பொண்டாட்டிய பிரிய போறோம் என்ற கவலை இல்லாமல் மாலினியுடன் சேட் செய்து கொண்டிருக்கும் செழியன்.. நோட் பண்ணிய பாக்யா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi :  இன்றைய எபிசோடில் ஜெனியின் வளைகாப்புக்கான வேலைகளை எல்லோரும் செய்து வருகின்றனர். அப்போது எழில் செழியன் இந்நேரம் அழுதுகிட்டு இருப்பானு நினைச்சேன் ஆனா அவன் கூலா இருக்கான் என்று சொல்ல ஈஸ்வரி ஒவ்வொரு பொண்ணும் வளைகாப்பு முடிந்து வீட்டுக்குப் போகும்போது அவங்க புருஷனுக்கு கஷ்டமா தான் இருக்கும்.

மேலும் ஈஸ்வரி எழில் கிட்ட உனக்கும் இப்படி ஒரு நாள் நடக்கும் என சொல்கிறார். பிறகு ஜெனி அம்மா வரிசை எடுத்துக் கொண்டு வராங்க அடுத்து ஜெனியும் வளைகாப்புக்கு ரெடியாகி மேலே இருந்து கீழ் வராங்க, பிறகு இந்த வளைகாப்புக்கு பழனிச்சாமியும் அவங்க அம்மாவ கூட்டிட்டு வராரு.

அடுத்து ஃபங்ஷனை ஆரம்பிக்கலாமா என்று கேட்க ஈஸ்வரி கோபி இன்னும் வரலையே என்று சொல்லிவிட்டு பிறகு நலுங்கு வைக்கலாம் என்று ஈஸ்வரி ஆரம்பிக்கிறார் அவரைத் தொடர்ந்து பாக்யா, செல்வி, அமிர்தா, பழனிச்சாமி போன்ற எல்லோரும் ஜெனிக்கு நலுங்கு வைத்து வளையல் போடுகின்றனர்.

அப்போது அங்கு கோபியும் ராதிகா மற்றும் மயுவை அழித்துக் கொண்டு வருகிறார். வந்ததும் பழனிச்சாமியை பார்ப்பதால் கோபி இங்கேயும் இந்த லேம் போஸ்ட் வந்துட்டானா என சொல்கிறார் இதைக் கேட்டு ராதிகா வந்த வேலையை மட்டும் பாருங்க தேவையில்லாம பழனிச்சாமி என்ன பண்றாரு பாக்யா என்ன பண்றாங்க அதெல்லாம் நீங்க பார்க்க கூடாது என வான் பண்ணுகிறார்.

பிறகு இவர்களும் நலுங்கு வைக்கின்றனர். ஆனால் செழியன் கவனம் மட்டும் போனில் இருக்கின்றன. மாலினி செழியனுக்கு தொடர்ந்து மெசேஜ் பண்ணி கொண்டு இருக்கிறார். இதைப் பார்த்து பாக்யா ஏன் போனை பார்த்துட்டு இருக்க என்று சொல்கிறார். பிறகு வளைகாப்பு முடிஞ்சு பழனிசாமி, கோபி, லோபிக்கா போன்றோம் கிப்ட் கொடுக்கின்றனர்.

அடுத்து அனைவரும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஒன்றாக அமர்கின்றனர் அப்பொழுது பழனிச்சாமி அம்மா சாப்பாடு ரொம்ப அருமையா இருந்துச்சு என்றும் சொல்கிறார். பின்பு ஜெனி அவங்க அம்மா வீட்டுக்கு போக கிளம்பி கீழ வராங்க, ஜெனி ஓட அம்மா வீட்டுக்கு போலாமா என்று கேட்க ஜெனி அழுதுகிட்டே நான் இங்கே இருந்துட்டுமா என்று கேட்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.