Baakiyalakshmi : குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சீரியல் பாக்கியலட்சுமி தொடர். இதில் தற்போது இனியா பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார் அதற்காக பாராட்டு விழா எல்லாம் நடைபெற்றது ஆனால் இதில் பாக்கியா கலந்து கொள்ளவில்லை அவர் கேட்டரிங் செய்ய போன இடத்தில் ஒரு பிரச்சினை.
அதை முடிந்துவிட்டு வரும் போது இனியா அம்மா மேல ரொம்ப கோபத்தில் இருக்கிறார். வீட்டுக்கு வந்தும் இனியா அவங்க அம்மா கிட்ட பேசாம இருக்காங்க. பின் இனியா பாக்கியா கிட்ட என்ன விட உன் கெட்டரிங் தான் உனக்கு பெருசா இருக்குன்னு கேக்குறதுக்கு. இல்லம்மா அங்க ஒரு பிரச்சனை ஆயிடுச்சு அதனால தான் என்னால வர முடியலனு..
அந்தப் பிரச்சனையை பாக்கியா கூற பின்பு இனியாவும் பாக்கியாவும் சமாதனமாகிட்டாங்க.. இன்னொரு பக்கம் அமிர்தா எழில் கிட்ட நம்ம இன்னொரு குழந்தை பெத்துகிறது பத்தி கேட்டேனே என்ன ஆச்சு அப்படின்னு கேட்கிறதுக்கு அதெல்லாம் வேணாம் நமக்கு நிலா மட்டும் போதுனு எழில் சொல்றாரு ஆனா அமிர்தா..
இல்லைங்க எல்லாரும் மாத்தி மாத்தி இனிமே கேள்வி கேட்பாங்க அப்படின்னு சொல்ல மத்தவங்களுக்காக நம்ம குழந்தை பெத்துக்க முடியாது நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள எப்படி குழந்தையைப் பற்றி யோசிக்கிறது. வேணுன்னா ஒரு வருஷத்துக்கு அப்புறம் அதை பத்தி யோசிச்சுக்கலாம்னு எழில் அமிர்தா கிட்ட சொல்றாரு..
நைட்டு தூங்கும்போது பாக்கியா இனியா கிட்ட எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ சாதனை பண்ணி இருக்க உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை சொல்லு அம்மா நான் உன்னை படிக்க வைக்கிறன்னு சொல்ல இனியா எனக்கு “விஸ்காம்” படிக்கணும்னு ஆசை.. அப்படின்னு சொல்ல உன் இஷ்டம்மா நல்ல காலேஜா பார்த்து படிக்கலாம் அப்படின்னு சொல்றாங்க இனியா இதை கேட்டு ரொம்ப மகிழ்ச்சியாகுறாங்க இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.