இனியாவுக்காக நீங்க ஏன் போகணும் கோபியை கேள்வி கேட்கும் ராதிகாவின் அம்மா. கோபி கொடுத்த தரமான பதில்.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi : இன்றைய எபிசோடில் இனியா கோபி கிட்ட அம்மா இங்கிலீஷ் கிளாஸ் போகல அதனால பழனிச்சாமி அங்கிள் பார்க்க வந்திருக்காரு ரெண்டு பேரும் கிளோஸ் பிரண்ட் இல்லையா என்று சொல்வதற்கு ரெண்டு பேரும் என்ன சின்ன வயசுல இருந்தா ஒண்ணா படிச்சாங்க ரெண்டு மூணு மாசமா தான தெரியும்..

இதுக்கே இவ்வளவு ஓவரா பண்றாங்க என்று கோபி சொல்லுகிறார். அடுத்து காலேஜில் இனியா பாக்யாவிடம் எனக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்து இருக்காங்க கேரளா வரைக்கும் ரோடு ட்ரிப் போகணும் அங்க போகும்போது நம்ம பார்க்கிற விஷயங்கள் அப்சர்ப் பண்ணி நோட் பண்ணனும் என சொல்கிறார்.

இதைக் கேட்டு பாக்யா நல்ல அசைன்மென்ட்டா இருக்கே எனக்கெல்லாம் இந்த மாதிரி கொடுக்கிறது இல்லை நீ போய்ட்டு வா என சொல்கிறார். பிறகு இனியா நான் அப்பாகிட்ட சொல்லி இருக்கேன் அவர் கூட கார்ல போலாம்னு இருக்கேன் என்று சொல்வதற்கும் சரி என்று பாக்யா சொல்லிவிட்டார் பிறகு கோபி அங்கு இனியாவை பிக்கப் பண்ண வருகிறார்.

அப்போது இனியா கோபி கிட்ட நான் ஒரு அசைன்மென்ட் சொன்னேன்ல டாடி எப்ப போலாம் என்று கேட்கிறார் அதற்கு கோபி வர ஃப்ரைடே ஜெனிக்கு வளைகாப்பு இருக்கு அதனால அடுத்த நாள் காலையில நம்ம போகலாம் என்று சொல்கிறார் இனியா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.பிறகு நைட் டின்னர் சாப்பிடும் பொழுது ராதிகாவிடம் கோபி காலேஜ்ல இனியாவுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்திருக்காங்க..

கேரளா ட்ரிப் போகணும் அதனால் நானும் இனிமையாவும் போலான்னு இருக்கோம் என்று சொல்வதற்கு ராதிகா இத பத்தி இதுக்கு முன்னாடி நீங்க என்கிட்ட சொல்லவே இல்லையே என்று கேட்க, நான் ஏன் சொல்லணும் இனியா கேட்டா சரின்னு சொல்லிட்டேன் என்று சொல்கிறார். அடுத்து ராதிகாவின் அம்மா நீங்க பண்றதே சரியில்ல மாப்பிள்ளை எப்ப பாத்தாலும்..

உங்க பசங்கள பத்தி மட்டும் யோசிச்சுகிட்டு இருக்கீங்க, இப்ப இனியாவை அழைச்சிட்டு போகணுன்னு சொல்லுவீங்க அடுத்து செழியனுக்கு குழந்தை பிறக்கும் அத பாக்க அங்க போவீங்க.. இதெல்லாம் சரி இல்லை என்று கேட்க கோபி கோவப்பட்டு என் பசங்களுக்கு ஒன்னுனா நான் போவேன் அது என்னோட கடமை என வேகமாக பேசிவிட்டு பாதி சாப்பாட்டில் இருந்து எழுந்து சென்றுள்ளார்.

பிறகு பாக்கியலட்சுமி வீட்டிற்கு முன்பு நின்று இனியாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார் இதை பார்த்த ராதிகாவின் அம்மா உடனே ராதிகாவிடம் வந்து இப்பவும் கோபி இனியா கிட்ட தான் பேசிகிட்டு இருக்காரு என்று சொன்னவுடன் ராதிகா கோபப்படுகிறார். பிறகு கோபி வந்ததும் ராதிகா அம்மா பேசினதுக்கு சாரி என்று கேட்கிறார்..

நீங்க எங்க கூட அதிகமா டைம் ஸ்பென்ட் பண்றதே இல்ல உங்க பசங்க கூட தான் அதிகமா டைம் ஸ்பென்ட் பண்றீங்க அந்த கோவத்துல தான் அம்மா அப்படி பேசினாங்க என்று சொல்லுவதற்கு கோபி எனக்கு இனியா, செழியன், எழில், மயூ நாலு பேருமே ஒன்றுதான் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.