பாக்கியாவும் உள்ள போறாங்க பாக்கியா முன்னாடியே வீட்ல ஜெனிகிட்டயும் எழில்கிட்டயும் பிரின்சிபல் கிட்ட எப்படி இங்கிலீஷ்ல பேசறதுனு கத்துகிட்டு வந்திருக்காங்க..

அதைப்போல பிரின்சிபல் கிட்ட உள்ள தைரியமா இங்கிலீஷ்ல பாக்கியா சூப்பரா பேசி அசத்துறாங்க இதை பார்த்து கோபியும் இனியாவும் ரொம்ப ஷாக் ஆகுறாங்க.. அப்புறம் வெளியே வந்த இனியா பாக்கியாவ ரொம்ப ஆச்சரியமா பாத்து எப்படிம்மா இதெல்லானு கேட்க அதெல்லாம் அப்படி தாண்டின்னு சொல்லிட்டு கெத்தா போறாங்க பாக்கியா.. இதோட இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.