Baakiyalakshmi : விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. தொடர்ந்து டிஆர்பிலும் முன்னிலையில் வகிக்கிறது. இந்த சீரியலுக்கு இல்லதரசிகளிடையே நல்ல வரவேற்பு இருக்கின்றன. ஒரு பெண் தனது சுயமரியாதையுடன் எப்படி குடும்பத்தை நடத்துகிறார் என ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் இனியா விஸ்காம் தான் படிப்பேன் என உறுதியாக இருக்கிறார் அதற்கு வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்தனர் ஆனால் இனியாவின் அப்பா கோபி மட்டும் நீ பிபிஎம் தான் படிக்கணும் என அதற்கான அப்ளிகேஷன் வாங்கி வந்துள்ளார். இதற்கு பாக்கியலட்சுமி வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இனியா அவளுக்கு பிடிச்சதே படிக்கட்டும் அப்படின்னு எழில் ராமமூர்த்தி கோபியிடம் சண்டை போடுகின்றனர். கோபியும் பதிலுக்கு எழில் கிட்ட நான் சொன்ன மாதிரி நீ இன்ஜினியரிங் முடிச்சிருந்தா உனக்கு நல்ல எதிர்காலம் இருந்திருக்கும் ஆனால் படம் எடுக்கிறேன்னு சொல்லி இப்ப ஒன்னும் இல்லாம உக்காந்து இருக்கனு எழில பாத்து சொல்றதுக்கு பாக்கியா அதெல்லாம் அவன் படம் எடுப்பான் நீங்க கிளம்புங்கன்னு சொல்லிடுறாங்க.
அப்புறம் கோபி பாக்கியாவ தனியா பார்க்கும்போது நான் சொல்ற கோர்ஸை இனியாவை நீ படிக்க விட மாட்டேங்குறனு கேட்க பாக்கியா நீங்க சொல்றத படிக்க கூடாதுனு நாங்க சொல்லல இனியா விருப்பத்துக்கே அவ படிக்கிறது தான் நல்லது. இப்படி கோபியும் பாக்கியாவும் பேசிக்கிட்டு இருக்குறத ராதிகா பார்த்துடுறாங்க அப்புறம் கோபி கிட்ட ராதிகா பாக்யா கிட்ட உங்களுக்கு என்ன பேச்சுன்னு கோவமா கேக்குறதுக்கு நான்..
இனியா படிப்பு விஷயமா தான் பேசிட்டு இருந்த நான் பிபிஎம் படி அப்படின்னு அப்ளிகேஷன் வாங்கிட்டு போய் தரேன் அவ விஸ்காம் தான் படிப்பேன்னு சொல்லிட்டு இருக்கா.. அத பத்தி தான் பாக்கியா கிட்ட பேசிட்டு இருந்தேன்னு சொல்றதும் ராதிகா புரிஞ்சிகிட்டு சரிங்க அப்படின்னு சொல்லிட்டாங்க.. அடுத்த நாள் காலையில இனியா காலேஜ் அட்மிஷனுக்கு கிளம்பிட்டாங்க வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிட்டு பாக்யாவும் இனியாவும் காலேஜுக்கு போறாங்க.. கோபியும் இனியா காலேஜ் பீஸ் நம்ம தான் கட்டணும்னு..
சொல்லி அவரும் கிளம்புறாரு அவர் அக்கவுண்ட்ல பணம் இருக்கான்னு பார்க்கும்போது அக்கவுண்ட்ல பணம் இல்ல கோபி என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறாரு அப்ப ராதிகாவும் கோபி கிட்ட உங்க பொண்ணு படிப்பு செலவுக்கு நீங்க பணம் கட்டுங்க அத பத்தி எல்லாம் நான் ஒன்னும் கேட்க மாட்டேன் அப்படின்னு சொல்றாங்க பாக்யாவும் இனியாவும் காலேஜ் வாசல்ல இறங்கியாச்சு இவ்வளவு பெரிய காலேஜ் அழகா இருக்குல்ல அப்படின்னு பாக்கியா சொல்லிட்டு காலேஜ் உள்ள போறாங்க இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..