மயூ தான் முக்கியம்.. இனியா ஆசையில் மண்ணள்ளி போடும் கோபி – பரபரப்புக்கு பஞ்சமில்லாத பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi : இன்றைய எபிசோடில் ஜெனி வளைகாப்பு முடிஞ்சு அவங்க அம்மா வீட்டுக்கு போக மனசு இல்லாமல் எல்லோரிடமும் அழுதுகிட்டே சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்து மையூ பெரிய பொண்ணு ஆயிட்டா என ராதிகாவும் அவங்க அம்மாவும் சந்தோஷத்தோட கோபி கிட்ட சொல்றாங்க..

இதை கேட்டு கோபி ரொம்ப சந்தோஷப்படுறாரு அப்புறம் இந்த மாதிரி டைம்ல ரொம்ப ஹெல்த்தியா சாப்பிடணும் என்று மையூக்கிட்ட கோபி சொல்றாரு.. பிறகு நைட் செழியன் ஜெனி போன் பண்ணுவாங்களா என எதிர்பார்த்து மொட்டை மாடியில் காத்திருக்கிறார்.

அப்பொழுது மாலினி செழியனுக்கு போன் பண்ணி என்ன பண்றீங்க என கேட்க டெரஸ்ல தனியா தான் நின்னுட்டு இருக்கேன் என்று சொல்ல நானும் இங்க தனியா தான் இருக்கேன் வரீங்களா என்று மாலினி செழியன் கிட்ட கேக்குறாங்க..  பிறகு எழில் வந்து ஜெனி போன் பண்ணாங்களா என கேட்கிறார் பண்ணவில்லை என்று சொல்ல, நீயே போன் பண்ணி பேசு என்று சொல்வதும் சரி என ஜெனிக்கு போன் பண்ணுகிறார்.

ஆனால் அப்பொழுது ஜெனி அமிர்தாவுக்கு வீடியோ கால் பண்ணி பாக்யா, ஈஸ்வரி போன்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர் பேசி முடித்துவிட்டு செழியன் கிட்ட பேசலாம் என்று நினைக்கும் பொழுது ஜெனியின் அம்மா வந்து சாப்பிடலாம் வா என்று சொல்வதும் போன வச்சிட்டு போயிட்டாங்க செழியன்.

இதனால் ஊர்ல இருக்கிற எல்லார்கிட்டயும் பேச டைம் இருக்கும் என்கிட்ட பேச டைம் இருக்காது என நினைக்கிறார். பிறகு ராதிகாவின் அம்மா அண்ணன் கிட்ட சொன்ன வரேன்னு சொல்லி இருக்கான் நாளைக்கு சாயந்திரம் நல்ல நேரம் இருக்கு அப்ப மையூக்கு தண்ணி ஊத்திக்கலாம் என்று சொல்ல ராதிகா கோபி கிட்ட நாளைக்கு எங்கேயும் போகக்கூடாது.

இங்க தான் இருக்கணும் என்று சொன்னவுடன் கண்டிப்பா இங்க தான் இருப்பேன் என கோபி முதலில் சொல்லுகிறார் அப்புறம் தான் யோசித்துப் பார்க்கிறார் நாளைக்கு கேரளா போக வேண்டுமே இனியா கூட என்று சொன்னவுடன் ராதிகா கோபப்படுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..